தே.ம.சக்திக்கான முஸ்லிம் வாக்குகளை தடுக்கும் நோக்கிலான பிரசாரம்: வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கு கோவணம் கட்டிக் கொள்ளும் முட்டாள்தனம்!

0 123

எம்.எல்.எம்.மன்சூர்

நாட்டின் பெரும்­போக்கு அர­சி­யலில் தேசிய மக்கள் சக்­தியின் (NPP) பிரம்­மாண்­ட­மான எழுச்சி, சிங்­கள வல­து­சாரி அர­சி­யல்­வா­தி­களை பல­வீ­னப்­ப­டுத்தி, எவ்­வாறு ஒரு தடு­மாற்ற நிலைக்குள் தள்­ளி­யி­ருக்­கின்­றதோ அதற்குச் சற்றும் குறை­யாத விதத்தில் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளையும் அது ஒரு முட்டுச் சந்­துக்குள் கொண்டு போய் நிறுத்­தி­யி­ருக்­கி­றது. அதே­போல, தென்­னி­லங்­கையில் SJB மற்றும் ரணில் விக்­ர­ம­சிங்க அணி போன்­ற­வற்­றுடன் இணைந்து செயல்­பட்டு வரும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் இதே மாதி­ரி­யான ஒரு தடு­மாற்ற நிலையை எதிர்­கொண்டு வரு­கின்­றார்கள்.

முஸ்­லிம்­களை பொறுத்­த­வ­ரையில், 2015, 2019 மற்றும் 2020 ஆகிய வரு­டங்­களில் இடம்­பெற்ற தேர்­தல்­க­ளுடன் ஒப்­பிடும் பொழுது, 2024 தேர்­தல்கள் முக்­கி­ய­மான ஒரு வேறு­பாட்டை கொண்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. அதா­வது, தேசிய அர­சி­யலில் ஒரு ‘பொது எதிரி’ இல்­லாத நிலையே இங்­குள்ள பிரச்­சினை. ‘ராஜ­பக்­சகள் போஷித்து வளர்த்து வந்த சிங்­கள இன­வாதம்’ மற்றும் அதன் குரூர முக­மான கோத்­த­பாய / ஞான­சார கூட்டு என்­ப­வற்றை முன்­வைத்து, முஸ்­லிம்­களின் உணர்­வு­களை தூண்டி, அவர்­களை அணி திரட்­டு­வது முன்­னைய தேர்­தல்­களில் மிகவும் எளி­தான ஒரு காரி­ய­மாக இருந்து வந்­தது. முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் கச்­சி­த­மாக அந்தக் காரி­யத்தை செய்­தி­ருந்­தார்கள்.

ஆனால், ‘இனிமேல் அந்தத் தேர்தல் வியூகம் சாத்­தி­ய­மில்லை’ என்ற கள யதார்த்தம் இந்த அர­சி­யல்­வா­தி­களை பெரும் நெருக்­க­டிக்குள் தள்­ளி­யி­ருக்­கி­றது.

