சவூதி அரேபியாவின் ஹஜ் விவகாரங்களுக்கான அமைச்சருக்கும் இலங்கையின் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சருக்கும் இடையில் இலங்கைக்கான ஹஜ் கோட்டா மற்றும் ஏற்பாடுகள் தொடர்பில் இன்று சவூதி அரேபியா ஜித்தாவில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் அமைச்சர் ஹலீமின் தலைமையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர். எம் மலிக், அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத், அமைச்சர் ஹலீமின் பிரத்தியேக செயலாளரும் ஹஜ் குழு உறுப்பினருமான எம். எச். எம். பாஹிம் மற்றும் ஹஜ் முகவர்கள் சங்கத்தின் சார்பில் பிரதிநிதியொருவரும் கலந்துகொள்ளவுள்ளனர். கலந்துரையாடலின் போது இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை 1000 த்தால் அதிகரித்துக்கொள்வது பற்றி வலியுறுத்தப்படும்.
ஹஜ் கடமைக்காக விண்ணப்பிப்போரில் அநேகர் ஹஜ் கோட்டா மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் கோட்டாவை அதிகரிக்கும் படி சவூதி ஹஜ் அமைச்சரைக் கோரவுள்ளதாக அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
-Vidivelli