அழிவின் விளிம்பில் கிண்ணியா பிரதேசம்

0 882
  • கியாஸ் ஷாபி
    கிண்ணியா

ஒரு ­மாத காலத்­துக்குள் கிண்­ணியா பிர­தேச பண்­ணை­யா­ளர்­க­ளுக்கு சொந்­த­மான 28 ஆயிரம் மாடுகள் உயி­ரி­ழந்­துள்ள செய்­தி­யா­னது பல­ரையும் ஆச்­ச­ரி­யத்­துக்­குள்­ளாக்­கி­யி­ருப்­ப­தோடு, கால்­நடை பண்­ணை­களின் எதிர்­கால இருப்புக் குறித்­த  ­சந்­தேகம் கால்­நடை வளர்ப்­பா­ளர்­களை மாத்­தி­ர­மன்றி ஒட்­டு­மொத்த கிண்­ணி­யா­வையும் அதிர வைத்­தி­ருக்­கி­றது.

2018 டிசம்பர் 1 ஆம் திக­தி­யி­லி­ருந்து டிசம்பர் 31 ஆம் திகதி வரை­யான காலப் பகு­திக்­குள்ளே இந்த மோச­மான அனர்த்தம் நிகழ்ந்­துள்­ளது.

இந்த மாடு­க­ளுக்கு நிரந்­த­ர­மான மேய்ச்சல் தரை ஒன்று இல்­லாத கார­ணத்­தினால் தற்­கா­லி­க­மா­க ­கந்­தளாய் சீனி ஆலை, கண்­டல்­காடு, கல்­ல­ரப்பு, சாவாறு, சுண்­டி­யாறு, செம்­பி­மோட்டை மற்றும் கங்கை போன்ற காட்­டுப் ­பி­ர­தே­சங்­களில் விடப்­பட்­டி­ருக்­கின்­றன. புற்கள், செடிகள் இல்­லாத இந்த காட்டுப் பிர­தே­சங்­களில் மாடு­க­ளுக்கு போதி­ய­ளவு உணவு கிடைக்­கா­மை­யி­னாலே இவ்­வாறு இறந்­துள்­ள­தாக பண்­ணை­யா­ளர்கள் கவலை தெரி­விக்­கின்றனர்.

ஒவ்­வொரு வரு­டமும் டிசம்பர் மற்றும் ஜன­வரி மாதங்­களே மாடுகள் கன்று ஈனு­வ­தற்­கான பரு­வ­கா­ல­மாகும். மாடு­க­ளுக்கு போதி­ய­ளவு உணவு கிடைக்க வேண்­டிய கர்ப்ப காலத்தில் உணவு கிடைக்­காத படியால் இவ்­வாறு கர்ப்பம் தரித்த மாடு­களும், கன்று ஈன்ற பின்னர் தாயும் கன்­று­க­ளுமே அநி­யா­ய­மான முறையில் இறந்­தி­ருக்­கின்­றன. வருடம் தோறும் ஒக்­டோபர் மாதம் ஆரம்­பத்தில் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை­யோடு, வேளாண்மை மற்றும் சேனைப் பயிர்ச்­செய்கை ஆரம்­பித்­து­விடும். இந்தக் காலப்­ப­கு­திக்குள் அதா­வது, ஒக்­டோ­ப­ரி­லி­ருந்து பெப்­ர­வரி மாதம் வரை சுமார் ஐந்து மாதங்கள் கால்­ந­டை­களை காட்டுப் பகு­திக்குள் கொண்­டு­செல்ல வேண்­டிய நிர்ப்­பந்­தத்­துக்கு பண்­ணை­யார்கள் ஒவ்­வொரு வரு­டமும் ஆளா­கின்­றனர்.

இந்த விடயம் குறித்து கிண்­ணியா பிர­தேச கால்­நடை வளர்ப்­பாளர் சங்­கத்தின் செய­லாளர் ஏ.சி.முகம்­மது முபாரக் கருத்து தெரி­விக்­கையில், நாட்டில் நில­விய யுத்த காலப்­ப­கு­திக்குள் நிரந்­த­ர­மாக இருந்த மேய்ச்சல் நிலங்­களை, தற்­போது விவ­சா­யிகள் அத்­து­மீறி பிடித்து விவ­சாய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இதன் கார­ண­மா­கத்தான் நாங்கள் நிரந்­த­ர­மான மேய்ச்சல் நிலங்­களை இழந்து, இந்­த­ளவு பெரிய தொகை­யாக எமது பொரு­ளா­தா­ரத்தை இழந்­தி­ருக்­கிறோம்.