கோத்­த­பா­யவோ, ஞான­சா­ரவோ, சன்ன ஜய­சு­ம­னவோ அல்­லது சரத் வீர­சே­க­ரவோ இன்­றைய தேசிய அர­சி­யலில் பொருட்­ப­டுத்­தக்­கூ­டிய சக்­தி­க­ளாக இருந்து வர­வில்லை. மறு­புறம், அவர்கள் பிர­தி­நி­தித்­துவம் செய்த தீவிர சிங்­கள -பௌத்த அர­சியல் கதை­யாடல் (Narrative) ஒரு தேர்தல் சுலோகம் என்ற முறையில் முற்­றிலும் வலு­வி­ழந்து போயி­ருக்­கி­றது.
கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் பரப்­பு­ரை­களின் போது ஒரு சில முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் அநுர குமார திசா­நா­யக்க தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்­தியை முஸ்லிம் சமூ­கத்தின் ‘பொது எதி­ரி­யாக’ கட்­ட­மைப்­ப­தற்கு தீவி­ரமான முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­தார்கள். அந்த முயற்சி படு தோல்­வியில் முடிந்­தது என்­பதை சொல்லத் தேவை­யில்லை.
இந்த நிலையில், வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் எந்தச் சுலோ­கத்தை முன்­வைத்து முஸ்­லிம்­க­ளிடம் வாக்கு கேட்­பது என்ற தடு­மாற்ற நிலையை அவர்கள் எல்­லோரும் இப்­பொ­ழுது எதிர்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.
அப்­படி திக்­கற்ற நிலையில் அலை­க்க­ழிந்து கொண்­டி­ருந்­த­வர்­க­ளுக்கு இப்­பொ­ழுது ‘பாரா­ளு­மன்­றத்தில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம்’ என்ற ஒரு புதிய ஆயுதம் கைக்கு கிடைத்­தி­ருக்­கி­றது.
அடுத்த பாரா­ளு­மன்­றத்தில் முஸ்லிம் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை கணி­ச­மான அளவில் குறை­வ­டைய முடியும் என்றும், அது முஸ்­லிம்­களின் நலன்­களை மிக மோச­மாக பாதிக்க முடியும் என்றும் பலர் மிகுந்த கவ­லை­யுடன் சமூக ஊட­கங்­களில் கருத்­துக்­களை பதிவு செய்து வரு­கி­றார்கள். அதே­போல, அர­சியல் பிரச்­சார மேடை­க­ளிலும் ஒரு சில முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இது தொடர்­பாக முஸ்லிம் சமூ­கத்­திற்கு எச்­ச­ரிக்கை விடுக்கும் தொனியில் உரை­களை நிகழ்த்தி வரு­கி­றார்கள்.
”தேசிய மக்கள் சக்தி வென்­று­விட்­டது என்­ப­தற்­காக முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வங்­களை இல்­லா­தொ­ழிக்க விரும்­பு­கின்­றீர்­களா?…….. எம்­மத்­தியில் உள்ள சிலர் இந்த வேலை­களை செய்­வ­தற்கு துணிந்­துள்­ளனர். இந்தச் சதி­க­ளுக்கு துணை போயுள்ள நமது சகோ­த­ரர்­க­ளுக்கு வழி­காட்ட வேண்­டிய பொறுப்பு உல­மாக்­க­ளுக்கு உள்­ளது” என அண்­மையில் ஒரு தலைவர் உணர்ச்­சி­வ­சப்­பட்டு பேசி­யி­ருக்­கிறார்.
2015 மற்றும் 2020 பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களின் போது எவரும் தெரி­வித்­தி­ருக்­காத இத்­த­கைய கவ­லைகள், புதி­தாக இப்­பொ­ழுது எழுந்­தி­ருப்­பது ஏன்? சமூ­கத்­துக்­காக மன­மு­ருகி, கண்ணீர் விடும் இந்த நபர்கள் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் அர­சியல் கூட்­ட­ணி­களின் சார்பில் கடந்த காலத்தில் பாரா­ளு­மன்­றத்தை அலங்­க­ரித்த உறுப்­பி­னர்­களின் யோக்­கி­யதை என்ன? இதன் மூலம் அவர்கள் முஸ்லிம் சமூ­கத்­திற்கு விடுக்க முயலும் மறை­மு­க­மான செய்தி எது போன்ற கேள்­வி­க­ளுக்­ கூ­டா­கவே இப்­பி­ரச்­சி­னையை அணுக வேண்­டி­யி­ருக்­கி­றது.
தான் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வானால், தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்­துடன் கூட்­ட­ணியில் இணைந்து செயல்­பட விரும்­பு­வ­தா­கவும், அரபு நாடு­க­ளுடன் உற­வு­களை மேலும் பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு உத­வு­வ­தா­கவும் கிழக்கைச் சேர்ந்த ஒரு தலைவர் பேசி­யி­ருக்­கிறார். அதா­வது, இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் ‘முஸ்­லிம்­களின் விரோதி’ என அவர்­களால் முத்­திரை குத்­தப்­பட்ட அநுரகுமார திசா­நா­யக்­க­வுடன் இணைந்து கொள்­வதில் அவர்­க­ளுக்கு இப்­பொ­ழுது எந்தப் பிரச்­சி­னையும் இல்லை.
