மத்ரஸா சட்டமூலம்: ஆராய குழு நியமனம்

0 115

(றிப்தி அலி)
மத்­ரஸா பாட­சா­லை­களை ஒழுங்­கு­ப­டுத்துவதற்­கான சட்­ட­மூலம் தொடர்பில் ஆராய்­வ­தற்­கான குழு­வொன்று கல்வி அமைச்­சினால் அண்­மையில் நிய­மிக்கப்பட்­டுள்­ள­து.

கல்வி அமைச்சின் செய­லாளர் திலகா ஜய­சுந்­த­ரவின் உத்­த­ரவின் பேரில் அமைச்சின் பாட­சாலை விவ­கா­ரங்­க­ளுக்­கான மேல­திக செய­லாளர் பீ.ஆர் ஹரி­ய­வ­சத்­தினால் இக்­குழு நிய­மனம் தொடர்­பி­லான அறி­வித்தல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

கல்வி அமைச்சின் கல்விச் சேவைக்­கான மேல­திக செய­லாளர் கலா­நிதி கே.பி. முன­ஹம தலை­மை­யி­லான இக்­கு­ழுவின் செய­லா­ள­ராக அமைச்சின் நிர்­வாகம் மற்றும் காணி பிரி­விற்கு பொறுப்­பான சிரேஷ்ட உதவிச் செய­லாளர் திரு­மதி எம்.எப்.கே நிசா செயற்­ப­டு­கின்றார்.

கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் புவி­யியல் துறைத் தலைவர் பேரா­சி­ரியர் பரீனா ருசைக், கல்வி அமைச்சின் தனியார் பாட­சா­லைகள் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்­பாளர் எஸ்.ஏ.என். பெரேரா, மேல் மாகாண கல்வித் திணைக்­கள பிரதிக் கல்விப் பணிப்­பா­ளர்­க­ளான திரு­மதி பீ.டி விக்­ம­ரத்­தி­லக மற்றும் ஏ.எஸ் நஜீப், கல்வி அமைச்சின் முஸ்லிம் பாட­சா­லைகள் பிரிவின் மேல­திக கல்விப் பணிப்­பாளர் எம்.ஐ.எம். நௌபர்தீன், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பொரு­ளாளர் கலா­நிதி அஹமட் அஸ்வர் மற்றும் முஸ்லிம் தனியார் சட்ட மறு­சீ­ர­மைப்பு குழுவின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் ஆகியோர் இக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­க­ளாவர்.

இக்­கு­ழுவின் முத­லா­வது கூட்டம் கடந்த ஜூலை 22ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்­பெற்­றுள்­ளது. அரபு மத்­ர­ஸாக்­களை ஒழுங்­கு­ப­டுத்த விரைவில் சட்­ட­மூ­ல­மொன்­றினை கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, கடந்த டிசம்பர் மாதம் இடம்­பெற்ற குருத்­த­லாவ மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்தின் நூற்­றாண்டு நிகழ்வில் உரை­யாற்றும் போது தெரி­வித்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்தே மத்­ரஸா பாட­சா­லை­களை ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தற்­கான சட்­ட­மூலம் தொடர்பில் ஆராய்வதற்கான குழு கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சினால் ஜனாதிபதியின் செயலாளரிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.