முதற்தடவையாக சபைக்கு தெரிவான முஸ்லிம் உறுப்பினர்கள்

0 22

சுதந்­திர இலங்­கையின் 17 ஆவது பாரா­ளு­மன்றத் தேர்தல் அல்­லது இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் 10 ஆவது பாரா­ளு­மன்றத் தேர்தல் கடந்த 14 ஆம் திகதி இடம்­பெற்­று­மு­டிந்­தது. இதன்­படி புதிய பாரா­ளு­மன்­றத்தில் நேர­டி­யாக வாக்­க­ளிப்பு மூலம் தெரிவு செய்­யப்­படும் 196 பேரில் 138 புதிய முகங்கள் இந்த பாரா­ளு­மன்­றுக்கு தெரி­வா­கி­யுள்­ளனர். இவர்­களில் ஒன்­பது பேர் முஸ்­லிம்­க­ளாவர். தேசிய மக்கள் சக்தி சார்பில் 7 புதிய முகங்­களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் ஒரு­வரும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்பில் ஒரு­வ­ரு­மாக நேர­டி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். அத்­தோடு, தேசிய மக்கள் சக்தி இன்­னு­மொரு புது முகத்­திற்கு தேசி­யப்­பட்­டியல் வழங்­கி­யி­ருக்­கி­றது. இத­னி­டையே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தனது கட்­சிக்கு நேர­டி­யாக கிடைத்த தேசி­யப்­பட்­டி­யலை இன்னும் பகிர்ந்­த­ளிக்­க­வில்லை.

அத்­துடன், ஐக்­கிய மக்கள் சக்தி ஊடாக முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­சுக்கு தலா ஒவ்­வொரு தேசியப் பட்­டியல் ஆச­னங்கள் கிடைக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில், நேற்று மாலை வரை இறுதி செய்­யப்­பட்­டுள்ள அடிப்­ப­டையில் தெரி­வா­கி­யி­ருக்கும் முஸ்லிம் புதுமுகங்கள் பற்றிய சிறிய அறிமுகக் குறிப்பை இங்கு பார்க்கலாம்.

தொகுப்பு: றிப்தி அலி

மெளலவி முனீர் முழப்பர்:
மாத்­தறை மாவட்­டத்தின் வெலி­கம மற்றும் மீயெல்லை பிர­தே­சங்­களில் வாழ்ந்த இவர், வெலி­கம அரபா கனிஷ்ட வித்­தி­யா­லயம் மற்றும் மீயெல்ல அல் – மினா வித்­தி­யா­லயம் ஆகி­ய­வற்றின் பழை­ய­ மா­ணவ­ராவார்.

மினு­வாங்­கொ­டை­யினைச் சேர்ந்த ஆசி­ரி­யை­யினை திரு­மணம் செய்­துள்ள மௌலவி முழப்பர், தற்­போது திஹா­ரியில் வசித்து வரு­கின்றார்.

இவர், பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்­யாவில் தனது உயர் கல்­வி­யினை நிறை­வு­செய்­துள்­ள­துடன் பேரா­தனை பல்­க­லைக்­க­ழத்தின் கலைப் பட்­ட­தா­ரி­யு­மாவார்.

சமூக நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக பல்­வேறு செய­ற்­திட்­டங்­களை நாட­ளா­விய ரீதியில் இவர் மேற்­கொண்டு வரு­வ­துடன், “ திறந்த பள்­ளி­வாசல் ” எனும் செயற்­திட்­டத்தின் பிர­தான வள­வா­ள­ரா­கவும் செயற்­பட்டு வரு­கின்றார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் “நாம் மனி­தர்கள்” அமைப்­புடன் இணைந்து பணி­யாற்றி வரும் இவர், தேசிய மக்கள் சக்­தியின் ஸ்தாபக உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ராவர். அத்­துடன் அக்­கட்­சியின் தேசிய நிறை­வேற்றுக் குழுவின் உறுப்­பி­ன­ரா­கவும் பணி­யாற்றி வரு­கின்றார்.

இன நல்­லி­ணக்கம் மற்றும் சிறுவர் துஷ்­பி­ர­யோக ஒழிப்பு தொடர்­பான பல சர்­வ­தேச மாநா­டு­களில் இவர் பங்­கேற்­றுள்ளார். அரபு, சிங்­களம், தமிழ் மற்றும் ஆங்­கிலம் ஆகிய மொழி­களில் இவர் புல­மை­பெற்­றுள்ளார்.