இந்த கால்­நடை பண்­ணைகள் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் ஆயிரம் குடும்­பங்­க­ளுக்கு வேலை வாய்ப்பை வழங்­கு­கி­றது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் தொடக்கம் 15 ஆயிரம் வரை­யான லீற்றர் பால் கறக்­கப்­ப­டு­கின்­றது. மலை­நாட்டு பிர­தேச எருமை மாட்டுப் பாலை­விட, எமது எருமை மாட்டுப் பாலுக்கு தென் பகு­தியில் அதி­க­ரித்த கேள்வி காணப்­ப­டு­கி­றது. காரணம் இங்­குள்ள பாலில் அதிக கொழுப்பு காணப்­ப­டு­வ­தாகும். பொரு­ளா­தார ரீதி­யாக முக்­கி­யத்­து­வ­மிக்க எமது தொழிலை பாது­காப்­ப­தற்கு நிரந்­த­ர­மான மேய்ச்சல் நிலம் ஒன்று அவ­சி­ய­மாகும் ஏனெனில் வேளாண்மை துறைக்கு ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் நிலம் இருக்­கும்­போது, கால்­நடை பண்­ணை­யா­ளர்­க­ளுக்கு ஏன் நிலம் ஒதுக்க முடி­யாது என்று தெரி­வித்தார்.

கிண்­ணியா பிர­தேச செய­லகப் பிரிவில் கிண்­ணியா மற்றும் குறிஞ்­சாக்­கேணி ஆகிய இரு கம­நல சேவை நிலை­யங்கள் உள்­ளன. இதில் கல்­ல­றப்பு, சாவாறு, சுண்­டியன் ஆறு, உகல்­வத்தை, கல்­ல­டப்பு மற்றும் கல்­மடு ஆகிய கிரா­மங்கள் கிண்­ணியா கம­நல சேவை நிலை­யத்­துக்கு சொந்­த­மான வேளாண்மை காணி­க­ளா­கவும் செம்­பி­மோட்டை, ஆயி­ல­யடி (ஒரு பகுதி), பனிச்­சங்­குளம் ஆகிய கிரா­மங்கள் குறிஞ்­சாக்­கேணி கம­நல சேவை நிலை­யத்­திற்கும் சொந்­த­மான விவ­சாய காணி­க­ளா­கவும்  இருக்­கின்­றன.

இந்தக் கிரா­மங்­களை சம்­பந்­தப்­ப­டுத்­தியே தற்­போது, இந்த கால்­ந­டைகள் இறப்பு குறித்து பேசப்­ப­டு­கின்­றன. 10வரு­டங்­க­ளாக மேய்ச்சல் தரைக்­காக போராடி வரு­வ­தா­கவும் கால்­நடை வளர்ப்­புக்­காக ஒதுக்­கப்­பட்ட நிலங்­க­ளில் ­வே­ளாண்மை செய்­யப்­ப­டு­கின்­றது என்ற கால்­நடை பண்­ணை­யா­ளர்­களின் குற்­றச்­சாட்டை மறுக்­கின்ற விவ­சா­யிகள், பரம்­பரை பரம்­ப­ரை­யா­க ­உற்­பத்தி செய்­யப்­பட்ட காணி­க­ளி­லேயே தாம் வேளாண்மைச் செய்­கையில் ஈடு­பட்டு வரு­வ­தாக இங்கு குடி­யேறி பயிர்ச்­செய்­கையில் ஈடு­ப­டுவோர் தெரி­விக்­கின்­றனர். இது­கு­றித்து, விவ­சாய சம்­மே­ளனத் தலைவர் அப்துல் மஜீத் உமர் லெப்பை (ஓய்வு பெற்ற கிராம நில­தாரி) கருத்து தெரி­விக்கும் போது, 1963 இல் ­பா­ரா­ளு­மன்ற உறுப்­பினர் மறைந்த ஏ.எல்.அப்துல் மஜீதின் சிந்­த­னையில் உரு­வா­னதே இந்த விவ­சாயக் காணி­க­ளாகும். ஒவ்­வொரு கிண்­ணி­யாக்­கா­ர­னுக்கும் இரண்டு ஏக்கர் வீதம் விவ­சாயக் காணியை பெற்றுக் கொள்ளும் அவ­ரது திட்­டத்தின் கீழ், அப்­போது காடுகள் வெட்டி கள­னி­க­ளாக்­கப்­பட்­டன.

