எதிர்க்கட்சி முன்வரிசையில் 5 முஸ்லிம் உறுப்பினர்கள்

தவிசாளர் குழுவில் இம்ரான் மகரூப்

0 76

(எம்.ஆர்.எம்.வசீம்)
பாரா­ளு­மன்­றத்தில் எதிர்­க்கட்சிப் பக்­கத்தில் முன்­வ­ரி­சை­யி­லுள்ள 20 ஆச­னங்­களில் ஐந்து ஆச­னங்கள் முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­தோடு, பாரா­ளு­மன்ற நிலை­யியற் கட்­டளை 143 இன் பிர­காரம் பத்­தா­வது பாரா­ளு­மன்­றத்தின் முத­லா­வ­து­கூட்­டத்­தொ­டரின் போது சேவை­யாற்­று­வ­தற்­கான தவி­சாளர் குழாத்­திற்கு உள்­ள­டக்­கு­வ­தற்கு உறுப்­பி­னர்கள் பெய­ரி­டப்­பட்­டனர். இதில், திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்ளார்.
10 ஆவது பாரா­ளு­மன்­றத்தின் 2 ஆவது அமர்வு நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை கூடிய நிலையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான ஆச­னங்கள் பெயர் குறிக்­கப்­பட்டு ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தன.

இதில் எதிர்­கட்­சிப்­பக்­கத்தில் முன்­வ­ரி­சை­யி­லுள்ள 20 ஆச­னங்­களில் ஐந்து முஸ்லிம் உறுப்­பி­னர்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஐக்­கிய மக்கள் சக்­தியின் கபிர் ஹாசிம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் மற்றும் அக்­கட்சி உறுப்­பினர் தாஹிர், இலங்கை தொழி­லாளர் கட்­சியின் காதர் மஸ்தான் ஆகி­யோ­ருக்கு முன் வரிசை ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு, ஏனைய 15 ஆச­னங்­களில் 7 தமிழ் உறுப்­பி­னர்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இதில் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியை சேர்ந்த சிறிதரன், சாணக்­கியன், யாழ். மாவட்ட சுயேச்­சைக்­குழு 17 இன் அர்ச்­சுனா இரா­ம­நாதன், அகில இலங்கை தமிழ் காங்­கி­ர­ஸின் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், ஜன­நா­யகத் தமிழ் தேசிய கூட்­ட­ணியின் செல்வம் அடைக்­க­ல­நாதன், ஐக்­கிய தேசியக் கட்­சியின் (இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ்) ஜீவன் தொண்­டமான், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் திகாம்­பரம் ஆகிய 7 பேருக்கு ஆச­னங்கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன.

இத­னி­டையே, ஆளும் தரப்பில் அமைச்சர் இரா­ம­லிங்கம் சந்­தி­ர­சே­க­ர­னுக்கு மாத்­திரம் சிறு­பான்மை பிர­தி­நி­தி­யாக முன்­வ­ரிசை ஆசனம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே, பத்­தா­வது பாரா­ளு­மன்­றத்தின் முத­லா­வ­து­கூட்­டத்­தொ­டரின் போது சேவை­யாற்­று­வ­தற்­கான தவி­சாளர் குழு நிய­மிப்­பட்­டுள்­ளது. இதில் லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, இம்ரான் மகரூப், திரு­மதி ரோஹினி குமாரி விஜேரத்ன, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கெளஷல்யா ஆரியரத்ன, சேன நாணாயக்கார, சானக மாதுகொட, சஞ்ஜீவ ரணசிங்ஹ, அரவிந்த செனரத், கிட்ணன் செல்வராஜ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் நேற்றுமுன்தினம் அறிவித்தார். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.