இஸ்ரே­லிய மாணவி அவுஸ்­தி­ரே­லி­யாவில் கொலை சந்­தேக நபரின் விளக்­க­ம­றியல் நீடிப்பு

0 640

இஸ்­ரே­லிய மாண­வி­யொ­ரு­வரைக் கொன்­ற­தாக சந்­தே­கிக்­கப்­படும் நபரின் விளக்­க­ம­றி­யலை எதிர்­வரும் ஜூன் மாதம் வரை அவுஸ்­தி­ரே­லிய நீதி­மன்­ற­மொன்று கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று நீடித்­துள்­ளது. மேலும் சந்­தேக நப­ரினால் பிணை தொடர்பில் எவ்­வித கோரிக்­கையும் முன்­வைக்­கப்­ப­ட­வில்­லை­யென நீதி­மன்ற பெண் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார்.

அவுஸ்­தி­ரே­லி­யாவின் இரண்­டா­வது பெரிய நக­ர­மான மெல்­பேர்னில் நண்­பர்­க­ளுடன் இரவைக் கழித்­து­விட்டு வீட்டை நோக்கி நடந்து வந்­து­கொண்­டி­ருந்த போது 21 வய­தான ஐயியா மாசர்வே கொல்­லப்­பட்டார். இத­னை­ய­டுத்து முக்­கிய நக­ரங்­களில் பெண்­க­ளுக்கு பாது­காப்பு வழங்கக் கோரி ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­றன.

எழுச்சிப் பாடல்­களை எழுதும் பாட­லா­சி­ரி­ய­ரென ஊட­கங்­களால் வர்­ணிக்­கப்­படும் 20 வய­தான கோடி ஹேர்மன் கடந்த வாரம் இக்­கொலை தொடர்பில் குற்­றம்­சாட்­டப்­பட்டு நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­தாக மெல்பேர்ன் நீதிவான் நீதி­மன்ற பெண் பேச்­சாளர் மேலும் தெரி­வித்தார்.

பிணை தொடர்பில் எவ்­வித கோரிக்­கை­களும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. விசா­ரணை எதிர்­வரும் ஜூன் மாதம் வரை ஒத்தி வைக்­கப்­ப­ட­வுள்­ளது எனவும் அவர் தெரிவித்தார். ஹேர்மனின் சட்டத்தரணி இது தொடர்பில் உடனடியாக எந்தக் கருத்தினையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.