அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்திருக்கும் பிரதேசங்களுக்கு நிவாரணங்களை வழங்குக

அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

0 11

தொழில்­நுட்ப தக­வல்­களை மாத்­திரம் அடிப்­ப­டை­யாக கொண்டு செயற்­ப­டாமல் அனர்த்­தங்­க­ளுக்கு முகம்­கொ­டுத்­துள்ள பிர­தே­சங்­க­ளுக்குச் சென்று தக­வல்­களை பெற்றுக் கொண்டு மக்­க­ளுக்கு அவ­சி­ய­மான நிவா­ர­ணங்­களை உட­ன­டி­யாக வழங்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வு­றுத்தல் விடுத்துள்ளார்.

மேலும் உயர்­தர பரீட்­சைக்குத் தோற்றும் மாண­வர்­களின் மன­நிலை மற்றும் வச­தி­களை கவ­னத்தில் கொண்டு உரிய செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­துடன் கட­லுக்குச் சென்­றி­ருக்கும் மீன­வர்­களை பாது­காப்­பாக கரை சேர்க்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் எனவும் உரிய அதி­கா­ரி­க­ளுக்கு ஜனா­தி­பதி பணிப்­புரை விடுத்தார்.
அனர்த்­தங்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு உட­னடி நிவா­ர­ணங்கள் வழங்­கு­வது தொடர்பில் அரச அதி­கா­ரி­க­ளுடன் நேற்று (27) ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போதே ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க இதனைத் தெரி­வித்தார்.

அனர்த்­தங்­களால் பாதிக்­கப்­பட்ட மக்­களை பாது­காப்­பான நிலை­யங்­களில் தங்க வைத்து தேவை­யான உணவு மற்றும் மல­ச­ல­கூட வசதி வழங்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் அந்த மக்­க­ளுக்கு உதவி வழங்கத் தேவை­யான அளவு நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்தார்.

அத்­துடன் அந்த மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்கு தேவை­யான நிதி ஒதுக்­கீட்டை மேற்­கொள்­ளு­மாறும் ஜனா­தி­பதி அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வு­றுத்தல் விடு­தத்தார்.
சீரற்ற கால­நிலை கார­ண­மாக அதிக ஆபத்­துள்ள வடக்­கு-­கி­ழக்கு மாகா­ணங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்­து­வது குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

உயர்­தர பரீட்­சைக்கு தோற்றும் மாண­வர்­களின் மன­நிலை மற்றும் நெருக்­க­டிகள் தொடர்பில் இதன்­போது கவனம் செலுத்­தப்­பட்­ட­துடன் அவ­சியம் ஏற்­படும் பட்­சத்தில் உயர்­தர பரீட்­சையை மேலும் காலம் தாழ்த்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் கல்வி அதி­கா­ரி­க­ளுக்கு ஜனா­தி­பதி ஆலோ­சனை வழங்­கினார்.

தற்­போது மீன்­பி­டிப்­ப­தற்­காக கட­லுக்குச் சென்­றி­ருக்கும் மீன­வர்கள் தொடர்பில் தேடி­ய­றிந்து அவர்­களை பாது­காப்­பாக கரை சேர்ப்­ப­தற்கு அவ­சி­ய­மான வச­தி­களை வழங்­கு­வது குறித்தும் கவனம் செலுத்­தப்­பட்­டது.

அனர்த்­தங்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு தர­மான சேவை­களை வழங்கி பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்­பி­லான தக­வல்­களை பெற்­றுக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க மேலும் அறி­வு­றுத்­தினார்.

பிர­தமர் கலா­நிதி ஹரிணி அம­ர­சூ­ரிய, பொது­மக்கள் பாது­காப்பு மற்றும் பாரா­ளு­மன்ற அலு­வல்கள் அமைச்சர் ஆனந்த விஜே­பால, ஜனா­தி­ப­தியின் செய­லாளர் கலா­நிதி சனத் நந்­திக குமா­நா­யக்க, பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் வைஸ் எயார் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவீ செனவிரத்ன, முப்படைகளின் பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ, காலநிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே.கருணாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும் இதன்போது கலந்து கொண்டனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.