சவுதி அரேபியாவின் ஸ்தாபக தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி அவர்கள் விடுக்கும் செய்தி
இன்று, சவுதி அரேபியா ஒரு சிறந்த மற்றும் இதயபூர்வமான நிகழ்வைக் கொண்டாடுகிறது, இது ஆண்டு தோறும் பெப்ரவரி 22 ஆம் திகதி இடம்பெறும் ஸ்தாபக தினமாகும். இந்தவரலாற்றுச் சிறப்புமிக்க நாள், கி.பி 1727 ஆம் ஆண்டு இமாம்முஹம்மது பின் சவுத் அவர்கள் மூலம் முதன் முதலாக சவூதிஅரேபிய தேசம் ஸ்தாபிக்கப்பட்டதை எம் மனக்கண் முன்கொண்டு வருகிறது. மேலும், 1824 ஆம் ஆண்டு, இமாம் துர்கிபின் அப்துல்லா பின் முஹம்மது பின் சவுத் அவர்கள்இரண்டாவது சவுதி அரசை நிறுவி, ரியாத்தை அதன்தலைநகராகத் தேர்ந்தெடுத்தார். 1902 ஆம் ஆண்டில், மன்னர்அப்துல் அஸீஸ் பின் அப்துல் ரஹ்மான் ரியாத்தை தலைநகராகக்கொண்டு மூன்றாவது சவுதி அரசை நிறுவினார். 1932 ஆம்ஆண்டில், சவுதி அரேபியா இராச்சியம் ஒன்றிணைக்கப்பட்டது, மேலும் நீதி, ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் பெறுமானங்களை சுமந்து செல்லும் ஒரு சிறந்த தேசத்தின்பயணம் தொடங்கியது.
ஸ்தாபக தினம் என்பது நமது தேசிய நாட்காட்டியில் ஒரு நாள்மட்டுமல்ல, மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலான வளமானகலாசார மரபின் கதையும், வலுவான மற்றும் உறுதியானதேசத்தைக் கட்டியெழுப்ப பாடுபட்ட விசுவாசமான மனிதர்களால் வழிநடத்தப்பட்ட போராட்டத்தின் கதையும் ஆகும். இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் மற்றும் அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான பட்டத்து இளவரசர் முகமது பின்சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் ஆகியோரின் தலைமையில் நமது சாணக்கியமிக்க தலைமையின் கீழ், எதிர்காலத்தை நோக்கி சீராக நகரும் ஒரு நாட்டை நிறுவியநமது ஆழமான வேர்களைப் பற்றி நாம் பெருமை கொள்ளும்நாள் இதுவாகும்.
இந்த மகத்தான சந்தர்ப்பத்தில், அனைத்து மட்டங்களிலும்சவுதி அரேபியா செய்த சாதனைகளின் பெருமையை புதுப்பிக்கிறோம். நமது நாடு முன்னேற்றத்திற்கும் மற்றும் செழிப்புக்குமான உலகளாவிய முன்மாதிரியாக மாறியுள்ளது. மட்டுமன்றி விரிவான மற்றும் நிலையான அபிவிருத்தியை அடைய முயலும் சவுதி அரேபியாவின் தொலைநோக்குப்பார்வை 2030 மூலம் ஒரு இலட்சியப் பார்வையை பிரதிபலிக்கும்ஒரு உறுதியான அடித்தளமாகவும் மாறியுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ்,, பட்டத்துஇளவரசர் மற்றும் பிரதமர் மாட்சிமை தங்கிய இளவரசர் முகமதுபின் சல்மான் பின் அப்துல் அஸீஸ், மற்றும் தாராளமனப்பான்மை கொண்ட சவுதி மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதன் சாணக்கியமிக்க, சாதுரியமான தலைமையின் கீழ் சவுதி அரேபியா மென்மேலும் முன்னேற்றமடையவும், அபிவிருத்தி அடையவும் வேண்டுமென வாழ்த்துகிறேன்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இலங்கை குடியரசுக்கும் அதன் சிநேகபூர்வமான மக்களுக்கும் எங்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுடன் எங்களுக்கு நெருங்கிய வரலாற்று உறவுகள்உள்ளன. மேலும், நமது இரு நாடுகள் மற்றும் இரு நாட்டுமக்களின் நலனுக்காக அனைத்துத் துறைகளிலும் இந்தஉறவுகளை வலுப்படுத்த நாங்கள் இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறோம். – Vidivelli