சுமார் 5 சத­வீத முஸ்லிம் வாக்­கு­களைக் கொண்ட கம்­பஹா மாவட்­டத்தில் ஒரு இலட்­சத்து மேற்­பட்ட விருப்பு வாக்­கு­களை இவர் பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அர்கம் இல்யாஸ்:
மாத்­தறை மாவட்­டத்தின் வெலி­க­மை­யினை பிறப்­பி­ட­மாகக் கொண்ட அர்கம் இல்யாஸ், மாத்­தறை இல்மா முஸ்லிம் வித்­தி­யா­லயம், ராகுல வித்­தி­யா­லயம் ஆகி­ய­வற்றின் பழைய மாண­வ­ராவார். மொரட்­டுவ பல்­க­லைக்­க­ழ­கத்தின் கட்­டிடப் பொறி­யி­ய­லா­ள­ரான இவர், கடந்த 2012ஆம் ஆண்டு நடை­பெற்ற கல்விப் பொதுத் தரா­தர உயர் தரப் பரீட்­சையில் கணிதப் பிரிவில் தோற்றி நாட­ளா­விய ரீதியில் 110 ஆவது இடத்­தினைப் பெற்றார்.

வெலி­கம பிர­தே­சத்­தி­லுள்ள பல சிவில் மற்றும் சமூக அமைப்­புக்­க­ளுடன் இணைந்து இவர் பணி­யாற்றி வரு­கின்றார். மௌலவி முனீர் முழப்­பரின் அழைப்­பிற்­க­மைய கடந்த 2022ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்­தியில் இணைந்த இவர், அந்த ஆண்டு வேட்­பு­மனுக் கோரப்­பட்ட வெலி­கம பிர­தேச சபைக்­கான தேர்­தலில் கள­மி­றங்­கினார்.

50,000 க்கும் குறைவான முஸ்லிம் வாக்­கு­களைக் கொண்ட மாத்­தறை மாவட்­டத்தில் 53,000க்கு மேற்­பட்ட விருப்பு வாக்­கு­களைப் பெற்ற இவர், தேசிய மக்கள் சக்­தியின் மாத்­தறை மாவட்ட விருப்பு வாக்­குப்­பட்­டி­யலில் 4ஆம் இடத்­தினை பிடித்­துள்ளார்.

 

எம்.ஜே.எம்.பைசல்:
புத்­தளம், வீர­தோடை கிரா­மத்­தினை பிறப்­பி­ட­மா­கவும், வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இவர், கணித பாட ஆசி­ரி­ய­ராவார். வீர­தோடை முஸ்லிம் மகா வித்­தி­யாலயம் மற்றும் சியம்­ப­லா­கஸ்­கொ­டுவ மதீனா தேசிய பாட­சாலை ஆகி­ய­வற்றின் பழைய மாண­வ­ரான இவர், மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நீண்ட கால செயற்­பாட்­டா­ள­ராவார்.

சாதா­ரண குடும்­பத்­தினைச் சேர்ந்த இவர், நீண்ட கால­மாக சமூக சேவையில் ஈடு­பட்டு வரு­கின்றார். புத்­தளம் மாவட்­டத்­தி­லுள்ள சர்­வ­மத அமைப்­புக்­க­ளுடன் இவர் பணி­யாற்றி வரு­கின்றார். அத்­துடன் வீரத்­தோடை பிர­தே­சத்தில் இவர் ஒரு பிர­ப­ல­மான கணித பாட ஆசி­ரி­ய­ரு­மாவார்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முன்னாள் தலைவர் சோம­வன்ச அம­ர­சிங்­கவின் காலத்­தி­லி­ருந்து இக்­கட்­சி­யுடன் நெருங்கி பணி­யாற்றி வரு­கின்றார். இரண்டு பிர­தேச சபை தேர்­தல்­க­ளிலும் இரண்டு பாரா­ளு­மன்ற தேர்­தல்­க­ளிலும் இவர் போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டைந்­துள்ளார்.

கடந்த வாரம் நடை­பெற்ற தேர்தல் ஊடா­கவே முதற் தட­வை­யாக மக்கள் பிர­தி­நி­தி­யாக இவர் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார். இவர், தேசிய மக்கள் சக்­தியின் புத்­தளம் மாவட்ட செயற்­குழு உறுப்­பி­ன­ரு­மாவார். சுமார் 35 வரு­டங்­களின் பின்னர் புத்­தளம் மாவட்­டத்­தி­லி­ருந்து ஆளும் கட்­சியின் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இவர் தெரி­வு­ செய்யப்ப­ட்­டுள்ளார்.

எம்.எஸ். உது­மா­லெப்பை:
அட்­டா­ளைச்­சே­னை­யினை சேர்ந்த இவர், 1987ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் அப்­போ­தைய தலைவர் அஷ்­ரபின் ஊடாக நேரடி அர­சியலில் கள­மி­றங்­கி­யுள்ளார்.