இவ­ரு­டைய முயற்­சியின் கார­ண­மாக 1971 இல் நூற்­றுக்கும் மேற்­பட்­டோ­ருக்கு தலா இரண்டு ஏக்­க­ருக்­கான காணி பரா­ம­ரிப்பு அனு­மதி பத்­திரம் வழங்­கப்­பட்­ட­தோடு விவ­சா­யி­க­ளுக்கு வேளாண்மை உற்­பத்­தியில் ஆர்­வத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக 2 ஏக்­க­ருக்­கான விவ­சாயக் கட­னையும் பெற்றுக் கொடுத்தார். இந்த காணி பரா­ம­ரிப்­பு ­அ­னு­ம­திப்­பத்­திரம் ஒவ்­வொரு வரு­டமும் புது­ப்பிக்­கப்­படல் வேண்டும். ஆனால் 1975 இல் திரு­கோ­ண­ம­லையில் உள்ள மாவட்ட காணி அலு­வ­லகம் மின் ஒழுக்கு கார­ண­மாக முற்­றாக எரிந்­து­போ­னது. இதில் இந்த காணி அனு­மதி பத்­திரம் சம்­பந்­தப்­பட்ட ஆவ­ணங்­களும் எரிந்து நாச­மா­கி­னது. எனினும் இதனை மீண்டும் பெற்றுக் கொடுப்­ப­தற்கு அரச அதி­கா­ரி­கள் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. இதனைத் தொடர்ந்து 1993 இல் துறை­மு­கங்கள், கப்­பற்­றுறை இரா­ஜாங்க அமைச்­ச­ராக இருந்த மறைந்த எம்.ஈ.எச். மஹ்ரூப் இவர்­க­ளுக்கு நிரந்­தரக் காணி அனு­மதிப் பத்­திரம் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்தார். ஆனால், இந்த அனு­மதிப் பத்­திரம் காடு வெட்டி, வேளாண்மை செய்த எல்­லோ­ருக்கும் கிடைக்­க­வில்லை. இதற்கு காரணம் அரச அதி­கா­ரி­களின் திட்­ட­மிட்­ட ­செ­யற்­பா­டாகும். ஏனெனில் இவர்கள் முறை­யாக அறி­வித்­தலை வழங்­க­வில்லை.

இதனால் முன்னர் வேளாண்மை செய்த பலர் பாதிக்­கப்பட்­டனர். இந்த நிலையில் யுத்­தமும் உக்­கி­ர­ம­டைய நிரந்­தர அனு­ம­திப்­பத்­திரம் எடுப்­பதை கைவிட்­ட­தோடு, வேளாண்மை செய்­கை­யையும் கைவிட்­டனர். இவ்­வாறு 30 வரு­டங்­களின் பின்னர் இன்று மீண்டும் அங்கு சென்று காடு­வெட்டி, தங்கள் காணி­களில் வேளாண்மை செய்து வரு­கின்­றனர் என்று தெரி­வித்தார்.

