34 ஆண்டுகள் கண்டுகொள்ளப்படாத வடக்கு முஸ்லிம் சமூகம்!

0 9

ஏ.எஸ்.எம் ஜாவித்

1990 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாத இறு­தியில் வடக்­கி­லி­ருந்து விடு­தலைப் புலி­களால் பல­வந்­த­மாக ஆயு­த­மு­னையில் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்கள், 34 வரு­டங்கள் கடந்தும் முழு­மை­யான மீள் குடி­யேற்றம் செய்­யப்­ப­டாது கண்­டு­கொள்­ளப்­ப­டாத சமூ­க­மாக உள்­ளனர்.

வடக்கில் தமிழ் மக்­க­ளுடன் முஸ்­லிம்கள் ஒன்­றோ­டொன்­றாக பின்­னிப்­பி­ணைந்து வாழ்ந்து வந்த வட­மா­காண முஸ்­லிம்­க­ளுக்கு வாழ்­நாளில் மறக்க முடி­யாத ஒரு கரி நாளாக 1990 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாத இறுதிப் பகு­தி­களைக் குறிப்­பி­டலாம். விடு­தலைப் புலி­களால் வடக்கை விட்டு ஒட்­டு­மொத்த முஸ்­லிம்கள் வெளி­யேற வேண்டும் என்ற சடு­தி­யான அறி­வித்தல் ஒவ்­வொரு வட­மா­காண முஸ்­லிம்­க­ளையும் தட்­டுத்­த­டு­மாறி நிலை குலைய வைத்த சம்­பவம் மறக்க முடி­யாத வடுக்­க­ளா­கவே இன்றும் இருந்து வரு­கின்­றது.

சொந்த பூர்­வீ­கத்தை விட்டு வெளி­யே­று­வது என்­பது எவ­ராலும் ஜீர­ணிக்க முடி­யாத ஒரு சம்­ப­வ­மாகும். அது மட்­டு­மல்­லாது வாழ்வா? சாவா? என்ற இரண்­டுக்கும் மத்­தியில் தமது சொத்­துக்கள், வீடுகள், தொழில் துறைகள், காணி, பூமிகள் என அனைத்­தையும் விட்டு விட்டு வெளி­யே­று­வது என்­பது யாராலும் ஏற்றுக் கொள்­ளவோ அல்­லது ஜீர­ணித்துக் கொள்­ளவோ முடி­யாத ஒரு கசப்­பான சம்பவம் எனலாம். அந்­த­ள­விற்கு முழு முஸ்லிம் சமு­கத்­தி­னதும் மனங்கள் சுக்கு நூறாக்­கப்­பட்ட இந்த மரண அச்­சு­றுத்தல் நிலை­மை­களை சொல்ல முடி­யாத ஒரு மாபெரும் துன்­ப­க­ர­மான நாட்­க­ளாக அந்த 90ஆம் ஆண்டின் ஒக்­டோபர் மாத இறுதி நாட்­களைக் குறிப்­பி­டலாம்.

தமது போராட்ட வெற்­றிக்­காக விடு­தலைப் புலிகள் இயக்கம் வட­கி­ழக்­கினை தாமே ஆள வேண்டும் என்ற நோக்கில் வட­மா­கா­ணத்­தி­லி­ருந்த ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் வெளி­யேற்றி விட்­டனர். அவர்கள் எடுத்த தவ­றான முடி­வுகள் வட­கி­ழக்கில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் உற­வு­களின் ஒற்­று­மைக்கும் பாரிய குந்­த­கத்தை ஏற்­ப­டுத்தி சமா­தா­னத்­து­டனும், ஒற்­று­மை­யா­கவும் வாழ்ந்த அந்த இரு சமு­கங்­க­ளையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடி­யாத ஒரு துர்ப்­பாக்­கிய நிலைக்குள் தள்ளு­வ­தற்கு ஆளாக்­கி­விட்­டனர்.

