இலங்கையில் இஸ்ரேலிய மதஸ்தலங்களா?

அனுமதியளித்தது யார் என முஜிபுர் ரஹ்மான் கேள்வி

0 15

(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
நாட்டில் பல்­வேறு பிர­தே­சங்­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் இஸ்ரேல் இனத்­த­வர்­களின் மதஸ்­த­லங்கள் அல்­லது அவர்­களின் கலா­சார நிலை­யங்­க­ளுக்கு பாது­காப்பு அமைச்­சினால் அனு­மதி வாங்கி அவை நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. பொலிஸ் மற்றும் விசேட அதி­ர­டிப்­படை 24 மணி நேரம் பாது­காப்பு வழங்கி அமைக்­கப்­படும் இந்த கட்­டி­டங்கள் என்ன? என்­பதை அர­சாங்கம் தெளி­வு­ப­டுத்த வேண்டும் என எதிர்க்­கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை பிர­த­ம­ரிடம் கேட்­கப்­படும் கேள்வி நேரத்தின் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,
எமது நாட்டில் தெரி­வு­செய்­யப்­பட்ட சில அர­சாங்­கங்கள் பலஸ்தீன் பிரச்­சி­னை­யை­விட இஸ்­ரே­லுடன் தொடர்­பு­களை வைத்­துக்­கொள்ள மிகவும் ஆர்­வத்­துடன் செயற்­பட்டு வந்­தது. இதன்­மூலம் இஸ்­ரே­லுடன் வைத்­துக்­கொண்ட சில தொடர்­புகள் கார­ண­மாக, பலஸ்தீன் தொடர்பில் எமது நாடு பின்­பற்­றி­வந்த கொள்­கை­க­ளுக்கு சர்­வ­தேச ரீதியில் எங்­க­ளுக்கு இருந்­து­வந்த நற்­பெ­யரும் தற்­போது பாதிக்­கப்­பட்டு வரு­கி­றது. குறிப்­பாக மத்­திய கிழக்கு நாடு­களில் எமது நாடு தொடர்பில் இருந்­து­வந்த தொடர்பும் தற்­போது ஓர­ளவு பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

எமது நாட்டில் பல்­வேறு பிர­தே­சங்­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் இஸ்ரேல் இனத்­த­வர்­களின் மதஸ்­த­லங்கள் அல்­லது அவர்­களின் கலா­சார நிலை­யங்­க­ளுக்கு பாது­காப்பு அமைச்­சினால் அனு­மதி வழங்கி அவை நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. மாத்­தறை வெலி­கம பிர­தே­சத்தில், தெஹி­வளை அல்விஸ் பிர­தே­சத்தில் இவர்­களின் மத நிலையம் அமைக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதே­போன்று கொழும்பு 7 இல் ரெட் சினி­ம­னுக்கு முன்னால் பாரிய கட்­டி­ட­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. இந்த கட்­டி­டங்­களை நிர்­மா­ணிக்கும் இடங்­களில் பொலிஸ் மற்றும் விசேட அதி­ர­டிப்­படை 24 மணி நேரம் பாது­காப்பு வழங்­கப்­பட்டு வரு­கி­றது.

பொலிஸ் மற்றும் விசேட அதி­ர­டிப்­படை 24 மணி நேரம் பாது­காப்பு வழங்கி அமைக்­கப்­படும் இந்த கட்­டி­டங்கள் என்ன? இலங்­கையில் யூதர்கள் இல்லை. அவ்­வாறு இருக்­கையில் அவர்­களின் மத வழி­பாட்டு இந்­த­ளவு பாரிய கட்­டிடம் எதற்­காக என கேட்­கிறோம்? கடந்த ஒரு தினத்தில் அல்விஸ் பிளேசில் அமைக்­கப்­படும் கட்­டி­டத்­துக்கு அரு­கா­மையால் நடந்து சென்ற பல்­க­லைக்­க­ழக மாணவன் ஒரு­வர் சந்­தே­கத்தின் பேரில் கைது­செய்யப்பட்டு தெஹி­வளை பொலிஸில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தார். அந்த மாணவன் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தியே விடு­விக்­கப்­பட்டார். அந்­த­ளவு பலத்த பாது­காப்பு இஸ்­ரே­லி­யர்­களால் அமைக்­கப்­படும் கட்­டி­டங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அதனால் பலஸ்தீன் ஆத­ரவு அர­சாங்கம் என்­ற­ வ­கையில், பலஸ்தீன் மக்­களின் விடு­த­லைக்­காக எங்­க­ளுடன் இணைந்து வீதியில் இறங்கி போரா­டி­ய­வர்கள் என்­ற­வ­கையில் அமைக்­கப்படும் இந்தக் கட்­டி­டங்கள் தொடர்பில் அர­சாங்கம் எடுக்­கப்­போகும் நட­வ­டிக்கை என்ன? மறு பக்­கத்தில் இது நாட்டின் தேசிய பாது­காப்­புக்கும் அச்­சு­றுத்­த­லாகும். ஏனெனில் மொசாட் இங்கு வரு­வது என்­பது அது நல்ல விட­ய­மல்ல. வெலி­க­மவில் முஸ்லிம் மக்கள் இருக்கும் இடத்­தி­லேயே அவர்­களின் நிலையம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதனால் இது­தொ­டர்­பாக அர­சாங்கம் எடுக்­கப்­போகும் நட­வ­டிக்கை என்ன என்­பது தொடர்பில் அர­சாங்கம் தெளி­வு­ப­டுத்த வேண்டும்.

அதே­போன்று பலஸ்­தீனில் பொது மக்­களை, சிறு­வர்­களை கொலை­செய்யும் இஸ்ரேல் இரா­ணு­வத்­தினர் எமது நாட்­டுக்குள் நுழை­கி­றார்கள். குறிப்­பாக அவர்கள் பலஸ்­தீனில் மேற்­கொள்ளும் மனி­தா­பி­மா­­ன­மற்ற செயல்கள் கார­ண­மாக உள­ரீ­தியான ஆறு­தலை பெறு­வ­தற்கே வரு­கின்­றனர். இதன் கார­ண­மாக அதி­க­மான நாடுகள் இஸ்ரேல் சுற்­றுலா பய­ணிகள் வரு­வதை நிறுத்தி இருக்­கின்­றன. தென்­ஆ­பி­ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மாலைத் தீவு போன்ற நாடுகள் நிறுத்தி இருக்கின்றன. அதேநேரம் இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்துள்ளதால் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா பயணிகளின் வருகை எமது நாட்டில் குறைவடைந்துள்ளது.

அதனால் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுடன் இஸ்ரேல் இராணுவத்தினர் வருவதை தடுப்பதற்கு எதிர்காலத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என கேட்கிறோம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.