இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று இருப்பு நிரூபணத்துக்கான முயற்சிகள்

0 514

கடந்த 31.08.2024 சனிக்­கி­ழமை வை.எம்.எம்.ஏ. மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்ற சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எம்.எம். அபுல்­கலாம் எழு­திய ‘நாட்டு நலனில் முஸ்­லிம்­களின் பங்­க­ளிப்­புகள் (வர­லாற்­றாய்வு) எனும் நூல் வெளி­யீட்டு விழாவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை அரபு பொழிப் பீட முன்னாள் பீடாதிபதி போராசிரியர் கலாநிதி
எம்.எஸ்.எம்.ஜலால்தீன் ஆற்றிய உரையின் தொகுப்பு

இலங்­கையில் இஸ்லாம்
உலகில் இஸ்லாம் தோன்­றி­யது முதல் அந்த புனித வாழ்வு நெறி இலங்­கை­யு­டனும் தொடர்­பு­கொண்­டுள்­ளதை பல்­வேறு வர­லாற்று ஆய்­வுகள் நிரூ­பிக்­கின்­றன. தெற்­கா­சி­யாவின் முஸ­்லிம் சமூ­கங்­களில் மிக நீண்ட வர­லாற்றைக் கொண்­ட­வர்கள் இலங்கை முஸ்­லிம்­க­ளாவர்.

இஸ்­லாத்தின் தூது உலக நாடு­க­ளுக்கு கொண்டு செல்­லப்­பட்ட சம­கா­லத்தில் அத்­தூது இந்­தியா, இலங்கை போன்ற நாடு­க­ளுக்கும் எடுத்துச் செல்­லப்­பட்­ட­தாக வர­லாற்று சான்­றுகள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன. இலங்­கையில் இஸ்லாம் அறி­மு­க­மான காலப்­பி­ரிவு பற்றி பல்­வேறு கருத்­துகள் காணப்­ப­டு­கின்­றன.
நபி (ஸல்) அவர்­க­ளது காலப்­பி­ரிவில் இலங்­கைக்கு இஸ்லாம் அறி­மு­க­மா­னது.
கலீபா உமர் (ரழி) அவர்­க­ளது காலப்­பி­ரிவில் அறி­மு­க­மா­னது.

உமை­யாக்கள் காலப்­பி­ரிவில் இடம்­பெற்ற ஹாஷி­மியர் புலம்­பெ­யர்­வுகள் மூலம் அறி­மு­க­மா­னது

நபி (ஸல்) அவர்­களின் தூது­வ­ராக சீனா­வுக்குச் சென்ற வஹப் இப்னு அபீ ஹப்ஸா (ரழி) அவர்கள் இலங்­கைக்கு வந்­த­தா­கவும், இலங்கை அர­ச­னுக்கு இஸ்­லாத்தின் அழைப்பை விடுத்­த­தா­கவும் ஹுஸைன் இப்னு முஹம்மத் என்­பவர் கோர்வை செய்த ‘அல்­கியா பாக்­கரி’ எனும் நூலின் முதலாம் பாகத்­தி­லி­ருந்து பெற்­றுக்­கொண்­ட­தாக ஆதாரம் காட்டி முஸ்­லிம் ­நேசன் பத்­தி­ரி­கையில் அறிஞர் சித்­தி­லெப்பை எழு­தி­யுள்­ளார். அதேபோல் கி.பி. 7ஆம் நூற்­றாண்­டு­களில் அநு­ரா­த­புர ஆட்­சி­யா­ளர்­களின் முக்­கிய துறை­மு­க­மாக விளங்­கிய இலங்­கையில் வடக்கே அமை­யப்­பெற்ற மாந்தைத் துறை­மு­கத்தில் கண்டு பிடிக்­கப்­பட்ட புதை­பொருள் ஆய்­வு­களும், அரபு கல்­வெட்­டுக்­களும் அரபு குடி­யி­ருப்­புகள் காணப்­பட்­ட­மைக்­கான சான்­று­க­ளாக அமை­வ­தாக கலா­நிதி சுக்ரி குறிப்­பி­டு­கின்­றார்.

வர­லாற்றுச் சான்­று­க­ளி­னூ­டாக நிரூ­பிக்­கப்­பட்ட இலங்கை முஸ்­லிம்­களின் தொன்மை வர­லாறு முஸ்­லிம்கள் இந்­நாட்­டோடு இரண்­டறக் கலந்து இந்­நாட்டின் இரண்­டா­வது சிறு­பான்மை இன­மாக கடந்த ஆயிரம் வரு­டங்­க­ளாக வாழ்ந்து வரு­கின்­றனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இலங்­கையில் கடை­சி­யாக எடுக்­கப்­பட்ட (2012 இல்) குடி­சன மதிப்­பீட்டு அறிக்­கையின் படி 9.7 வீத­மாக சுமார் 21 இலட்சம் மக்கள் தொகை கொண்­ட­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர். எவ்­வா­றெ­னினும் இத்­தொகை இப்­போது இதை­விட அதி­க­மாக உள்­ள­தையும் மறுப்­ப­தற்­கில்லை.

