உயிரிழந்த சிறுவன் ஹம்தியின் அகற்றப்பட்ட சிறுநீரகம் வைத்தியசாலையிலிருந்து காணாமல் போயுள்ளது

இரு வைத்தியர்களும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்; விசாரணை அறிக்கை எங்கே என சுகாதார அமைச்சரிடம் முஜிபுர் ரஹ்மான் கேள்வி

0 151

சிறு­நீ­ரக மாற்று சத்­தி­ர­சி­கிச்சை செய்­ததன் கார­ண­மாக கடந்த வருடம் உயி­ரி­ழந்த மூன்று வயது சிறுவன் ஹம்­தியின் அகற்­றப்­பட்ட சிறு­நீ­ரகம் கொழும்பு லேடி ரிஜ்வே வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து காணாமல் போயுள்­ள­தா­கவும் இது மிகவும் பார­தூ­ர­மான விடயம் எனவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்­று­முன்­தினம் பாரா­ளு­மன்றில் சுட்­டிக்­காட்­டினார்.

அத்­தோடு, இந்த சத்­திர சிகிச்­சை­யுடன் தொடர்­பு­பட்ட இரு வைத்­தி­யர்கள் நாட்­டை­விட்டு வெளி­யே­றி­யுள்­ள­தா­கவும் விட­யத்­துடன் தொடர்­பு­டைய விசா­ரணை அறிக்கை இன்னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை என்றும் சுகா­தார அமைச்சின் மீது குற்றம் சுமத்­தினார்.

நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்றின் கேள்வி நேரத்­தின்­போதே அவர் இதனை தெரி­வித்தார்.

மேலும் குறிப்­பி­டு­கையில்,
டிசம்பர் 2022 இல், ஹம்தி பஸ்லீம் என்ற மூன்று வயது சிறு­வனின் இடது சிறு­நீ­ரகம் கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்­தி­ய­சா­லையில் அகற்­றப்­பட்­டது. சிறு­நீ­ரகம் செய­லி­ழந்­த­மையே இதற்குக் காரணம். ஆனால் அந்த ஒப­ரேஷன் முடிந்து, அந்த சத்­திர சிகிச்­சைக்கு பின், அந்த சிறுவன் சாதா­ரண நோயாளர் விடு­தியில் சேர்த்த பின், இடது சிறு­நீ­ரகம் அகற்­றப்­பட்­ட­தாக அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் அந்த சிறு­நீ­ரகம் அகற்­றப்­பட்ட ஏழு மாதங்­க­ளுக்குப் பின்னர், இரண்டு சிறு­நீ­ர­கங்­களும் அகற்­றப்­பட்­டமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அந்த சிறுவன் ஜூலை 2023 இல் உயி­ரி­ழந்தார். அந்த சிறுவன் உயி­ரி­ழந்து சரி­யாக ஒரு வருடம் ஆகி­றது.

சத்­திர சிகிச்­சையில் ஈடு­பட்ட இரண்டு வைத்­தி­யர்கள் ஏற்­க­னவே நாட்டை விட்டு வெளி­யே­றி­யுள்­ளனர்.

இந்த சத்­திர சிகிச்­சையை செய்­த­வரின் பெயர் டொக்டர் நளின் விஜ­யகோன். இந்த சத்­திர சிகிச்சை முடிந்­த­வுடன் அவர் நாட்டை விட்டு வெளி­யே­றினார். அடுத்­த­தாக அதை ஸ்கேன் செய்த டொக்டர் நுவான் ஹேரத்தும் நாட்டை விட்டு வெளி­யே­றி­யுள்ளார். இதில் தொடர்­பு­டைய இரு­வரும் இன்று இந்த நாட்டில் இல்லை. இப்­போது அந்த சிறு­நீ­ர­கங்கள் வைத்­தி­ய­சா­லையில் இல்லை. இது மிகப்­பெரும் பிரச்­சி­னை­யாகும். எப்­ப­டி­யி­ருந்­தாலும், சிறு­நீ­ர­கத்தை அகற்­றினால், அது வைத்­தி­ய­சா­லையில் இருக்க வேண்டும். தற்­போது அது வைத்­தி­ய­சா­லையில் இல்லை என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனவே இது மிகவும் பார­தூ­ர­மான நிலைமை என நான் கரு­து­கிறேன், இது கொழும்பு சிறுவர் வைத்­தி­ய­சா­லையில் இடம்­பெற்ற சம்­பவம்.

விசா­ரணை நடத்தி அறிக்கை சமர்ப்­பிக்­கப்­படும் என அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். இன்­றோடு ஒரு வருடம் ஆகி­றது. இது­வரை எந்த அறிக்­கையும் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. அத்­துடன் இந்த விடயம் தொடர்­பாக ரவூப் ஹக்கீம் எம்.பி. பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பி­ய­போது அறிக்­கையை முன்­வைப்­ப­தாக குறிப்­பி­டப்­பட்­டது. ஆனால் அறிக்­கைகள் இன்னும் வர­வில்லை.

எனவே, நான் உங்­க­ளிடம் கேட்க விரும்­பு­கிறேன், குறிப்­பாக இப்­போது அந்த சிறுவன் இறந்து ஒரு வருடம் ஆகி­றது. சுகா­தார அமைச்சு எடுத்த நட­வ­டிக்­கைகள் மற்றும் அந்த அறிக்­கை­களின் நிலை ஆகியவற்றை உங்கள் ஊடாக அறிய விரும்புகிறேன் என்றார்.

தற்போது அந்த கேள்விக்கு தம்மிடம் பதில் இல்லை என அவைத் தலைவரிடம் தெரிவித்த சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன, ஒரு வாரத்திற்குள் பதில் அளிப்பதாக முஜிபுர் ரஹ்மான் எம்.பி.யிடம் உறுதியளித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.