எகிப்தின் புராதன கலைப்பொருள் லண்டனில் கண்டுபிடிப்பு

0 628

சட்­ட­வி­ரோத­மாகக் கடத்­தப்­பட்ட எகிப்தின் புரா­த­ன­கால கலைப்­பொருள் ஒன்று லண்டன் ஏல விற்­பனை மண்­ட­ப­மொன்றில்  கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக எகிப்­திய அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

18 ஆவது வம்­சத்தைச் சேர்ந்த அமேன்­ஹோடெப் ஐ மன்­னனின் கால உருவ எழுத்­துக்­களைக் கொண்ட கட்­டு­மா­னத்தில் ஒரு பகு­தி­யான இத்­தொல்­பொருள் சர்­வ­தேச ஏல விற்­பனை இணை­யத்­த­ளங்­களில் தேடி­ய­தை­ய­டுத்து கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது என எகிப்தின் புரா­தன பொருட்­க­ளுக்­கான அமைச்சு செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று தெரி­வித்­தது.

கடந்த செப்­டம்பர் மாதம் புரா­த­ன­கால கலைப்­பொருள் லண்­ட­னி­லுள்ள எகிப்­திய தூத­ர­கத்­திற்கு கிடைக்­கப்­பெற்­றது.

தெற்கு எகிப்­திய நக­ரான லக்­சே­ரி­லுள்ள புரா­த­ன­கால கர்னாக் கோயிலின் திறந்த நூத­ன­சா­லையில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த குறித்த பொருள் எவ்­வாறு நாட்­டுக்கு வெளியே கொண்டு செல்­லப்­பட்­டது என்­பது தெரி­ய­வ­ர­வில்லை.

எகிப்தின் வெளி­நாட்­ட­மைச்சு, லண்­ட­னி­லுள்ள எகிப்­திய தூத­ரகம் மற்றும் பிரித்­தா­னிய அதி­கா­ரி­க­ளுடன் எகிப்தின் புரா­தன பொருட்­க­ளுக்­கான அமைச்சு இணைந்து கட்­டு­மா­னத்தில் ஒரு­ப­கு­தி­யினை கண்­டு­பி­டிக்கும் பணியில் ஈடு­பட்­டது என அமைச்சின் பணிப்­பாளர் நாயகம் ஷாபான் அப்தெல் கவாட் தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு அமைதியின்மைக்குப் பின்னரான காலப் பகுதியில் எகிப்திய கலைப் பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்தன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.