அம்பாறை, கண்டி, திகன இன வன்முறைகள்: நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கை தேக்கம்

தயாரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிக்கப்படாத நிலையில்

0 646

புதி­தாக அர­சாங்கம் நிறு­வப்­பட்­டதன் பின்பு இது­வ­ரை­காலம் புனர்­வாழ்வு அதி­கார சபைக்கு தலை­வரும், பணிப்­பாளர் சபையும் நிய­மிக்­கப்­ப­டா­ததால் இன வன்­மு­றை­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­டாது தேங்கிக் கிடப்­ப­தாக புனர்­வாழ்வு அதி­கார சபையின் உய­ர­தி­கா­ரி­யொ­ருவர் ‘விடி­வெள்ளி’க்குத் தெரி­வித்தார்.

அம்­பாறை மற்றும் கண்டி, திகன பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கும், பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் வழங்­கப்­பட வேண்­டிய நஷ்ட ஈடு­க­ளுக்­கான அமைச்­ச­ரவைப் பத்­திரம் முன்னாள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­த­னினால் ஏற்­க­னவே கையொப்­ப­மி­டப்­பட்­டுள்­ள­தா­கவும், தற்­போது குறிப்­பிட்ட அமைச்­ச­ரவைப் பத்­திரம் அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கண்டி மற்றும் திகன பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட ஒரு இலட்சம் ரூபா­வுக்கும் மேற்­பட்ட நஷ்ட ஈடு­க­ளுக்­கு­ரிய 173 சொத்­து­க­ளுக்கு சுமார் 150 மில்­லியன் ரூபா­வுக்கும் மேற்­பட்ட நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்­டி­யுள்­ள­தா­கவும் புனர்­வாழ்வு அதி­கார சபையின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

அத்­தோடு அம்­பா­றையில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பள்­ளி­வாசல் உட்­பட 13 சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. புனர்­வாழ்வு அதி­கார சபைக்கு தலைவர் மற்றும் பணிப்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­ப­டா­ததால் நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­டு­வதில் தொடர்ந்தும் கால­தா­மதம் ஏற்­ப­டு­கி­றது.

புனர்­வாழ்வு அதி­கார சபைக்­கான தலைவர் நிய­மனம் மற்றும் பணிப்­பா­ளர்கள் நிய­மனம் தொடர்பில் பெயர்கள் சிபா­ரிசு செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் சம்­பந்­தப்­பட்ட குழு­வினால் இது­வரை அதற்கு அங்­கீ­காரம் வழங்­கப்­ப­ட­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தமது நஷ்­ட­ஈ­டு­களை தாம­த­மின்றிப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு முஸ்லிம் அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்­டு­மென பாதிக்­கப்­பட்ட மக்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

கண்டி, திகன மற்றும் அம்­பாறை வன் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமில்லாமல் நஷ்ட ஈடுகள் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது புனர்வாழ்வு அதிகாரசபை பிரதமரின் கீழேயே செயற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.