இது இவ்­வா­றி­ருக்க, செம்பி மோட்டை பிர­தே­சத்தில் உள்ள விவ­சா­யி­க­ளுக்கு சொந்­த­மான காணி­களை விடுத்து, மீதி­யி­ருக்­கின்ற 350 ஹெக்­டேயர் அளவு காணியை மேய்ச்­சல்­த­ரைக்கு கொடுப்­ப­தற்கு 2016 ஆம் ஆண்டு நடை­பெற்ற மாவட்ட அபி­வி­ருத்திச் சபைக் குழுக் கூட்­டத்தில் முடிவு செய்­யப்­பட்­டது. இதன் பிர­காரம் 2017 இல் காணி அள­வையும் செய்­யப்­பட்­ட­து. ஆனால் இன்னும் அது அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இவ்­வாறு 350 ஹெக்­டே­யர் ­காணி மேய்ச்சல் தரை­யாக கிடைத்­தி­ருக்­கு­மானால், இந்த இறப்பில் இருந்து அரை­வாசி மாடு­க­ளை­யா­வது பாது­காத்­தி­ருக்க முடியும் என பண்­ணை­யா­ளர்கள் கூறு­கின்­றனர். இந்த விடயம் தொடர்­பா­கவும் அரச அதி­கா­ரிகள் மீதே குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. அதா­வது, உரிய நேரத்தில் வன இலாகா அதி­கா­ரிகள் எல்­லை­யிட்டு கல் நட்­டி­யி­ருக்­க­வில்லை. இதன் கார­ண­மாக இதில் சுமார் 200 ஹெக்­டேயர் அள­வி­லான காணியை விவ­சா­யிகள் பிடித்து வேளாண்மை செய்­தி­ருக்­கி­றார்கள் என்ற தக­வலும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்த நிலை­யி­லேயே செம்­பி­மோட்­டையில் இருந்து தங்கள் கால்­ந­டை­களை கடந்த ஒக்­டோபர் மாதம் கந்­தளாய் சீனி ஆலை காட்­டுப்­ப­கு­திக்கு கொண்டு சென்­றி­ருக்­கி­றார்கள். இவ்­வாறு கொண்­டு­சென்ற எருமை மாடு­களே உண­வின்றி அதிகம் இறந்­தி­ருக்­கின்­றன. இது இவ்­வா­றி­ருக்க விவ­சா­யிகள் சொல்­லு­கின்ற கருத்­துக்­களை நோக்­கு­வோ­மாக இருந்தால், , யுத்­த­கா­லத்­துக்கு முன்­பி­ருந்தே அவர்கள் வேளாண்மை மற்றும் சேனைப் பயிர்ச் செய்­கை­களில் ஈடு­பட்டு வந்­த­தா­கவும் யுத்தம் கார­ண­மா­கவே, விவ­சா­யத்தை கைவிட்­டி­ருந்த நாங்கள் எங்­க­ளு­டைய காணி­களில் விவ­சாயம் செய்­கிறோம். ஆனால், கால்­நடை வளர்ப்­பா­ளர்­களின் காணி­களை அத்­து­மீறி பிடிக்­க­வில்லை என்றும் அவர்கள் யுத்த காலத்­திலே மாடு­களை வளர்த்து பெருக்கிக் கொண்­டனர் எனத் தெரி­விக்­கி­கின்­றனர்.

மாடு­களின் உயி­ரி­ழப்பு தொடர்­பாக கிண்­ணியா பிர­தேச கால்­நடை வைத்­திய அதி­காரி எம்.எஸ்.எம். பைசால் கருத்து தெரி­விக்­கையில், ஆறு மாதங்­க­ளுக்கு முன்னர் கந்­தளாய் சீனி தொழிற்­சாலை காடு­க­ளி­லுள்ள மாடு­க­ளுக்கு ஒரு­வகை வைரஸ் நோய் இருந்­தது. ஆனால் அந்த நோய்க்கு உரிய மருத்­துவ கிகிச்சை வழங்­கப்­பட்­டதால் அந்த நோய்த் தொற்­றி­லி­ருந்து அந்த மாடுகள் ஏற்­க­னவே பாது­காக்­கப்­பட்டு விட்­டன. ஆனால், தற்­போது மாடு­க­ளுக்குப் போதி­ய­ளவு போஷாக்கு கிடைக்­கா­மை­யி­னாலே அவை இறக்­கின்­றன. இதற்கு காரணம் மேய்ச்சல் தரை இன்­மை­யாகும். இறந்த மாடு­களின் சில உடல்­களை மருத்­துவ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­திய போது, கல்­சி­யமும் மெக்­னீ­சியம் முழு­மை­யாகக் குறைந்­தி­ருப்­ப­து ­கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இல்­வாறு குறைவு ஏற்­பட்­ட­தனால், எலும்­பு­க­ளுக்கு போதி­ய­ளவு பலம் கிடைக்­காது, மாடுகள் நிற்க முடி­யாமல், நிலத்தில் விழுந்து இறக்க நேரி­டு­கின்­றது என்றும் இறந்த மாடு­களை பாது­காப்­பான முறையில் புதைத்­தி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்தார். மேற்­கூ­றப்­பட்ட தக­வல்­க­ளி­லி­ருந்து சிக்­கல்­களை தெளி­வாக இனங்­கண்டு கொள்­ளக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