முஸ்­லிம்கள் பற்­றிய வர­லாறு ஆய்­வுகள்
இலங்கை முஸ்­லிம்­களின் தோற்றம், பரவல் பற்­றிய பல்­வேறு ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள போதிலும் இவை அனைத்தும் 18, 19 நூற்­றாண்­டு­க­ளுக்கு பின்­னரே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளதை எம்மால் உணர முடி­கி­றது. இவ்­வ­ர­லாற்று ஆய்வில் முஸ்­லிம்கள் மட்­டு­மன்றி, பிற மத, இன, மொழி பேசும் அறி­ஞர்­களும், வெளி­நாட்டு ஆய்­வா­ளர்­களும் கூட ஈடு­பட்­டுள்­ளதை நாம் அறி­யலாம். எவ்­வா­றெ­னினும் இலங்கை முஸ்­லிம்­களின் தொன்மை வர­லாறு பற்­றிய வர­லாற்றுச் சான்­றுகள் முஸ்லிம் அறி­ஞர்­களால் செய்­யப்­ப­ட­வில்லை என்­பதை இலங்­கையின் பிர­பல வர­லாற்­றாய்­வாளர் T.B.H. அபே­ய­சிங்க பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கின்­றார்கள்.

‘While the Sinhalese have their “MAHAVAMSA the CULAVAMSA and the RAJAVALIYA and the TAMILS their YALPANA VAIPAVAMALAI, the MUSLIMS No choronicsl of their own. They are a people without a historical tradition. Following from this is the second problem that much of the information on the Muslim during this period has to be gleaned from the writings by the Portuguese their deadly enemies’ (Muslim of Sri Lanka – P.129).

சிங்­கள மக்­க­ளுக்கு அவர்­க­ளது சொந்த வர­லாற்று நூல்­க­ளான மகா­வம்சம், குல­வம்ச, ரஜ­வ­லிய போன்ற தொன்மை மிகு வர­லாற்று நூல்­களும், தமிழ் மக்­க­ளுக்கு அவர்­களால் எழு­தப்­பட்ட ‘யாழ்ப்­பாண வைபவ மா லை போன்ற நூல்­களும் காணப்­படும் அதே­வேளை, இலங்கை முஸ்­லிம்­களின் தொன்மை வர­லாறு கூறும் அவர்­களால் எழு­தப்­பட்ட வர­லாற்று நூல்கள் எதுவும் காணப்­பட வில்லை. பொது­வாக இவர்கள் வர­லாற்றுப் பாரம்­ப­ரி­யத்தை (பாது­காக்­காத) மக்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றனர். இங்கு மற்­றொரு பிரச்­சி­னையும் காணப்­ப­டு­கின்­றது. இலங்கை முஸ்­லிம்கள் பற்­றிய அதி­க­ள­வி­லான தக­வல்கள் இலங்கை முஸ்­லிம்­களின் எதி­ரி­க­ளாக வர­லாற்றில் பதி­யப்­பட்­டுள்ள போர்த்­துக்­கே­யரின் வர­லாற்றுத் தக­வல்­க­ளி­லி­ருந்தே பெறப்­பட்­டுள்­ளமை துர­திஷ்­ட­வ­ச­மாகும் என்று அபே­ய­சிங்க அவர்கள் இங்கு குறிப்­பி­டு­வது மிக முக்­கிய விட­ய­மாகும்.

தமது சமூகம் சார்ந்த வர­லாற்றுச் சான்­று­களை ஆய்வு செய்து உறு­திப்­ப­டுத்­து­வதில் இலங்­கையின் பெரும்­பான்மை சமூ­கங்­க­ளான சிங்­கள, தமிழ் மக்கள் தொன்று தொட்டு மிகவும் ஆர்வம் காட்டி வரு­வ­துடன், பல்­வேறு படைப்­பு­க­ளையும் ஆய்­வு­ல­குக்கு தந்­துள்­ளார்கள். இதன் மற்­றொரு வெளிப்­பா­டாக தமது சமூகம் சார்ந்த ஆய்­வு­க­ளிலும் அவற்றை வெளிப்­ப­டுத்­து­வ­திலும் இவ்­விரு சமூக ஆய்­வா­ளர்கள் மத்­தியில் தொடர்ச்­சி­யாக ஒரு பனிப்போர் நடந்து வரு­வ­தையும் நாம் இங்கு குறிப்­பிட வேண்டும்.

