தவுலகலவில் மாணவி கடத்தல் விவகாரம் : பிரதான சந்தேக நபர், சாரதி, நண்பருக்கு 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்

0 12

(எப்.அய்னா)
கண்டி, தவு­ல­கல பொலிஸ் பிரிவில், மேல­திக வகுப்­புக்­காக சென்­று­கொண்­டி­ருந்த போது கடத்­தப்­பட்ட பாட­சாலை மாணவி ஆபத்­தின்றி பொலி­ஸாரால் மீட்­கப்­பட்ட நிலையில், கடத்­தலின் பிர­தான சந்­தேக நப­ரையும் அவ­ரது நண்பர் மற்றும் வேன் சார­தியையும் எதிர்­வரும் 27 ஆம் திக­தி­ வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க கம்­பளை நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

வேன் சாரதி நேற்று முன் தினம் (14) நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­ட­துடன் தடுப்புக் காவலின் கீழ் விசா­ரிக்­கப்­பட்ட பிர­தான சந்­தேக நபர் மற்றும் அவ­ரது நண்பர் ஆகியோர் நேற்று (15) நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். இதன்­போதே கம்­பளை நீதிவான் காஞ்­சனா கொடித்­து­வக்கு இவர்­களை 27 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

கடத்­தலின் போது வேனின் சார­தி­யாக செயற்­பட்ட கம்­பளை, கஹட்­ட­பிட்­டிய பகு­தியைச் சேர்ந்த மொஹம்மட் அன்வர் சதாம், பிர­தான சந்­தேக நப­ரான மொஹம்மட் நாசிர், அவ­ரது நண்பர் ஆகி­யோரே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்­டுள்­ளனர்.

அத்­துடன் இந்த கடத்­த­லோடு தொடர்­பு­பட்ட அனை­வ­ரையும் கைது செய்­துள்­ள­தாக தவு­ல­கல பதில் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி சம்பத் ரண­சிங்க குறிப்­பிட்டார்.

பாட­சாலை மாணவி ஒரு­வரை கறுப்பு நிற வேனில் வந்த சிலர் கடந்த 12 ஆம் திகதி பலாத்­கா­ர­மாக கடத்திச் சென்ற விவ­காரம் தொடர்பில் விரி­வான விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன‌. அதன்­படி, கடத்­தலின் பிர­தான சந்­தேக நபர், மாண­வியின் உற­வினர் என அடை­யாளம் காணப்­பட்ட நிலையில், அவர் கடத்­தப்­பட்ட தினம் மாலை முதல் மாண­வியின் தந்­தைக்கு தொலை­பேசி அழைப்­புக்­களை எடுத்­தி­ருந்­த­தாக பொலிஸார் கூறினர். அத்­துடன் மாண­வியும் தனது தந்­தை­யுடன் தொலை­பே­சியில் பேசி தன்னை காப்­பாற்­று­மாறு கோரி­யுள்­ள­தாக பொலிஸார் கூறினர்.

இந்த நிலையில் ஏற்­க­னவே, 12 ஆம் திகதி முதலில் கைது செய்­யப்­பட்ட வேனின் சார­தி­யிடம் தடுப்புக் காவல் விசா­ர­ணையின் போது பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட தக­வல்கள் மற்றும், தொலை­பேசி கோபுரத் தக­வல்கள், சந்­தேக நபர் பயன்­ப­டுத்­திய தொலை­பே­சியின் EMI இலக்­கத்தை மைய­ப்ப­டுத்­திய விசா­ர­ணை­களில், பிர­தான சந்­தேக நபர், அம்­பாறை பகு­தியில் தங்­கி­யி­ருப்­பதை பொலிஸார் கண்­ட­றிந்­தனர்.

இந் நிலை­யி­லேயே அம்­பாறை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு இது குறித்த தக­வல்கள் பரி­மாற்­றப்­பட்ட நிலையில், அந்த தக­வல்­களை மையப்­ப‌­டுத்தி, 13 ஆம் திகதி காலை, அம்­பாறை பஸ் தரிப்பு நிலை­யத்தில் வைத்து மாண­வியை மீட்டு, பிர­தான சந்­தேக நபரைக் கைது செய்­த­தாக பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் புத்­திக மன­துங்க குறிப்­பிட்டார்.
இத­னை­ய­டுத்து நேற்று முன் தினம் கடத்­த­லுடன் தொடர்­பு­பட்ட பிர­தான சந்­தேக நபரின் நண்­பரை கம்­பளை, ஜய­மா­புர பகு­தியில் வைத்து தவு­ல­கல பொலிஸார் கைது செய்­தனர்.

விசா­ர­ணை­களின் போது, கடத்­தலின் பின்னர் பிர­தான சந்த்­தேக நபரின் நண்­பரும், சார­தியும் பொலன்­ன­ருவை வரை உடன் சென்­றுள்­ள­மையும் அங்­கி­ருந்து இரு­வரும் கம்­ப­ளைக்கு திரும்­பி­யுள்­ள­மையும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் சந்தேக நபர்கள் மீது கடத்தல், கப்பம் கோரல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைகள் இடம்பெறுவதுடன் வாக்கு மூலங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடப்பதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.