பிர­தா­ன­மாக யுத்­த­கால சூழ்­நி­லைதான் பிரச்­சி­னை­களைத் தோற்­று­வித்­துள்­ளது என்­பது ஒரு முக்­கி­ய­மான கார­ண­மாக தெரி­கின்­றது. விடு­தலைப் புலி­களின் முழு­மை­யான கட்­டுப்­பாட்டின் கீழி­ருந்த இந்த விவ­சாயக் காணி­களில், யுத்த காலத்தில் விவ­சா­யி­கள் ­அங்கு குடி­யி­ருந்­து ­ப­யிர் ­செய்­வது ஓர் ஆபத்­தான தொழி­லாக மாறி­யி­ருந்­தது. இதனால் விவ­சா­யிகள் வேளாண்மைத் தொழிலைக் கைவிட்­டி­ருக்­கி­றார்கள். இதன்­கா­ர­ண­மாக அப்­போது இலா­ப­க­ர­மான தொழி­லாக காணப்­பட்ட கால்­நடை வளர்ப்பு முக்­கி­ய­ம­டைந்­தி­ருக்­கி­றது. அடுத்து அர­சாங்க அதி­கா­ரி­களின் கவ­ன­யீனம் அல்­லது அவர்­களின் திட்­ட­மிட்ட செயற்­பாடும் இந்தப் பிரச்­சி­னையைத் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது என்ற உண்­மையும் இதி­லி­ருந்து விளங்­கு­கின்­றது. எது எப்­ப­டி­யாக இருப்­பினும் யுத்த காலத்தில் ஒரு துறை வீழ்ச்­சி­ய­டைந்து இன்­னு­மொரு துறை வளர்ச்­சி­ய­டைந்­தி­ருக்­கி­றது என்­பதே உண்மை. யுத்தம் முடிந்த கையோடு விவ­சா­யிகள் தங்கள் காணி­க­ளுக்குள் குடி­யேறி வேளாண்மை மற்றும் மேட்டு நிலப் பயிர்ச்­செய்­கையில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். தற்­போ­தைய கணக்­கின்­படி கிண்­ணியா கம நல­சேவைப் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தியில் 3220 ஏக்கர் வேளாண்மைக் காணி­களும் 40 ஏக்கர் மேட்டு நிலக்­கா­ணியும் இருக்­கின்­றன. குறிஞ்­சாக்­கேணி கம­நல சேவை பிரி­வுக்­குட்­பட்ட பிர­தே­சத்தில் 700 ஏக்கர் வேளாண்மைக் காணியும் 30 ஏக்கர் மேட்­டு­நிலக் காணியும் இருப்­ப­தோடு இந்த இரு பிர­தே­சங்­க­ளிலும்

பெரும்­பா­லான இடங்­களில் மக்கள் மீள்­கு­டி­யே­றியும் இருக்­கின்­றனர். யுத்தம் ஆரம்­பித்து 30 வருட காலத்­துக்குள் சுமார் 700 கால் நடை பண்­ணை­யா­ளர்கள் உரு­வா­கி­யி­ருக்­கி­றார்கள். நாளாந்தம் 6000 முதல் 8000 லீற்றர் வரை­யான பாலுற்­பத்­தியை பெற்றுக் கொடுத்­தி­ருக்­கி­றது. இது ஒரு பிர­தே­சத்தினுடைய விவ­சாய பொரு­ளா­தார வளர்ச்­சியின் சிறப்­பா­ன­தொரு குறி­காட்­டி­யாகும். வேளாண்மை மற்றும் மேட்­டு­நிலப் பயிர்ச்­செய்கை மூலமும் மக்­களின் வாழ்வாதாரம் அபி­வி­ருத்தி அடைந்­தி­ருக்­கி­றது. ஒக்­டோபர் தொடக்கம் ஜன­வரி மாதம் வரை­யான நான்கு மாத காலப்­ப­கு­திக்குள் 1000 தொடக்கம் 1500 வரை­யி­லான தொழி­லா­ளர்­க­ளுக்கு வேலை வாய்ப்­பினை வழங்­கு­கி­றது. அத்­தோடு இந்தப் பிர­தே­சங்­களில் மக்கள் நிரந்­த­ர­மான குடி­யி­ருப்­புக்­களை அமைத்து வரு­வதால், அங்கு பாட­சா­லைகள், சுகா­தார நிலை­யங்­கள், மத ஸ்தாப­னங்கள் என பல்­வேறு சமூக நிறு­வ­னங்கள் உரு­வா­கி­யி­ருக்­கின்­றன. இதன்­மூலம் புதிய குடி­யி­ருப்பு கிரா­மங்கள் உரு­வா­வ­தற்­கான வழி­யேற்­பட்­டி­ருக்­கி­றது. இதுவும் பிர­தேச அபி­வி­ருத்­தியின் சிறப்­பான தொரு குறி­காட்­டிதான்.

