உம்ரா பயணத்தில் தடங்கல் ஏற்பட்ட விவகாரம்: உப முகவர் பணத்தை கையளிக்க உறுதியளிப்பு

0 738

கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த 36 பேரிடம் உம்ரா பய­ணத்­துக்­கான முழு­மை­யான கட்­ட­ணங்­களை அற­விட்டு இறுதி நேரத்தில் பய­ணி­களைக் கைவிட்டு தலை­ம­றை­வா­கி­யி­ருந்த காத்­தான்­கு­டியைச் சேர்ந்த உப முகவர், அம்ஜா முகவர் நிலை­யத்­துக்கு வழங்க வேண்­டிய 36 இலட்சம் ரூபா பணத்தை வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்ளார்.

குறிப்­பிட்ட உம்ரா பய­ணி­க­ளுக்­கான விமான டிக்­கெட்டுக்களை காத்­தான்­குடி உப முகவர் அம்ஜா டிர­வல்ஸில் ஏற்­பாடு செய்திருந்த விமான டிக்­கெட்­டு­க­ளுக்­கு­ரிய பணம் இறுதிநேரத்தில் வழங்­கப்­ப­டா­மை­யி­னாலே உம்ரா பய­ணிகள் நிர்க்­க­திக்­குள்­ளா­கினர். அவர்கள் விமான நிலை­யத்­தி­லி­ருந்து திருப்­பி­ய­னுப்­பப்­பட்டு மாபோலை பள்­ளி­வா­சலில் ஒரு­வார காலம் தங்­கி­யி­ருந்­தனர்.

இந்­நி­லையில் சம்­பந்­தப்­பட்ட காத்­தான்­குடி உப முகவர் தலை­ம­றை­வா­கி­யி­ருந்தார். தலை­ம­றை­வா­கிய முக­வரின் மனைவி மற்றும் உற­வி­னர்கள் பய­ணி­களின் விமான டிக்­கெட்டு­க­ளுக்­கான கட்­ட­ணங்­களை செலுத்­து­வ­தாக அம்ஜா டிர­வல்­ஸுக்கு உறு­தி­ய­ளித்­த­தா­லேயே பய­ணிகள் உம்­ரா­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டனர்.

இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் முறைப்­பாடும் செய்­யப்­பட்­டது. உரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என திணைக்­கள பணிப்­பாளர் எம்.ஆர்.எம் மலிக் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லை­லேயே நேற்று முன்­தினம் தலை­ம­றை­வா­கி­யி­ருந்த காத்­தான்­குடி முக­வ­ருக்கும் அம்ஜா டிரவல்ஸ் உரி­மை­யா­ள­ருக்கும் இடையில் இது தொடர்­பான சந்­திப்பு இடம்­பெற்­றது. இச்­சந்­திப்­பினை அரச ஹஜ் குழுவின் உறுப்­பினர் மெளலவி எம்.எஸ்.எம் தாஸிம் ஏற்பாடு செய்திருந்தார்

இச்சந்திப்பின்போதே குறிப்பிட்ட உப முகவர் 36 இலட்சம் ரூபாவை அம்ஜா டிரவல்ஸுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.