மத்திய தரைக்கடலில் இரு கப்பல்கள் கவிழ்ந்ததில் 170 அகதிகள் பலி

0 643

மத்­திய தரைக்­கடல் பகு­தியில் இரு கப்­பல்கள் கவிழ்ந்த சம்­ப­வங்­களில் 170 அக­திகள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடு­களின் ஆணை­யகம் தெரி­வித்­துள்­ளது.

சுமார் 117 அக­திகள் பய­ணித்த கப்­ப­லொன்று லிபிய கடற்­ப­ரப்பில் மூழ்­கி­ய­தாக இத்­தா­லியின் கடற்­படை தெரி­வித்­துள்­ளது. அதே­வேளை மொரோக்கோ மற்றும் ஸ்பெய்ன் அதி­கா­ரிகள் மேற்கு மத்­தி­ய­தரைக் கடலில் காணா­மற்­போன கப்­ப­லொன்றை கண்­டு­பி­டிக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ளனர்.

ஆனாலும் உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்­கையை உறு­திப்­ப­டுத்த முடி­ய­வில்லை என அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடு­களின் ஆணை­யகம் தெரி­வித்­துள்­ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் மத்­திய தரைக்­கடல் பகு­தியை கடக்க முயன்­ற­போது 2200 க்கும் மேற்­பட்ட அக­திகள் உயி­ரி­ழந்­த­தாக அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன.

53 அக­தி­க­ளுடன் பய­ணித்துக் கொண்­டி­ருந்த முத­லா­வது கப்பல் மத்­திய தரைக்­க­டலின் மேற்­குப்­ப­கு­தி­யி­லுள்ள அல்­போரான் கடற்­ப­ரப்பில் காணாமல் போன­தாக கூறப்­ப­டு­கி­றது. இக்­கப்பல் கவிழ்ந்­ததன் பின்னர் உயிர் தப்பி சுமார் 24 மணி­நே­ரங்கள் கடலில் தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருந்த ஒருவர் காப்­பாற்­றப்­பட்டு மொரோக்­கோவில் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தாக அந்­நாட்டு ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன.

இருந்­த­போ­திலும், கப்பல் எந்த பகு­தியில் கவிழ்ந்­தது என்­பது குறித்தோ அதி­லி­ருந்­த­வர்­களின் தற்­போ­தைய நிலை என்ன என்­பது குறித்தோ எந்த தக­வலும் இல்­லை­யென தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

விபத்­துக்­குள்­ளான இரண்­டா­வது கப்பல் கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று லிபி­யா­வி­லி­ருந்து புறப்­பட்­ட­தா­கவும் அந்த கப்பல் லிபி­யா­வி­லி­ருந்து புறப்­ப­டும்­போது அதில் 120 அக­திகள் இருந்­த­தா­கவும் விபத்தில் உயிர் பிழைத்த மூவர் தெரி­வித்­துள்­ள­தாக இடப்­பெ­யர்­வுக்­கான சர்­வ­தேச அமைப்பு கூறி­யுள்­ளது.

இந்த ஆண்டின் முதல் 16 நாட்களில் மட்டும் சுமார் 4216 குடியேறிகள் இந்த கடற்பகுதியை கடந்து சென்றுள்ளனர். இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இரண்டு மடங்குக்கும் அதிகம் எனவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.