இந்தச் செயற்­பாடு வடக்கில் வாழ்ந்த முஸ்­லிம்­களை கண் கலங்க வைத்­த­துடன் சகோ­தர தமிழ் உற­வு­க­ளை­யும்­கூட வாய்­விட்டு அழு­வ­தற்கும், கவலை கொள்­வ­தற்கும் வழி சமைத்து விட்­டது. ஆயு­தத்தின் விளிம்பில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்தத் தவ­றான தீர்­மா­னத்தை தமிழ் அர­சியல் தலை­மை­களோ அல்­லது புத்தி ஜீவி­களோ அல்­லது சமயத் தலை­வர்­களோ அதனை நிறுத்­து­வ­தற்கு முன்­சென்று கேட்­ப­தற்கு முடி­யாத ஒரு ஆபத்­தான கட்­டத்தில் இருந்­த­மையும் கவ­லை­யா­ன­தொரு விட­யமே.

இவ்­வாறு விடு­தலைப் புலிகள் வட­மா­காண முஸ்­லிம்­களை ஒட்­டு­மொத்­த­மாக வெளி­யேற்­றி­யமை முஸ்­லிம்­களால் என்றும் மறக்க முடி­யாத ஒரு துன்­ப­க­ர­மான பதி­வினை ஏற்­ப­டுத்­திய சம்­ப­வ­மாகும். வட­மா­காண முஸ்­லிம்கள் எந்­த­வொரு கட்­டத்­திலும் தனி­நாடு கோரி­யதோ அல்­லது இடத்தை பறித்துக் கேட்­டதோ இல்லை. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் முஸ்­லிம்கள் துரத்­தப்­பட்­டமை மிகவும் வேத­னை­யா­ன­தொரு சம்­ப­வ­மா­கவே பதி­வா­கி­யுள்­ளது. காரிருள் சூழ்ந்த அந்தக் காலத்து துன்­பியல் சம்­ப­வங்கள் நாட்­க­ளாக, வாரங்­க­ளாக, மாதங்­க­ளாக, வரு­டங்­க­ளாக, தசாப்­தங்­க­ளாக, கடந்து இவ்­வ­ருட (2024) இந்த ஒக்­டோபர் மாதத்­துடன் 34 வரு­டங்­களைத் தாண்டி 35வது வரு­டத்தில் காலடி பதிக்­கின்­றமை கவ­லை­யோடு குறிப்­பிட வேண்­டி­ய­தொரு விட­ய­மாகும்.

இவ்­வாறு 34 வரு­டங்கள் தாண்­டிய இம்­மக்­களின் அவல நிலை தொடர்ந்தும் அகதி வாழ்­வா­கவே அமைந்து கொண்டு செல்­கின்­றது. யுத்தம் நிறை­வ­டைந்து 15 ஆண்­டுகள் கடந்தும் வட­ மா­காண முஸ்­லிம்கள் ஆட்­சி­ய­மைத்த அர­சாங்­கங்­க­ளினால் கண்டு கொள்­ளப்­ப­டாத ஒரு சமூ­க­மாக ஒதுக்­கப்­பட்­டுள்­ளனர் எனலாம். ஒவ்­வொரு கணப்­பொழு­திலும் தமது அகதி வாழ்­விற்கு விடிவு கிடைக்­காதா? தம்மை தமது சொந்த மண்ணில் மீள்­கு­டி­யேற்றமாட்­டார்­களா? என்ற கன­வு­க­ளு­ட­னேயே தமது துன்­பியல் நாட்­களை நகர்த்திக் கொண்­டி­ருக்­கின்­றனர். இன்று வரை வட­மா­காண முஸ்­லிம்­களின் திட்­ட­மி­டப்­பட்ட பரி­பூ­ரண மீள் குடி­ய­மர்வு என்­பது கானல் நீரா­கவே அந்த மக்­க­ளுக்கு இருந்து வரு­கின்­றது.

2009 ஆம் ஆண்டு யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வந்த மஹிந்த அர­சும்­சரி அதற்குப் பின்னர் ஆட்­சிக்கு வந்த அர­சு­களும் சரி இடம் பெயர்ந்து நாட்டின் பல பாகங்­க­ளிலும் துன்­பப்­பட்டுக் கொண்டு அல்­ல­லுறும் முஸ்­லிம்­களின் மீள் குடி­யேற்ற விட­யத்தில் மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யி­லேயே இருந்­தனர். அந்த மக்­க­ளுக்­காக ஆற்ற வேண்­டிய கரு­மங்­களை கவ­னத்திற் கொள்­ளாது தட்­டிக்­க­ழித்து வந்து கொண்­டி­ருக்கும் செயற்­பா­டு­களே இடம் பெற்று வரு­கின்­றன.

