மாவ­னெல்லை புத்தர் சிலை உடைப்பு விவ­காரம்: கைதான ஏழு பேரும் ஒரு­வ­ருடன் ஒருவர் தொடர்பில் இருந்­துள்­ளமை கண்­டு­பி­டிப்பு

0 1,268

கண்டி மற்றும் மாவ­னெல்லை ஆகிய பிர­தான நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில்  நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் உடைத்து சேத­மாக்­கப்­பட்ட விவ­காரம் தொடர்­பிலும் குரு­நாகல், -பொத்து­ஹர பகு­தியில் இந்துக் கடவுள் சிலை­களை சேதப்­ப­டுத்­திய விவ­கா­ரத்­திலும் இது­வரை கைதா­கி­யுள்ள ஏழு சந்­தேக நபர்­களும் தங்­க­ளுக்குள் ஒரு­வ­ருக்கு ஒருவர் தொடர்பில் இருந்­துள்­ள­மையை பொலிஸார் விசா­ர­ணை­களில் கண்­ட­றிந்­துள்­ளனர். அதனால் இவர்கள் சிலை உடைப்பு விவ­கா­ரங்­களில் திட்­ட­மிட்ட குழு­வாக செயற்­பட்­டி­ருக்க வேண்­டு­மெனப் பொலிஸார் சந்­தே­கிக்­கின்ற நிலையில்,  அக்­கு­ழு­வுக்குத் தலைமை வகித்­த­தாக சந்­தே­கிக்கும் பிர­தான சந்­தேக நபரைக் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை தீவி­ர­பப்­டுத்­தி­யுள்­ளனர்.

கண்டி, கேகாலை அதி­ரடிப் படை­யினர் மற்றும்  உளவுத் துறை­யி­னரின் பங்­க­ளிப்­போடும் சி.ஐ.டி.யின் சிறப்பு விசா­ர­ணை­யா­ளர்­களின் ஆலோ­ச­னையின் கீழும் இந்த  நட­வ­டிக்­கைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக  பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உய­ர­தி­காரி ஒருவர் கூறினார்.

இத­னி­டையே இந்த சிலை­களை உடைக்க சந்­தேக நபர்கள் பயன்­ப­டுத்­தி­ய­தாக நம்­பப்­படும் சுத்­தி­ய­லொன்றை பொலிஸார் தற்­போது கைப்­பற்­றி­யுள்­ளனர். சந்­தேக நபர்­களில் ஒரு­வரின் வீட்­டி­லி­ருந்து இது மீட்­கப்பட்­ட­தாக அறிய முடி­கின்­றது. கைதா­கி­யுள்ள சந்­தேக நபர்கள் அனை­வரும் மாவ­னெல்லை, தெல்­க­ஹ­கொட  மற்றும் அதனை அண்­மித்த ஒரே ஊரைச் சேர்ந்­த­வர்கள் என பொலிசார் கூறினர். இவர்கள் அனை­வரும் 25 வய­துக்­குட்­பட்ட இளை­ஞர்கள் எனக் கூறும் பொலிஸார் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பி­லான தொழில்­களில் இவர்கள் ஈடு­பட்­டி­ருந்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டனர்.

இந்­நி­லையில் சிலை உடைப்பின் பின்­னணி மற்றும் நோக்கம் உள்­ளிட்­ட­வற்றை வெளி­ப்ப­டுத்த தொடர் விசா­ர­ணை­களை மாவ­னெல்லை பொலி­ஸாரும் கேகாலை குற்­றத்­த­டுப்புப் பிரி­வி­னரும் இணைந்து முன்­னெ­டுத்­துள்­ளனர்.

ஏற்­க­னவே கடந்த வருடம் டிசம்பர் மாத நடுப்­ப­கு­தியில்  மாவ­னெல்லை பொலிஸ் பிரிவில்  பாதை­யோர புத்தர் சிலைகள் இரண்டு தாக்­கு­த­லுக்­குள்­ளா­கி­யி­ருந்­தன. இது தொடர்பில் மாவ­னெல்லை பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்த நிலையில், 2018 டிசம்பர் 26 ஆம் திகதி  அதி­காலை 3.00 மனி­ய­ளவில் வெலம்­பட பொலிஸ் பிரிவின் லெயம்­க­ஹ­வல பகு­தியில் மூன்­றரை அடி உய­ர­மான புத்தர் சிலை அடை­யாளம் தெரி­யா­தோரின் தாக்­கு­தலால் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அதனை அண்­டிய பகு­தி­யி­லி­ருந்த மேலும் மூன்று சிறு சிலை­களும் சேத­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.  இந்­நி­லையில் அதே திக­தியில் அதி­காலை 4.00 மணி­ய­ளவில் மாவ­னெல்லை -திது­ரு­வத்த சந்­தி­யி­லுள்ள புத்தர் சிலையும் தாக்கி சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதன்­போது அந்த சிலையை தாக்க மோட்டார் சைக்­கிளில் வந்­த­தாகக் கூற­ப்படும் இரு­வரில் ஒரு­வரை பிர­தே­ச­வா­சிகள் பிடித்து மாவ­னெல்லை பொலி­சா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர். அதன் பின்­ன­ரேயே இந்த சிலை உடைப்பு விவ­கா­ரத்தில் சம்­பந்­தப்­பட்ட ஏனை­யோரை பொலிசார் கைது செய்­தனர். இத­னை­விட அதே திக­தியில் யட்­டி­நு­வர ஸ்ரீ தொடங்­வல நாக விகாரை வளா­கத்­தி­லுள்ள புத்தர் சிலை­யொன்றும் தாக்கி சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அச்­சம்­பவம் தொடர்பில் ஸ்தலத்­துக்கு சென்­றுள்ள கண்டி மற்றும் பேரா­தனை பொலிஸார், தாக்­கப்­பட்ட புத்தர் சிலையை தமது பொறுப்பில் எடுத்­துள்­ளனர். அத்­துடன் விகா­ரையின் சி.சி.ரி.வி. கண்­கா­ணிப்பு கமெரா பதி­வு­க­ளையும் பெற்று விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இத­னை­விட இதனை அண்­மித்த தினத்தில் குரு­நாகல் – பொத்­து­ஹர பகு­தியில் உரு­வச்­சி­லைகள் சில சேத­மாக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லையில் கைதான சந்­தேக நபர்­க­ளிடம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணைகள் மற்றும் சில சான்­று­க­ளுக்­க­மைய வெலம்­பொட, மாவ­னெல்லை மற்றும் பொத்து­ஹர சம்­ப­வங்­க­ளுடன் ஒரே குழுவே தொடர்­பு­பட்­டுள்­ள­தாக பொலிசார் சந்­தே­கிக்­கின்­றனர். அதன்­ப­டியே  மாவ­னெல்லை விவ­கா­ரத்தில் கைதான 7 பேரையும் பொத்து­ஹர சம்­ப­வத்­துக்கு பொல்­க­ஹ­வல நீதி­மன்­றிலும், வெலம்­பொட சம்­ப­வத்­துக்கு கம்­பளை நீதி­மன்­றிலும் ஆஜர்­செய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.