ஏழு கண்டங்களிலும் மரதன் ஓடிய முதல் இலங்கை வீரரானார் ஹசன் யூசு­பலி

0 756

அந்­தாட்டிக் ஐஸ் மரதன் தொட­ரினை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்­ததன் மூலம் உலகின் ஏழு கண்­டங்­க­ளிலும் நடை­பெற்ற மரதன் ஓட்டப் போட்­டி­களில் பங்­கு­பற்­றிய முதல் இலங்­கையர் என்னும் புதிய சாத­னை­யினை நிலை­நாட்­டினார் மரதன் ஓட்ட வீர­ரான ஹசன் யூசு­பலி.

மிகவும் கடு­மை­யான நிபந்­த­னைகள் கொண்ட அந்­தாட்டிக் கண்­டத்தின் அந்­தாட்டிக் ஐஸ் மரதன் தொடர் அதிக குளிர், பனிக்­கட்டிப் பாறைகள், மிகக் குறை­வான பார்வை வீச்சு என ஆபத்­துக்கள் நிறைந்த 42.2 கிலோ மீட்டர் ஓடு­பா­தை­யினை கொண்ட மிகச் சவா­லான தொட­ராகும். குறித்த மரதன் தொடரை ஹசன் எசு­பலி வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்ய 8 மணித்­தி­யா­ல­யங்கள் மற்றும் 35 நிமி­டங்­களை எடுத்­தி­ருந்தார்.

மிகவும் ஆபத்­தான சூழ்­நி­லை­களை கொண்­டி­ருக்கும் இந்த மரதன் ஓட்டத் தொடரில் ஹசன் யூசு­ப­லி­யுடன் சேர்ந்து உலகின் முன்­னணி வீரர்கள் பலரும் கலந்து கொண்­டி­ருந்­தனர். குறித்த வீரர்கள் அந்­தாட்டிக் ஐஸ் மரதன் தொடர் பற்றி பேசும் பொழுது இந்த ஆண்டு இடம்­பெற்ற மரதன் தொடரே ஏனைய ஆண்­டு­களை விடவும் மிகவும் கடி­ன­மாக இருந்­தது எனக் குறிப்­பிட்­டி­ருந்­தனர். அந்­தாட்டிக் மரதன் தொடரில் பங்­கேற்­ப­தற்கு முன்­ன­தாக ஹசன் யூசு­பலி உலகின் மிகவும் கடின மரதன் தொட­ராக கரு­தப்­படும் இன்கா ஓடு­பாதை  மரதன் தொடரை ஓடி­மு­டித்த முதல் இலங்­கை­ய­ரா­கவும் பதி­வா­கி­யி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. இத் தொடர் நிறை­வுக்குப் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்ட ஹசன் யூசு­பலி “அந்­தாட்டிக் ஐஸ் மரதன் தொடர் உலகின் மிகவும் கடி­ன­மான மரதன் தொடர் என்­பதால்  அதனை எதிர்­பார்த்த நேர இடை­வெளி ஒன்றில் நிறைவு செய்­தது மகிழ்ச்­சி­யான விடயம். மேலும் உலகின் ஏனைய கடி­ன­மான மரதன் தொடர்­களில் பங்­கேற்­றது அந்தாட்டிக் ஐஸ் மரதன் ஓட்டத் தொடரினை நிறைவு செய்ய பலவகைகளிலும் உதவியாக இருந்தது”  எனவும்  தெரிவித்திருந்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.