அதன் பின் வந்த அர­சாங்­கங்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு­சில முன்­னெ­டுப்­புக்கள் கூட வடக்கு முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை கானல் நீரான கதை­யா­கவே மாறி­விட்­டது. கடந்த காலங்­களில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு என்று அர­சாங்கம் ஒதுக்­கிய பல கோடி ரூபாய்­க­ளைக்­கூட வட­மா­காண சபையும் முடக்கி வைத்­த­தையும் சுட்­டிக்­காட்­டலாம்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நல்­லாட்சி அரசும் நீண்­ட­காலப் பிரச்­சி­னை­யாக புரை­யோடி இருந்த முஸ்லிம் சமு­கத்தின் அக­தி­வாழ்வு விட­யத்தில் அக்­கறை காட்­டப்­ப­ட­வில்லை.

புதிய அரசு தோற்றம் பெற்­ற­போது நூறுநாள் வேலைத் திட்­டத்தில் அப்­போது ஆட்­சியில் இருந்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க முஸ்லிம் மக்­களின் மீள் குடி­யேற்ற விட­யங்கள் தொடர்­பாக மீள்­கு­டி­யேற்ற அமைச்­ச­ரிடம் அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு கூறி­யி­ருந்­த­மையும் யாவரும் அறிந்த விட­ய­மாகும். எனினும், அப்­ப­டி­யொரு அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டதா? அதற்கு என்ன நடந்­தது என்­பது இன்னும் புரி­யாத புதி­ராக உள்­ளது.

மன்னார், யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு, வவு­னியா, கிளி­நொச்சி ஆகிய மாவட்­டங்­களில் இருந்து 1990 ஆம் ஆண்டு வெளி­யேற்­றப்­பட்­ட­போது பல ஆயி­ரம்­க­ளாக காணப்­பட்ட வட­புல முஸ்­லிம்­களின் சனக்­தொகை இன்று இலட்­சத்தை கடந்­துள்­ளது.

வட­மா­காண முஸ்­லிம்­க­ளுக்கு சொந்த இடத்தில் வாழ சரி­யான வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­டாத நிலையில் அவர்கள் கண்­ணீ­ரு­டனும், கவ­லை­யு­டனும் இன்று வரை வடக்­கிற்கு வெளியே பல மாவட்­டங்­களில் ஏக்­கத்­து­ட­னேயே வாழ்ந்து வரு­கின்­றனர்.

முஸ்லிம் மக்­களின் வெளி­யேற்றம் சர்­வ­தேசம் வரை தெரிந்தும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் விட­யத்தில் கண்­டு­கொள்ளாத் தன்­மை­யுடன் மன­தா­பி­மா­ன­மற்ற முறையில் இருந்து வரு­வதும் சர்­வ­தே­சம்­கூட குறைந்த பட்சம் இலங்கை அர­சுக்கு அழுத்­தங்­க­ளை­யா­வது கொடுக்­கலாம் அல்­லவா ஆனால் இந்த விட­யத்­திலும் சர்­வ­தே­சமும் தொடர்ந்தும் பிழை­க­ளையே செய்து வரு­கின்­றது.

இந்த நாட்டுக் குடி­மகன் என்ற அடை­யா­ளங்­களும் ஆதா­ரங்­களும் இருந்தும் வடக்கு முஸ்­லிம்­களின் நிலை மிகவும் மோச­மான கவ­லைக்­கி­ட­மான முறையில் இருந்து வரு­வ­துடன் அரசு முன்­வந்து செய்து கொடுக்­காத நிலை­மை­கள்­கூட அவர்­களின் மீள் குடி­யேற்ற விட­யத்தில் தொட­ராக காணப்­பட்டு வரும் தடங்­கல்­க­ளா­கவே இருக்­கின்­றன.

