ஹஜ் குழு குறித்து முறைப்பாடுகள்

வக்பு சபை தொடர்பிலும் பல குற்றச்சாட்டுகள் என்கிறார் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத்

0 16

(எம்.வை.எம்.சியாம்)
இலங்கை அரச ஹஜ் குழுவின் செயற்­பா­டு­களில் அதி­க­ள­வான முறை­கே­டுகள் இடம்­பெ­று­வது தொடர்­பாக தமக்கு முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக தெரி­வித்­துள்ள அமைச்­ச­ரவை பேச்­சாளர் விஜித ஹேரத், அவ­ச­ர­மாக இதில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த முற்­பட்டால் ஹஜ் ஏற்­பா­டு­களில் சிக்­கல்கள் ஏற்­பட்டு யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு சிரமம் ஏற்­ப­டலாம் எனவும் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன், வக்பு சபை குறித்து பல்­வேறு முறை­ப்பா­டுகள் பல­த­ரப்­பி­ன­ராலும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வி­ட­யங்­களில் அவ­ச­ர­மாக மாற்­றத்தை கொண்­டு­வர முடி­யாது எனவும் அமைச்­ச­ரவை பேச்­சாளர் குறிப்­பிட்­டுள்ளார்.

அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்­றது. இதன்­போது எதிர்­கா­லத்தில் ஹஜ் குழு மற்றும் வக்பு சபை­களில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­ப­டுமா என ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அமைச்­ச­ரவை பேச்­சாளர் விஜித்த ஹேரத் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,
முஸ்லிம் யாத்­தி­ரி­கர்­க­ளது ஹஜ் வணக்க வழி­பா­டுகளுக்கான ஏற்பாடுகள் ஆரம்­ப­மா­க­வுள்­ளன. அதற்­கான பணி­களை உட­ன­டி­யாக ஆரம்­பிக்க வேண்டும். அதே­போல அர­சாங்கம் ஹஜ் குழு மற்றும் வக்பு சபை­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை. இந்த சந்­தர்ப்­பத்தில் எம்மால் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது.

ஹஜ் குழு மற்றும் வக்பு சபை­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­மாறு வெவ்­வேறு தரப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்து எமக்கு கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இதில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்­டு­மாயின் எமக்கு நீண்ட காலம் எடுக்கும். நாம் அதனை செய்ய முற்­பட்டால் முஸ்லிம் யாத்­தி­ரி­கர்கள் ஹஜ் வணக்க வழி­பா­டு­களில் ஈடு­ப­டு­வதில் சிக்கல் நிலை ஏற்­படும். எனவே இந்த சந்­தர்ப்­பத்தில் நாம் அதனை செய்யப் போவ­தில்லை. எனினும் முன்­வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்­மானம் எடுக்க எதிர்­பார்த்­துள்ளோம். அதே­போன்று ஹஜ் யாத்­தி­ரி­கர்க­ளுக்கு எந்­த­வித இடை­யூ­று­களும் ஏற்­ப­ட­மாட்­டாது. அவர்­க­ளுக்­கான விசா வச­தி­களைப் பெற்றுக் கொடுக்க தேவை­யான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இலங்கை அரச ஹஜ் குழு கட்­ட­மைப்­புக்குள் அதி­க­ள­வி­லான முறை­கே­டுகள் உள்­ளன. நிச்­சயம் நாம் அதனை மாற்­றுவோம். ஒரே தட­வையில் இந்த கட்­ட­மைப்பில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வது சிர­ம­மாகும். குறிப்­பாக சில­ருக்கு அவர்­க­ளது தனிப்­பட்ட தேவைகள் விருப்­பங்கள் உள்­ளன. அவற்றை சுட்­டிக்­காட்டி பத­வி­களை பெற்றுக் கொள்­ளவும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என நாம் அறிந்­துள்ளோம். இது தொடர்பில் தெளி­வுப்­ப­டுத்த வரு­ப­வர்­களும் நல்­ல­வர்கள் அல்லர். அப்­ப­டி­யான சிலர் என்னை சந்­திக்க வந்­தனர். இவர்கள் இந்த கட்­ட­மைப்பை மாற்­று­மாறு கோரிக்கை விடுத்­தனர். நான் அவர்­களின் பெயர்­களை கூற விரும்­ப­வில்லை. ஆனால் என்னால் கூற முடியும்.எனவே நாம் இந்த விடயம் தொடர்பில் மிகவும் ஆழ­மான ஆராய்ந்து தீர்­மானம் எடுப்போம்.

எதிர்காலத்தில் சிறந்த ஹஜ் குழு மற்றும் வக்ப் சபைகளை ஸ்தாபிப்போம். இந்த வேலைத் திட்டங்களை முறையாக நாம் முன்னெடுத்துச் செல்வோம். குறைபாடுகள் உள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தால் ஹஜ் யாத்திரிகர்களுக்கு தமது வணக்க வழிபாடுகளை மேற்கொள்ள முடியாமல் போகும் என்றார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.