அறிவிப்பு பலகை இல்லாவிடினும் அகௌரவப்படுத்த முடியாது

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம்

0 755

நாட்­டி­லுள்ள அனைத்து தொல்­பொருள் அமை­வி­டங்­க­ளிலும் (Sites) அது தொடர்­பான அறி­வித்தல் பல­கைகள் நிறு­வப்­படும். தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் இந் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அறி­விப்புப் பல­கைகள் இல்லை என்­பதை காரணம் காட்டி அவ்­வி­டங்­க­ளுக்கு தீங்கு விளை­விக்­கவோ அகௌ­ர­வப்­ப­டுத்­தவோ முடி­யாது என தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் பி.பீ. மண்­ட­ா­வல தெரி­வித்தார்.

தொல்­பொருள் அமை­வி­டங்கள் பெரும்­பா­லா­ன­வற்றில் அறி­விப்புப் பலகை காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டாமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் விடி­வெள்­ளிக்கு இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில்;

‘எமது மர­பு­ரிமைச் சொத்­து­க­ளான தொல்­பொ­ருட்­களைப் பாது­காப்­பது எமது கட­மை­யாகும். தொல்­பொ­ருட்கள் மீது ஏறி நின்று புகைப்­படம் எடுப்­பதும் அகௌ­ர­வப்­ப­டுத்­து­வதும் தொல்­பொருள் சட்­டத்­தின்­படி குற்றச் செயல்­க­ளாகும். இந்த குற்றச் செயல்­களைப் புரியும் எவரும் தான் அறி­யாமல் அவ்­வாறு செய்­து­விட்­ட­தாக கூறி தப்­பிக்க முடி­யாது என்றார்.

இதே­வேளை தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் உதவிப் பணிப்­பாளர் விராஜ் பால­சூ­ரி­யவைத் தொடர்பு கொண்டு கருத்து வின­வி­ய­போது அவர் இவ்­வாறு தெரி­வித்தார். நாடெங்கும் சுமார் 2 இலட்­சத்து 50 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட தொல்­பொருள் அமை­வி­டங்கள் உள்­ளன. இவற்றில் சுமார் 25 ஆயிரம் அமை­வி­டங்­களே தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

தொல்­பொருள் அமை­வி­டங்­களைப் பார்ப்­ப­தற்கு பெருந்­தி­ர­ளான வெளி­நாட்டு உல்­லாச பய­ணி­களும் உள்­நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகிறார்கள். இவர்களை அறிவுறுத்துவற்காக மூன்று மொழிகளிலும் அறிவிப்பு பலகைகள் அனைத்து அமைவிடங்களிலும் நிறுவப்படும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.