குறிப்­பாக முல்­லைத்­தீவில் முஸ்லிம் சமூகத்தின் காணிகள் முற்­றா­கவே சூறை­யா­டப்­பட்­டுள்­ள­துடன் அரச காணி­க­ளைக்­கூட பெற்றுக் கொள்­வ­தற்கு வட­மா­காண சபையும் அங்­குள்ள அர­சியல்வாதி­களும் தடை­களைப் போட்டு முஸ்லிம் சமூகத்­திற்கு எதி­ராக பொய்­க­ளைக்­கூறி ஆர்ப்­பாட்­டங்­க­ளைக்­கூட மேற்­கொண்­டனர்.

மன்­னாரில் சிலா­வத்­துறைப் பகு­தியில் கடற்­ப­டை­யினர் முஸ்­லிம்­களின் கிரா­மங்­களை முற்­றா­கவே கைய­கப்­ப­டுத்தி வைத்துக் கொண்டு விடா­தி­ருப்­பதும் முஸ்லிம் மக்­களை விரக்­தி­ய­டையச் செய்­துள்­ளது.

இதேபோல் யாழ்ப்­பா­ணத்­திலும் தமது சொந்த வீடு­க­ளைக்­கூட பாது­காத்துக் கொள்ள முடி­யா­த­ளவு இருப்­ப­துடன் சட்ட ரீதி­யான ஆவ­ணங்­க­ளைக்­கூட காட்ட வேண்­டிய நிலை­மைகள் இருந்­தன.

இவ்­வாறு யுத்­தத்தால் முஸ்லிம் மக்கள் இன்று வரை பல்­வே­று­பட்ட இன்­னல்­களுக்கு முகம்­கொ­டுக்கும் நிலை­யி­லேயே இருந்து வரு­கின்­றனர். பல­வந்­த­மாக இவ்­வாறு விரட்­டப்­பட்டு இனச்­சுத்­தி­க­ரிப்புச் செய்­யப்­பட்ட வடக்கு முஸ்­லிம்கள் எதிர்­பார்ப்­பது 1990ஆம் ஆண்­டுக்­குமுன் தமிழ் மக்­க­ளுடன் ஒற்­று­மை­யாக வாழ்ந்­த­துபோல் மீண்டும் ஒற்­று­மை­யாக வாழ வேண்டும் என்ற ஆவ­லு­ட­னேயே இருக்­கின்­றனர்.

தேர்தல் காலங்­களில் மட்டும் அரசும், அர­சியல்வாதி­களும் தமது வாக்கு வேட்­டைக்­காக அந்த மக்­களின் முன்­வந்து உங்­களை நாம் ஆட்சிக்கு வந்தால் மீள் குடியேற்றுவோம், அது செய்து தருவோம், இது செய்து தருவோம் என்று மண்டியிடுவதும், மூட்டை மூட்டையாக பொய் வாக்குறுதிகளை வழங்குவதும் நடந்தேறிய சம்பவங்களாகும்.

பாதிக்­கப்­பட்ட மக்கள் இன்று கல்வி, சுகா­தாரம், தொழில் உள்­ளிட்ட பல தேவைப்­பா­டு­க­ளுடன் காணப்­ப­டு­வ­துடன் இவ்­வி­ட­யங்­களில் முஸ்­லிம்கள் பின்­னோக்­கிய நிலையில் இருப்­பதும் கடந்த காலங்­களில் கிடைக்­கப்­பெற்ற புள்ளி விப­ரங்­களில் இருந்து அறிய முடி­கின்­றது. இந்த வகையில் இந்த மக்கள் பூர­ண­மான மீள் குடி­யேற்­றத்­தையே விரும்­பு­கின்­றனர்.

எனவே பாதிக்­கப்­பட்ட மக்கள் என்ற வகையில் அவர்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்­க வேண்­டிய பொறுப்பும் கடப்­பாடும் அர­சாங்­கத்­திற்கே உள்­ளது. இந்த விட­யத்தை அரசு சரி­யான முறையில் முன்­னெ­டுத்து துரத்­தப்­பட்ட அந்த மக்­களை அவர்­க­ளது பூர்­வீ­கத்தில் நிம்­ம­தி­யாக வாழ வழிசமைக்க வேண்டும் என்பது வடமாகாண முஸ்லிம்களின் ஏக்கமாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.