சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்க

ரிஷாட் எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்

0 11

கடந்த டிசம்பர் மாதம் இலங்­கையில் தஞ்­ச­ம­டைந்த மியன்மார் நாட்டின் ரோஹிங்­கியா அக­திகள் தொடர்பில், சர்­வ­தேச சட்­டத்­துக்கு அமைய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாட் பதி­யுதீன், ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­விடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

மேற்­படி கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, ‘இலங்­கையில் புக­லிடம் கோரி வரும் ரோஹிங்­கியா அக­தி­களை திருப்பி அனுப்பும் தீர்­மானம் குறித்து மிகுந்த கவ­லை­யுடன் உங்­க­ளுக்கு அறியத் தரு­கின்றேன். தங்கள் நாட்டில் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளா­கி­யி­ருக்கும் இந்த மக்­களின் நல்­வாழ்வைக் கருத்­திற்­கொண்டு, சர்­வ­தேச மனி­தா­பி­மான கொள்­கை­களை நாம் கடைப்­பி­டிக்க வேண்டும் என்­பது எனது உறு­தி­யான நம்­பிக்­கை­யாகும்.

மியன்­மாரில் நிலவும் கடு­மை­யான வன்­முறை மற்றும் அடக்­கு­முறை கார­ண­மாக, ரோஹிங்­கியா மக்கள் நம் நாட்டில் தஞ்சம் புகுந்­துள்­ளனர் என்­பது உங்­க­ளுக்குத் தெரியும். அவர்கள் இலங்­கைக்கு வந்­தி­ருப்­பது, உண்­மை­யா­கவே உயிர் அச்­சு­றுத்­த­லுக்­காவே அன்றி, பொரு­ளா­தார புலம்­பெ­யர்ந்­தோ­ராக அல்ல. ஐக்­கிய நாடுகள் சபை உட்­பட சர்­வ­தேச சமூகம் இந்த நபர்­களின் அவ­ல­நி­லையை அங்­கீ­க­ரிக்­கி­றது, மேலும் மனித உரி­மைகள் மற்றும் கண்­ணி­யத்தை மதிக்கும் ஒரு நாடாக, அவர்கள் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய நேரத்தில், அவர்­க­ளுக்­கான பாது­காப்பை வழங்­கு­வது நம்­மீது கட­மை­யாகும்.

அக­திகள் மீதான சர்­வ­தேச சட்­டங்கள் மற்றும் மர­பு­க­ளுடன் எங்கள் நட­வ­டிக்­கைகள் ஒத்­துப்­போ­வதை உறுதி செய்ய வேண்டும், principle of non-refoulement – தனி­ந­பர்கள் தங்கள் உயி­ருக்கு அல்­லது சுதந்­தி­ரத்­திற்கு அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொள்ளும் இடங்­க­ளுக்கு திருப்பி அனுப்­பு­வதைத் தடை செய்தல், இந்தக் கோட்­பாட்டை நிலை­நி­றுத்­து­வதன் மூலம், பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய நபர்­களின் உரி­மை­களைப் பாது­காப்­பது மட்­டு­மன்றி, சர்­வ­தேச மனி­தா­பி­மான தரங்­க­ளுக்கு இலங்­கையின் அர்ப்­ப­ணிப்பை நிரூ­பிக்­கவும் இது உதவும்.

வர­லாற்று ரீதி­யாக, இலங்கை துன்­பு­றுத்­த­லுக்கு ஆளா­கி­ய­வர்­க­ளுக்கு புக­லி­ட­ம­ளிக்கும் ஒரு நாடாக இருந்து வரு­கி­றது. பல இலங்­கை­யர்கள் யுத்த காலங்­களில் வேறு நாடு­களில் அக­தி­க­ளாக வாழ்ந்­துள்­ளனர். ரோஹிங்­கியா அக­தி­களின் தற்­போ­தைய நிலைமை, கடந்த காலத்தில் ஒரு தேச­மாக நாம் எதிர்­கொண்ட போராட்­டங்­களை பிர­தி­ப­லிக்­கி­றது என்­பதை நினை­வில்­கொள்­வது மிகவும் முக்­கி­ய­மா­னது. மியன்­மாரில் இந்த மக்­களின் பாது­காப்பு மற்றும் மனித உரி­மைகள் இன்னும் ஆபத்தில் உள்ள நிலையில், அவர்­களை வலுக்­கட்­டா­ய­மாக மியன்­மா­ருக்கு திருப்பி அனுப்பும் முடிவை மறு­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு கேட்­டுக்­கொள்­கிறேன்.

அதே­போன்று, இந்த அக­திகள் இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும் வரை, அவர்­களை மரி­யா­தை­யு­டனும் கண்­ணி­யத்­து­டனும் நடத்த வேண்டும் எனவும் அன்­புடன் கேட்­டுக்­கொள்­கின்றேன். அவர்கள் கைதி­க­ளாகக் கரு­தப்­ப­டாமல், நமது அன்பும் ஆதரவும் தேவைப்படும் மக்களாகக் கருதப்பட வேண்டும்.
மேலும், இந்த அகதிகள் தங்களுக்கு மீள்குடியேறக்கூடிய பொருத்தமான, பாதுகாப்பானதாகக் கருதப்படும் மூன்றாவது நாட்டை அடையாளம் காண்பதற்கு, ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒத்துழைப்பது பொருத்தமானதாக இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.