இந்த நிலையில், வேளாண்மைத் துறை­யையும் கைவிட முடி­யாது. கால்­நடை வளர்ப்­பையும் கைவிட முடி­யாது. 80ஆயிரம் சனத்­தொ­கையைக் கொண்ட கிண்­ணி­யா­வுக்கு வேலை வாய்ப்­பையும் உண­வையும் கொடுத்து பிர­தே­சத்தின் அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இந்த இரண்டு துறை­களும் அவ­சி­ய­மா­ன­வை­யாகும்.

கடல்­வளம், மணல்­வளம், காட்­டு­வளம், நீர்­வளம், மக்­கள்­வளம் என்று ஒரு பொரு­ளா­தா­ரத்­துக்கு தேவை­யான அனைத்து வளங்­களும் தாரா­ள­மாக நிறையப் பெற்­ற­துதான் கிண்­ணியா பிர­தேசம். இந்த ஒரு அதிர்ஷ்­ட­மான நிலை, இலங்­கையில் எந்­த­வொரு பிர­தே­சத்­துக்கும் கிடைக்­காத ஒரு வர­மாகும். இந்த நிலையில் வேளாண்மைத் துறை­யையும் பண்ணைத் துறை­யையும் சேர்த்து ஏன் அபி­வி­ருத்தி செய்ய முடி­யாது. கிழக்கு மாகா­ணத்தில் ஏனைய பிர­தே­சங்­க­ளோடு ஒப்­பிட்டு பார்க்­கும்­போது சகல துறை­க­ளிலும் வீழ்ச்­சி­ய­டைந்து கொண்டு செல்­வதை காண­மு­டி­கி­றது. சுகா­தாரத் துறையை எடுத்துக் கொண்டால் கிண்­ணியா வைத்­தி­ய­சா­லையில் நோயா­ளிக்கு கட்டில் இல்லை என்று சொல்­லு­கின்ற காலமா இது? குறிஞ்­சாக்­கே­ணிக்கு பாலம் கேட்டு எவ்­வ­ளவு காலத்­துக்­குத்தான் போராட்டம் நடாத்­து­வது? கல்­வியை எடுத்துக் கொண்டால் இலங்­கையிலேயே 98 ஆவது வலயம் என்று பல வரு­டங்­க­ளா­கவே சொல்லிக் கொண்டு வருகிறோமே வெட்கமில்லையா?

அரசியல்வாதிகளும் நிர்வாக அதிகாரிகளுமே கிண்ணியாவின் பின்னடைவுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். இரு பிரிவினரும் சமூகத் தலைவர்களே. ஒருமாத காலத்துக்குள் 28 ஆயிரம் மாடுகள் இறந்து இரண்டு மாதங்களாகியும் இது சம்பந்தமாக இவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? திட்டமிடல் மற்றும் முகாமைத்துவக் கோட்பாட்டின்படி, சமூகத் தலைவர்களுக்கு அச்சமூகத்தின் அபிவிருத்தி குறித்து கற்பனை இருக்க வேண்டும். தூங்கி எழும்பும் போதுகூட சமூகம் பற்றி ஏதாவதொரு கற்பனையோடுதான் எழும்ப வேண்டும். இவர்களைத்தான் உயிருள்ள தலைவர்கள் என சீனப் பழமொழி ஒன்று கூறுகின்றது.

ஆகவே, எமது தலைவர்கள் கட்சிக்காரனை எவ்வாறு பாதுகாப்பது என்று கற்பனை செய்வதை விடுத்து வைத்தியசாலையை எவ்வாறு பாதுகாப்பது என்றுதான் சிந்திக்க வேண்டும். தனது பொருளாதாரத்தை எவ்வாறு காப்பாற்றுவது என்ற கற்பனையை விடுத்து பிரதேசத்தின் பொருளாதாரத்தைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும். தனக்கு வேண்டியவர்களையும் உறவினர்களையும் இடமாற்றத்திலிருந்து பாதுகாப்பதற்காக இன்னொருவரை எவ்வாறு பழிவாங்குவது என்ற சிந்தனையை விடுத்து ஒட்டுமொத்த சமூகத்தின் கல்விநிலை பற்றியே சிந்திக்க வேண்டும். இந்த நிலை இனியும் தொடருமானால் கால்நடை பண்ணைத் தொழில் அழிந்தே தீரும். ‘ஏ’ தர வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலையாக மாறும். 98 ஆவது இருக்கின்ற கல்வி வலயம் 99 ஆவது இருக்கின்ற கடைசி வலயத்தை பிடித்து சாதனையும் படைக்கும் என்பதில் ஐயமே இல்லை.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.