எம்.எச்.எம்.அஷ்ரப், ஏ.எல்.எம். அதா­உல்லா மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகிய முஸ்லிம் கட்சி தலை­வர்­க­ளுடன் இவர் மிகவும் நெருங்கிச் செயற்­பட்­டுள்ளார். அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபையின் எதிர்க்­கட்சித் தலைவர் மற்றும் பிரதி தவி­சாளர், கிழக்கு மாகாண அமைச்சர் மற்றும் மாகாண சபையின் எதிர்க்­கட்சித் தலைவர் போன்ற பத­வி­களை இவர் வகித்­துள்ளார்.

கிழக்கு மாகாண அமைச்­ச­ராக அதி­கூ­டிய காலம் பணி­யாற்­றிய பெருமை இவ­ரையே சாரும். கிழக்கு மாகா­ணத்தின் பதில் முத­ல­மைச்­ச­ராக இவர் ஆறு தட­வைகள் பணி­யாற்­றி­யுள்­ள­துடன் மாகாண அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ள­ரா­கவும் செயற்­பட்­டுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலை­வ­ராக செயற்­பட்ட காலப் பகு­தியில் அம்­பாறை மாவட்ட அபி­வி­ருத்திக் குழுவின் இணைத் தலை­வ­ரா­கவும் பணி­யாற்­றி­யுள்ளார்.

தற்­போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதித் தேசிய அமைப்­பா­ள­ராக செயற்­படும் இவர், முதற் தட­வை­யாக பாரா­ளு­மன்ற உறுப்பி­ன­ராக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார்.

எம்.கே.எம். அஸ்லம்:
குரு­நாகல் மாவட்­டத்தின் தல்­கஸ்­பிட்­டி­யினை சேர்ந்த இவர், பிரித்­தா­னிய பல்­க­லைக்­க­ழ­க­மொன்றில் சட்­ட­மானிப் பட்­டத்­தினைப் பெற்றுள்ளார். தல்­கஸ்­பிட்டி அல் -அஷ்ரக் மகா வித்­தி­யாலயம், சியம்­ப­லா­கஸ்­கொ­டுவ மதீனா தேசிய பாட­சாலை, மாவ­னெல்ல சாஹிராக் கல்­லூரி மற்றும் பற­க­ஹதெ­னிய தேசியப் பாட­சாலை ஆகி­ய­வற்றின் பழைய மாண­வ­ராவார்.

தொழி­ல­தி­ப­ரான இவர், கடந்த 25 வரு­டங்­க­ளாக சமூக சேவையில் ஈடு­பட்டு வரு­கின்றார். அத்­துடன் கடந்த 15 வரு­டங்­க­ளாக மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யுடன் இணைந்து பணி­யாற்றி வரு­கின்­றார்.

அக்­கட்­சியின் தொடங்­கஸ்­லந்த தேர்தல் தொகு­தியின் அமைப்­பாளர் குழு உறுப்­பி­ன­ரா­கவும் தேசிய மக்கள் சக்­தியின் குரு­நாகல் மாவட்ட செயற்­கு­ழுவின் உறுப்­பி­ன­ரா­கவும் இவர் செயற்­பட்டு வரு­கின்றார்.

ஏ.எச்.எம்.அல­வி­க்கு (1994 – 2000) பின்னர் குரு­நாகல் மாவட்­டத்­தி­லி­ருந்து தெரி­வு­செய்ய்­ப­பட்ட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இவ­ரே­யாவார். குரு­நாகல் மாவட்­டத்தில் கடந்த 24 வரு­டங்­க­ளாக வெற்­றி­ட­மாகக் காணப்­பட்டு வந்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நிதித்துவம் இவரின் வெற்­றியின் மூலம் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அஷ்ரப் தாஹீர்:
நிந்­த­வூ­ரினைச் சேர்ந்த இவர், பிர­பல தொழி­ல­தி­ப­ராவார். தனது 15ஆவது வயதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸில் போரா­ளி­யாக இணைந்த இவர் சுமார் 25 வரு­டங்­க­ளாக அக்­கட்­சியின் உறுப்­பி­ன­ராக செயற்­பட்டார். பின்னர் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸில் இணைந்த இவர், அக்­கட்­சியின் பிரதி தேசிய அமைப்­பா­ள­ரா­கவும், அர­சியல் அதி­கார சபை உறுப்­பி­ன­ரா­கவும் தற்­போது செயற்­ப­டு­கின்றார்.

நிந்­தவூர் பிர­தேச சபையின் தவி­சா­ள­ராக மூன்று தட­வைகள் இவர் செயற்­பட்­டுள்ளார். இக்­காலப் பகு­தியில் பல அபி­வி­ருத்திப் பணிகள் இவ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. முதற் தட­வை­யாக பாரா­ளு­மன்றம் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ள இவர், கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்பில் இரண்டாம் நிலை­யினைப் பெற்றார்.

