முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் அமைச்சரவையில் பேசப்படவில்லை

அடுத்த சபை அமர்வில் இறுதி முடிவு என்கிறது அரசாங்கம்

0 37

முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் கடந்த திங்­க­ளன்று இடம்­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்தின் போது எந்­த­வொரு பேச்­சு­வார்த்­தையும் இடம்­பெ­ற­வில்லை என தெரி­வித்­துள்ள அர­சாங்­கத்தின் ஊடகப் பேச்­சாளர் டாக்டர் நளிந்த ஜய­திஸ்ஸ, அடுத்த பாரா­ளு­மன்ற அமர்­வின்­போது இது குறித்து இறுதி முடிவு எடுக்­கப்­படும் எனவும் தெரி­வித்­துள்ளார்.

அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று முன்­தினம் இடம்­பெற்ற போது ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

சுகா­தாரம் மற்றும் ஊடகத் துறை அமைச்­சரும் அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரு­மான டாக்டர் நளிந்த ஜய­திஸ்ஸ இது குறித்து மேலும் தெரி­விக்­கையில், எமது நாட்டில் அமுலில் இருக்கும் மலை­நாட்டு திரு­மண சட்டம், முஸ்லிம் திரு­மண மற்றும் திரு­மண முறிவுச் சட்டம் மற்றும் தேச வழமை சட்டம் போன்ற தனியாள் சட்­டங்கள் தொடர்பில் இது­வ­ரையில் அமைச்­ச­ர­வையில் பேசப்­ப­ட­வில்லை.

சமூக மட்­டத்தில் இது குறித்து பேசப்­பட்டு வரு­வ­தனால் எதிர்­கா­லத்தில் நீதி விவ­காரம் தொடர்­பான ஆலோ­சனை குழுவில் கலந்­து­ரை­யாடி, உரிய தரப்­பு­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்தி ஒரு தீர்­மா­னத்­துக்கு வர முடியும்.

அத்­துடன், அடுத்த பாரா­ளு­மன்ற அமர்­வின்­போது இது விடயம் தொடர்­பாக நீதி­ய­மைச்­சரால் யோசனை முன்­வைக்­கப்­பட்டு விவா­தங்­களின் பின்னர் இறுதி தீர்­மானம் மேற்­கொள்­ளப்­படும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.