ஒரு புறம், முஸ்லிம் வாக்­குகள் திசை­காட்­டிக்குச் செல்­வதைப் பார்த்து ஒப்­பாரி வைக்கும் இவர்கள் மறு­புறம், பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்குப் பின்னர் தேசிய மக்கள் சக்தி புதிய அர­சாங்­கத்­துடன் கூட்­டணி அமைத்து செயற்­பட விரும்­பு­வ­தாக சொல்லி வரு­கி­றார்கள்.
இந்த நபர்­களின் தார்­மீக ரீதி­யான இந்தச் சீர­ழிவே ‘முஸ்லிம் அடை­யாள அர­சியல்’ மிக வேக­மாக அஸ்­த­மித்துச் செல்­வ­தற்கு பங்­க­ளிப்புச் செய்­தி­ருக்­கி­றது.
மருத்­துவ விஞ்­ஞா­னத்தில் ‘Selective Amnesia’ என்ற ஒரு வகை மறதி நோய் பற்றி சொல்­வார்கள். இந்த நோயால் பீடிக்­கப்­ப­டு­ப­வர்கள் தமது வாழ்க்­கையில் அண்­மையில் நடந்த பல முக்­கி­ய­மான சம்­ப­வங்­களை மறந்­தி­ருப்­பார்கள். ஒரு சில சம்­ப­வங்கள் மட்­டுமே அவர்­க­ளுக்கு நினை­வி­ருக்கும்.
தம்மை சங்­க­டப்­ப­டுத்தக் கூடிய நிகழ்­வு­களை மறந்து (அல்­லது அப்­படி மறந்­தி­ருப்­ப­தாக பாவனை செய்து), தமது பிழைப்­புக்குத் தேவை­யா­ன­வற்றை மட்­டுமே நினைவில் வைத்துக் கொள்ளும் அர­சி­யல்­வா­தி­களை குறிப்­ப­தற்­கென சம­கால அர­சி­யலில் ‘Selective Amnesia’ என்ற இந்தச் சொல் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. முஸ்லிம் சமூ­கத்தை பிர­தி­நி­தித்­துவம் செய்­வ­தாக சொல்லிக் கொள்ளும் பல அர­சி­யல்­வா­தி­களை அந்நோய் பீடித்­தி­ருப்­பதை இப்­பொ­ழுது அவ­தா­னிக்க முடி­கி­றது.
அதன் கார­ண­மா­கவே, மக்கள் ஏன் தம்மை அதி­க­ரித்த அளவில் நிரா­க­ரித்து வரு­கி­றார்கள் என்ற அடிப்­படைக் கேள்­விக்கு பதில் தேட முய­லாது, திசை­காட்­டியின் பக்கம் செல்­ப­வர்­களை தடுக்கும் பொருட்டு (தமது தவறை மற்­ற­வர்கள் மீது போடும்) முற்­றிலும் பிழை­யான கோணத்தில் இப்­பி­ரச்­சி­னையை அணுகி வரு­கி­றார்கள்.
கோவ­ணத்தை இறுக்கிக் கட்டிக் கொள்­வதன் மூலம் கடு­மை­யான வயிற்றுப் போக்கை தடுத்து நிறுத்த முடியும் என்ற முட்­டாள்­த­ன­மான நம்­பிக்­கையின் வெளிப்­பாடு அது.
‘அம்­பாறை மற்றும் கண்டி போன்ற மாவட்­டங்­களில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் இழக்­கப்­ப­டலாம்’ என்ற விதத்தில் தெரி­விக்­கப்­படும் அச்­சங்­களை இந்த இரட்டை வேட நாட­கங்­களின் பின்­பு­லத்­தி­லேயே நோக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.
மேற்­படி இரண்டு மாவட்­டங்­க­ளிலும் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை தக்க வைத்துக் கொள்­வ­தற்கு என்ன செய்ய வேண்டும் என அவர்கள் சொல்­லா­விட்­டாலும் கூட –
”திசை­காட்­டிக்கு அளிக்­கப்­படும் முஸ்லிம் வாக்­குகள் முஸ்லிம் அல்­லாத நபர்கள் பாரா­ளு­மன்றம் செல்­வ­தற்கே உதவ முடியும். எனவே, உங்கள் வாக்­கு­களை விரயம் செய்­யா­தீர்கள்” என்ற செய்­தி­யையே வெளிப்­ப­டை­யாக அவர்கள் வழங்கி வரு­கி­றார்கள்.
இன்னும் தெளி­வாக சொல்லப் போனால், திசை­காட்டி தவிர (தொலை­பேசி, சிலிண்டர், மரம். மயில் போன்ற) ஏனைய சின்­னங்­களில் போட்­டி­யிடும் முஸ்லிம் வேட்­பா­ளர்­க­ளுக்கு முஸ்­லிம்கள் வாக்­க­ளிக்க வேண்டும் என்­பதே அவர்கள் முன்­வைக்கும் வேண்­டுகோள்.
இது ஒரு ஜன­நா­யக விரோ­த­மான, இலங்­கையில் புதி­தாக துளிர்த்து வரும் அர­சியல் கலா­சா­ரத்தை இழி­வு­ப­டுத்தும் விதத்­தி­லான ஒரு வேண்­டுகோள். முஸ்­லிம்­களை ஏனைய சமூ­கங்­க­ளி­லி­ருந்து அந்­நி­யப்­ப­டுத்தக் கூடிய ஆபத்­தான ஒரு நிலைப்­பாடு.
