மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட தோப்பூர், நல்லூர், சம்பூர்,பள்ளிக்குடியிருப்பு பகுதிகளில் அதிகளவான மாடுகள் உயிரிழந்து காணப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைவாக நேற்றுக் காலை தோப்பூர் கரைச்சை காட்டுப் பகுதியில் இறந்த மாடுளை பெக்கோ இயந்திரம் கொண்டு புதைக்கும்.
நடவடிக்கை மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் தலைமையில் இடம்பெற்றது.
மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 600 க்கும் அதிகமான மாடுகள் உயிரிழந்துள்ளதோடு தொடர்ந்தும் இறந்து வருகின்றன. அதேவேளை இவ் உயிரிழப்புகளுக்கான காரணத்தை கண்டறிவதற்காக மாடுகளின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அதன் முடிவுகள் வரும் வரையில் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட 14 இறைச்சிக் கடைகளும் தற்காலிகமாக மூதூர் பிரதேச சபையினால் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.