றியாஸ் பாறூக்:
அக்­கு­றணை­யினைச் சேர்ந்த இவர், அக்­கு­றணை அஸ்ஹர் வித்­தி­யா­லயத்தின் பழைய மாண­வ­ராவார். தொழி­ல­தி­ப­ரான இவர், கடந்த 25 வரு­டங்­க­ளுக்கு மேலாக சமூக சேவையில் ஈடு­பட்டு வரு­கின்றார். இவர் – மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நீண்ட கால உறுப்­பி­ன­ரு­மாவார்.

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நான்­கா­வது தட­வை­யாக போட்­டி­யிட்ட சம­யத்­தி­லேயே இவர் வெற்றி பெற்­றுள்ளார். மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஹரிஸ்­பத்­துவ அமைப்­பா­ள­ராக செயற்­படும் இவர், தேசிய மக்கள் சக்­தியின் கண்டி மாவட்ட நிறை­வேற்றுக் குழு உறுப்­பி­ன­ரு­மாவார்.

பஸ்மின் ஷெரீன்:
கல்­ஹின்­னை­யினை பிறப்­பி­ட­மா­கவும் கம்­ப­ளை­யினை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இவர், தொழி­ல­தி­ப­ராவார். கம்­பளை பிர­தே­சத்­தி­லுள்ள பல சமூக சேவை அமைப்­புக்­க­ளுடன் இணைந்து பணி­யாற்­றிய இவர், முதற் தடவையாக இந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போதே பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கல்ஹின்ன அல் மனார் கல்லூரியின் பழைய மாணவரான இவர், கடந்த இரண்டு வருடங்களாக தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து முழு நேரமாக பணியாற்றி வருகின்றார்.

தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட செயற்குழு உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் கம்பளை தொகுதி அமைப்பாளர் குழுவின் உறுப்பினருமாவார்.

டாக்டர் றிஸ்வி சாலி:
காலி, ஹிரும்புரவினை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், கடந்த 38 வருடங்களாக மருத்துவராக பணியாற்றி வருகின்றார். நாட்டின் பல பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றியுள்ளார்.

மருதானையிலுள்ள கலீல் தனியார் வைத்தியசாலையில் கடந்த பல வருடங்களாக வைத்தியராக இவர் பணியாற்றி வருகின்றார். தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான இவர், பாராளுமன்றத் தேர்தலில் முதற் தடவையாக போட்டியிட்ட போதே வெற்றி பெற்றுள்ளார்.

ஏ. ஆதம்­பாவா:
சாய்ந்­த­ம­ரு­தினைச் சேர்ந்த இவர், கல்­முனை ஸாஹிராக் கல்­லூரி மற்றும் சாய்ந்­த­ம­ருது அல் – ஜலால் வித்­தி­யாலயம் ஆகி­ய­வற்றின் பழைய மா­ண­வ­ராவார்.
இவர், ஸ்ரீ ஜய­வர்த்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தின் உயி­ரியல் பட்­ட­தா­ரி­யாவார். அமைச்­சர்­க­ளான சுனில் ஹந்­துன்­னெத்தி மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வசந்த பிய­தாச ஆகியோர் இவ­ரு­டைய பல்­க­லைக்­க­ழக சம வருட நண்­பர்கள்.

பல்­க­லைக்­க­ழக காலத்தில் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யுடன் இணைந்து செயற்­பட்ட இவர், இக்­கட்­சியின் ஆத­ர­வுடன் 1998ஆம் ஆண்டு கிழக்கு மாகாண வேலை­யற்ற பட்­டா­ரிகள் அமைப்­பினை உரு­வாக்கி அதன் தலை­வ­ராக செயற்­பட்டார்.

உயி­ரியல் பாட ஆசி­ரி­ய­ராக அரச தொழிலில் இணைந்த இவர், தேசிய ரீதி­யாக பல வைத்­தி­யர்­களை உரு­வாக்­கி­யுள்ளார். தேசிய மக்கள் சக்­தியின் அம்­பாறை மாவட்ட செயற்­குழு உறுப்­பி­ன­ரான இவர், அக்­கட்­சியின் கல்­முனைத் தொகுதி அமைப்­பா­ள­ரு­மாவார்.

கடந்த 2017ஆம் ஆண்டு நேரடி அர­சி­ய­லுக்குள் நுழைந்த இவர், தேசிய மக்கள் சக்­தி­யினை அம்­பாறை மாவட்­டத்தின் கரை­யோரப் பிர­தே­சங்­களில் கட்­டி­யெ­ழுப்­பு­­வதற்­காக தீவி­ர­மாக பணி­யாற்­றினார்.

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த போதிலும் தேசிய மக்கள் சக்­தியின் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்ட ஒரே முஸ்லிம் இவ­ரே­யாவார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.