தேர்தல் வாக்களிப்பில் அசிரத்தை வேண்டாம்

முஸ்லிம்களிடம் உலமா சபை வேண்டுகோள்

0 111

நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் தேசத்தின் குடி­மக்­க­ளா­கிய முஸ்­லிம்கள் தமது வாக்­கு­ரி­மையை பய­னுள்ள விதத்தில் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஒரு போதும் வாக்­க­ளிப்­பதில் அசி­ரத்­தை­யுடன் நடந்து கொள்­ள­லா­காது என்றும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

எதிர்­வரும் சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் உலமா சபை விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
ஜன­நா­யக நாடொன்றில் எவரும் எந்தக் கட்­சியும் தேர்­தலில் போட்­டி­யி­டலாம். தான் விரும்பும் வேட்­பா­ளரை ஆத­ரிப்­பது அவ­ரவர் உரி­மை­யாகும். இந்த தேசத்தின் குடி­மக்­க­ளா­கிய முஸ்­லிம்கள் தமது வாக்­கு­ரி­மையை பய­னுள்ள விதத்தில் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். ஒரு போதும் வாக்­க­ளிப்­பதில் அசி­ரத்­தை­யுடன் நடந்து கொள்­ள­லா­காது.

பொது­வா­கவும் தேர்தல் காலங்­களில் குறிப்­பா­கவும் முஸ்­லிம்கள் வார்த்­தை­ய­ள­விலோ செய­ல­ள­விலோ எந்­த­வொரு குற்றச் செயல்­க­ளிலும் ஈடு­ப­டக்­கூ­டாது. வதந்­தி­களைப் பரப்­புதல், வீண் விதண்­டா­வாதம், சண்டை சச்­ச­ர­வுகள், வன்­செ­யல்­களில் ஈடு­ப­டு­வது ஈமானைப் பாதிக்கும் அம்­சங்கள் என்­பதைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

ஆலிம்கள் மிம்பர் மேடை­களில் எந்­த­வொரு வேட்­பா­ள­ருக்கும் அர­சியல் கட்­சிக்கும் சார்­பா­கவோ எதி­ரா­கவோ பேசு­வதை முற்­றாக தவிர்த்துக் கொள்­வ­துடன் மேற்­கு­றிப்­பிட்ட வழி­காட்­டல்­களை கடை­பி­டித்­தொ­ழு­கு­மாறு பொது மக்­க­ளுக்கு வழி­காட்ட வேண்டும்.

மேலும் பள்­ளி­வா­சல்­களை தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்கோ அத­னுடன் தொடர்­பு­பட்ட வேறு விட­யங்­க­ளுக்கோ பயன்­ப­டுத்­து­வதைத் தவிர்த்­துக்­கொள்ள வேண்டும்.

தேர்தல் முடி­வ­டைந்த பின்னர் நிதா­ன­மாக நடந்­து­கொள்­வது கட­மை­யாகும். முஸ்லிம் சமூகம் எப்­போதும் ஒற்­று­மை­யையும் சக­வாழ்­வையும் பேணும் வகையில் முன்­மா­தி­ரி­யாக நடந்­து­கொள்ள வேண்டும்.

பிர­பஞ்­சத்தின் அத்­தனை விட­யங்­களும் அல்­லாஹ்வின் நாட்­டப்­ப­டியும் திட்­டப்­ப­டி­யுமே நடந்­தே­று­கின்­றன என்­பதில் அசைக்­க­மு­டி­யாத நம்­பிக்கை வைத்­துள்ள நாம், தேர்­தலில் யார் வென்­றாலும் அது அல்­லாஹ்வின் முடிவு என்­பதை உளப்­பூர்­வ­மாக ஏற்றுக் கொள்­வது எமது கட­மை­யாகும்.

ஆலிம்கள், மஸ்ஜித் நிர்­வா­கிகள், புத்­தி­ஜீ­விகள் பொது­வா­கவும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் மாவட்ட மற்றும் பிர­தேசக் கிளை அங்­கத்­த­வர்கள் குறிப்­பா­கவும் மேற்­சொன்ன அறி­வு­றுத்­தல்­க­ளுக்­க­மைய பொது மக்­களை வழி­ந­டத்த வேண்­டு­மென அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வேண்­டுகோள் விடுக்­கி­றது.

நாட்டில் கடந்த 100 வரு­டங்­க­ளுக்கும் மேலாக அர­சி­ய­லுக்கு அப்பால் நின்று சமூக, சமய, சன்­மார்க்கப் பணி­களை மேற்­கொண்­டு­வரும் ஒரு மார்க்க, சமூக வழி­காட்டல் செய்து வரும் சபையே அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா என்­பதை சக­லரும் அறிவர். அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா எந்­த­வொரு வேட்­பா­ள­ருக்கும் எந்­தவோர் அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ செயற்படுவதில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் எமது தாய் நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் குடிமக்களது நல்வாழ்வுக்காகவும் அதிகம் பிரார்த்திப்போம், இறையுதவியைப் பெற்றுத் தரும் நற்கருமங்களில் எம்மை ஈடுபடுத்திக் கொள்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.