ஆனால், ‘திசை­காட்­டிக்கு வாக்­க­ளிக்க வேண்டாம்’ எனக் கேட்டுக் கொள்ளும் இந்த ‘முஸ்லிம் நேசர்கள்’ பல்­லா­யி­ரக்­க­ணக்­கான முஸ்லிம் வாக்­கா­ளர்கள் திசை­காட்­டியின் பக்கம் திரும்­பு­வ­தற்கு அவர்­களைத் தூண்­டிய கார­ணிகள் குறித்து கள்ள மௌனம் சாதிக்­கி­றார்கள். அதே­போல, முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­காக பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர்கள் சுட்­டிக்­காட்டும் நபர்­களின் யோக்­கி­யதை குறித்துச் சொல்­வ­தற்கும் அவர்­க­ளிடம் ஒன்­று­மில்லை.
பாரா­ளு­மன்­றத்தில் ‘முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் தேவை­யில்லை’ என்ற வாதத்தை ஒரு போதும் தேசிய மக்கள் சக்தி முன்­வைக்­க­வில்லை. இட­து­சாரி சிந்­த­னை­யுடன் கூடிய கட்­சிகள் எப்­போதும் ‘அனை­வ­ரையும் அர­வ­ணைத்தல்’ (Inclusiveness) என்ற கருத்­திற்கு முன்­னு­ரிமை அளிப்­பவை. அந்த அடிப்­ப­டையில், அக்­கட்­சியின் அந்­தந்த மாவட்­டங்­க­ளுக்­கான வேட்­பாளர் பட்­டி­யல்­களில் முஸ்லிம் மற்றும் தமிழ் வேட்­பா­ளர்கள் போதி­ய­ளவில் உள்­வாங்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.
முஸ்லிம் வேட்­பா­ளர்­களில் உல­மாக்கள், பட்­ட­தா­ரிகள், டாக்­டர்கள் மற்றும் பொறி­யி­லா­ளர்கள் போன்ற தொழில்­வாண்­மை­யா­ளர்கள் மற்றும் நீண்ட கால சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் எனப் பரந்த பிரி­வினர் அடங்­கு­கின்­றனர்.
இந்த வேட்­பா­ளர்கள் குறித்து அவர்கள் முன்­வைக்கும் விமர்­சனம் ‘அர­சியல் அனு­பவம் இல்­லா­த­வர்கள்’ மற்றும் ‘பிர­பல்யம் இல்­லா­த­வர்கள்’ என்­பது. 1977 ஜூலை பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போது வீசிய யுஎன்பி ஆத­ரவு அலையில் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­கிய 168 உறுப்­பி­னர்­களில் கிட்­டத்­தட்ட 100 பேர் முதல் தடவை பாரா­ளு­மன்றம் வந்­த­வர்கள். 2020 ஆகஸ்ட் தேர்­த­லிலும் மொட்டுக் கட்சி சார்­பாக வெற்­றி­யீட்­டி­ய­வர்­களில் 70 முதல்- 75 சத­வீ­தத்­தினர் புதி­ய­வர்கள்.
இந்தத் தடவை திசை­காட்டி அலை வீசு­கி­றது. ஜன­நா­யகத் தேர்­தல்­களில் இவை தவிர்க்க முடி­யாத போக்­குகள். துரிதப் பயிற்சி மற்றும் பொருத்­த­மான விதத்­தி­லான நெறிப்­ப­டுத்தல் என்­ப­வற்­றுக்கு ஊடாக ஓரிரு மாதங்­க­ளி­லேயே புதிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அவர்­க­ளு­டைய பணி­க­ளுக்குத் தேவை­யான அறி­வையும் திறன்­க­ளையும் பெற்றுக் கொடுக்க முடியும்.
அடுத்து, பிரபல்யம் (Popular) என்ற விஷயம் தொடர்பாகவும் சொல்ல வேண்டும். ஆங்கிலத்தில் இரண்டு சொற்கள் இருக்கின்றன. ஒன்று Popular என்பது. அதாவது, மக்கள் அபிமானத்தைப் பெற்றவர்கள் அவ்வாறு அழைக்கப்படுகின்றனர். அடுத்த சொல் ‘Notorious’ என்பது. மோசமான காரியங்கள் தொடர்பாக நன்கு அறியப்பட்டிருக்கும் நபர்களை குறிப்பதற்காக அந்தச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. அதற்கான இலங்கை அரசியலின் சிறந்த உதாரணம் மேர்வின் சில்வா. அதன் பின்னர் சனத் நிஸாந்த, திஸ்ஸகுட்டி ஆரச்சி என இந்தப் பட்டியல் நீண்டு செல்கிறது.
இந்த ‘Notorious’ வகைக்குள் அடங்கும் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் யார் என்­பது குறித்து சொல்லி விளக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.
எனவே, தேசிய மக்கள் சக்தி வேட்­பாளர் பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்கும் முஸ்லிம் வேட்­பா­ளர்­களின் அனு­பவம் குறித்தோ அல்­லது பிர­பல்யம் குறித்தோ பேசு­வ­தற்கு இது­வரை காலமும் ஊழல் மற்றும் மோசடி அர­சியல் கலா­சா­ரத்தில் ஊறி திளைத்­தி­ருந்­த­வர்­க­ளுக்கு எந்­த­வி­த­மான அருகதையோ தார்மீக உரிமையோ கிடையாது.

Leave A Reply

Your email address will not be published.