கொவிட் 19 ஜனாஸாக்கள் பலவந்தமாக தகனம் செய்த விவகாரம்: பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்குக

சபையில் தனி நபர் பிரேரணை கொண்டு வருகிறார் ரவூப் ஹக்கீம்

0 24

கொவிட் 19 தொற்று நோயினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­ஸாக்­க­ளை­ ப­லாத்­கா­ர­மாகத் தகனம் செய்­தமை தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை மேற்­கொண்டு பொருத்­த­மான விதந்­து­ரை­களைச் சமர்ப்­பிப்­ப­தற்­கான பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வொன்றை நிய­மிக்­கு­மாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் சட்­டத்­த­ரணி ரவூப் ஹக்கீம் பாரா­ளு­மன்­றத்­துக்குத் தனி­நபர் பிரே­ர­ணை­யொன்றை முன்­வைத்­துள்ளார்.

இப்பிரேரணை சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி குறிப்­பி­டப்­ப­டாத நிலையில் பாரா­ளு­மன்ற ஒழுங்கு புத்­த­கத்தில் இடம்பெற்­றுள்­ளது.

கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் பிரஸ்­தாப பிரே­ர­ணையில் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது,

கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் சட­லங்­களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்­கான இய­லுமை உள்­ள­தென உலக சுகா­தார ஸ்தாபனம் அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யி­ருந்­தது. இந்­நி­லையில், மேற்­படி சட­லங்களை நல்­ல­டக்கம் செய்­வதால் நிலக்கீழ் நீரில் வைரஸ் கலப்­ப­தற்­கான அபாய நிலை உள்­ள­தாகக் கூறி கடந்த அர­சாங்­கத்­தினால் எடுக்­கப்­பட்ட கொள்கை அள­வி­லான தீர்­மா­னத்­தின்­படி செயற்­பட்­டது. அந்த சட­லங்­களை உற­வி­னர்­களின் உடன்­பா­டின்றி தகனம் செய்­யப்­பட்­டது. பின்னர் அவ்­வாறு எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தின் பிர­காரம் செயற்­பட்­டமை சரி­யா­ன­தல்ல, தவறு என்று தெரி­வித்து அர­சாங்­கமே உத்­தி­யோ­க­பூர்­வ­மாக மன்­னிப்பு கோரி­யி­ருந்­தது. எனினும், இந்த தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் உற­வி­னர்­க­ளுக்கு தமது சமய ரீதி­யான இறுதிக் கிரி­யை­களை மேற்­கொள்­வ­தற்கோ அல்­லது குறித்த சட­லங்­களை பார்­வை­யி­டு­வ­தற்கோ சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வில்லை. இது குறித்து உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச ரீதியில் எழுந்த எதிர்ப்­புகள் மற்றும் அழுத்­தங்கள் கார­ண­மாக தகனம் செய்­வ­தற்குப் பதி­லாக ஓட்­ட­மா­வ­டியில், மஜ்மா நகர் எனப்­படும் தனி­மை­யான பிர­தே­சத்தில் மேற்­படி சட­லங்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டன.

இருந்­த­போ­திலும், குடும்ப உற­வி­னர்கள் இறுதி கட­மை­களைச் செய்­வ­தற்கோ, மரி­யாதை செலுத்­து­வ­தற்கோ, உரிமை மறுக்­கப்­பட்­டது. இது­தொ­டர்­பிலும், இந்த விவ­கா­ரத்தில் அர­சாங்கம் பார­தூ­ர­மான தவ­று­களை புரிந்­துள்­ள­மை­யி­னாலும் குறிப்பிட்ட விடயங்களை உரிய முறையில் விசாரணை செய்து பொருத்தமான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.