இதற்கு ஆதா­ர­மாக யாழ்ப்­பா­ணத்தில் தொன்று தொட்டு அழைக்­கப்­பட்டு வந்த பல தமிழ் பெய­ரி­லான ஊர்கள் இன்று சிங்­கள ஆய்­வா­ளர்­களால் சிங்­கள மொழி­யாக்கம் செய்­யப்­பட்டு, தமக்கே உரிய ஊர்­க­ளா­கவும் திரிவு பெற்­றுள்­ளதை எம்மால் அறிய முடி­கின்­றது. உதா­ர­ண­மாக யாழ்ப்­பா­ணத்தில் உள்ள வலி­காமம், வெலி­கம என்ற சிங்­கள ஊராக இருந்­த­தாக சொந்தம் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது.

இதே­போல பல ஊர்­களை இவ்­விரு சமூ­கங்­களும் தமக்­கு­ரி­ய­தென சொந்தம் கொண்­டாடி வரு­கின்­றனர். இச்­செ­யற்­பாடு இவ்­விரு சமூகம் சார்ந்த சாதா­ரண பொது மக்கள் மத்­தியில் மட்­டு­மன்றி, அறி­ஞர்கள், ஆய்­வா­ளர்கள் மத்­தி­யிலும் வேரூன்­றி­யுள்­ளதை பர­வ­லாக அறி­யலாம்

வர­லாற்றுத் துறையில் தமிழ் மொழி­யி­லான ஜாம்­ப­வ­னாக கரு­தப்­படும் பேரா­சி­ரியர் பத்­ம­நாதன் அவர்கள் பெளத்த மக்­களின் தொன்மைமிகு வர­லாற்று நூலான மகா­வம்­சத்­தையே கேள்­விக்­குட்­ப­டுத்தி அதன் நெளிவு சுழிவுகளை தகுந்த ஆதா­ரத்­துடன் முன்­வைத்த பிர­பல கட்­டுரை ஒன்று அண்­மையில் வெளி­வந்­தது. இவ்­வாய்­வுக்­கட்­டுரை மகா­வம்­சத்தின் தோற்றம், அதன் நம்­ப­கத்­தன்மை பற்­றிய பல்­வேறு கேள்­வி­களை ஆய்­வு­ல­கத்தில் எழுப்­பி­யுள்­ளது. அவற்­றுக்­கான விடை­களை காண்­ப­திலும் சிங்­கள ஆய்­வா­ளர்கள் ஈடு­பட்­டுள்­ளார்கள்.

இவ்­வா­றான வர­லாற்று தேடல்­களில் ஏற்­பட்ட பிரக்ஞைகளினூடாக, இன்று இலங்கை முஸ்­லிம்கள் தமது தாய்­நாட்­டுக்கு ஆய்­றிய பங்­க­ளிப்­பு­களை நிறுவும் பணியில் அண்­மைக்­கா­ல­மாக பல ஆய்­வா­ளர்கள் ஈடு­பட்­டுள்­ளதை நாம் தேடலின் மூலம் அறிய முடி­கின்­றது. இலங்கை முஸ்­லிம்­களின் தோற்றம், பரவல், வர­லாறு பற்றி மட்­டு­மல்ல அவர்­களின் தேசிய பங்­க­ளிப்­புகள் பற்­றிய குறிப்­பு­களும், பாட விதா­னங்­களும் இலங்கை பரீட்சைத் திணைக்­க­ளத்தின் க.பொ.த.உயர்­தர இஸ்லாம் பாடத்­திட்­டத்­திலும் இடம் பெற்­றுள்­ளது மட்­டு­மன்றி அதற்­கான விளக்கக் குறிப்­பு­களும் மிக விரி­வாக எழு­தப்­பட்­டுள்­ளன.
இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றுத் துறையில் தடம்­ப­தித்த நூல்­களில் சில­வற்றை நாம் அடை­யாளம் காணலாம்.

Muslims of Sri Lanka (1986) Edited by Dr. M.A.M.Shukri
Vamadewan V.(1999) ‘The Story of Sri Lankan Muslims
Devaraja Lorna (1994) ‘The Muslims of Sri Lanka- One thousand years & ethinic harmony (1900-–1915)
முஹம்­மது ஸமீம் (1999) ‘ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்.
Ragavan M.D. (1975) ‘Muslims Under the Portuguese Rule’
அமீன் எம்.ஐ.எம். (2000) ‘இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும்’
Asad Kamil (1993) ‘ The Muslims of Sri Lanka Under the British Rule’
இவை தவிர பல நூற்­றுக்­க­ணக்­கான ஆய்வுக் கட்­டு­ரை­களும் தமிழ் மொழி­யிலும், மிக­ அ­தி­கமாக ஆங்­கில மொழி­யிலும் இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றைத் தரு­ப­வ­னாக வெளி­வந்­துள்­ளன.

இத்­தொ­ட­ர­ிலேயே சட்­டத்­த­ரணி அபுல் கலாம் எழுதி இன்று வெளி­யி­டு­கின்ற ‘நாட்டு நலனில் முஸ்­லிம்­களின் பங்­க­ளிப்­புகள்’ என்ற இந்த நூலும் இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றை சான்றுப்படுத்தும் நூலாக அமையும் என நம்­பு­கிறேன். ஆசி­ரி­ய­ருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.