மாவ­னெல்­லையில் ஆர்ப்பாட்டங்களுக்கு ஜனவரி 11 வரை தடை

மாவனெல்லை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு

0 971

மாவ­னெல்ல பகு­தி­களில் புத்தர் சிலைகள் சேத­மாக்­கப்­பட்­டமை தொடர்­பாக எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் பௌத்த பிக்­குகள் அடங்­கிய குழு­வி­னரால் கடந்த 29ஆம் திகதி நடாத்­த­வி­ருந்த ஊர்­வ­லத்­திற்கு மாவ­னெல்லை மஜிஸ்திரேட் நீதி மன்­றத்தால் தடை­யுத்­த­ர­வொன்று பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

குற்­ற­வியல் வழக்கு அமு­லாக்கல் சட்­டத்தின் 106 (1) உறுப்­பு­ரைக்­க­மைய மேற்­கொள்­ளப்­பட்ட மேற்­படி நீதி­மன்ற பணிப்­புரை வரு­மாறு: 2018.12. 28 ஆம் திகதி மாவ­னெல்ல பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி எம்.டீ.டீ. நிலங்க மூலம் மாவ­னெல்ல ம/உ வழக்கு இலக்கம் பீ.11333/2018 இன் கீழ் அறிக்­கை­யி­டப்­பட்ட கார­ணி­க­ளுக்­க­மைய, மெதி­ரி­கி­ரியே புஞ்­ஞ­சார தேரரின் தலை­மையில் 2018.12.29 ஆம் திகதி மாவ­னெல்ல நக­ரத்தில் நடாத்­து­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஆர்ப்­பாட்டப் பேர­ணியால் முஸ்­லிம்­க­ளுக்கும் சிங்­கள மக்­க­ளுக்கும் இடையே குழப்­பங்கள் விளை­யக்­கூ­டிய சாத்­தி­யங்கள் உரு­வா­கலாம்  என்று நீதி­மன்றம் கரு­து­கி­றது.

அதனால் மேலே குறிப்­பி­டப்­பட்ட ஆர்ப்­பாட்ட நிகழ்வை நிறுத்­து­மாறு 1979 / 15ஆம் இலக்க குற்­ற­வியல் வழக்கு அமு­லாக்கல் சட்­டத்தின் 106(1) உறுப்­பு­ரைக்­க­மைய மெதி­ரி­கி­ரியே புஞ்­ஞ­சார தேரர் ஆகிய உங்­க­ளுக்கும் உங்­களைப் பின் தொடர்­வோ­ருக்கும் 2018-.12-.29 ஆம் திகதி முதல் 2019.-01-.11 ஆம் திக­தி­வரை ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­துதல், ஏற்­பாடு செய்தல், ஒன்று கூடுதல், ஆர்ப்­பாட்டக் கூட்­டங்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வது போன்­ற­வற்றில் ஈடு­ப­டா­தி­ருக்­கவும் புஞ்­ஞ­சார தேரர் ஆகிய உங்­க­ளுக்கும் உங்­களைப் பின் தொடர்­வோ­ருக்கும் இத்தால் பணிப்­புரை விடுக்­கின்றேன் என்று மாவ­னெல்ல மஜிஸ்திரேட் நீதி­மன்ற நீதி­ப­தியின் பணிப்­பு­ரையில் தெரி­விக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.