தேரரின் விடயத்தில் முஸ்லிம்கள் சமயோசிதமாக நடக்க வேண்டும்

0 157

இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் அ­வம­தித்த குற்­றச்­சாட்டில் நான்கு வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள பொது பல சேனா அமைப்­பி­ன் பொதுச் செய­லாளர் கல­­கொட அத்தே ஞான­­சார தேர­ருக்கு மன்­னிப்பு வழங்­கு­மாறு பெளத்த அமைப்­புகள் அழுத்­தங்­களை வழங்கி வரு­கின்­றன. கடந்த வெசக் பண்­டி­­கை­யை­யொட்டி தேரரை மன்­னித்து விடு­விக்­கு­மாறு அஸ்கிரிய உள்­ளிட்ட நான்கு பீடங்­க­ளி­னதும் மகா­நா­யக்க தேரர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர். இதற்­கப்பால் மேலும் சில பெளத்த அமைப்­பு­களும் தனி நபர்­களும் தேரரை விடு­விப்­ப­தற்­கான கோரிக்­கை­க­ளை முன்வைத்­தி­ருந்­தனர்.

இருப்­பினும் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­த­வர்­களின் சம்­மதம் இன்றி தன்னால் தேரரை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது என ஜனா­தி­பதி தரப்பில் கூறி­யுள்­ள­தாக தெரிய வரு­கி­றது. இந்­நி­லையில் தேர­ருக்கு எதி­ராக வழக்குத் தாக்­கல் செய்த முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் சம்­ம­தத்­தினைப் பெற்றுத் தரு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­ய­துல் உல­­மா­வுக்கு பெளத்த அமைப்­புகள் அழுத்­தங்­களை வழங்கத் தொடங்­கி­யுள்­ளன. இதன்­பொ­ருட்டு நேரில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்த குறித்த பெளத்த அமைப்­புகள் வேண்­டுகோள் விடுத்­துள்­ள­தா­கவும் அதற்கு உலமா சபை நேரம் வழங்­க­வில்லை என்றும் அறிய முடி­கின்­ற­­து.

இந் நிலை­யில்தான் இந்த விவ­காரம் தொடர்பில் முஸ்லிம் சமூ­கத்தின் நிலைப்­பாட்டை எடுப்பதற்கான கூட்டம் ஒன்று நேற்று முன்­தினம் கொழும்பில் நடை­பெற்­ற­போது தேரரை விடு­விப்­ப­தற்கு தாம் சிபா­ரிசு செய்­வ­தில்லை என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தலை­மை­யி­லான முஸ்லிம் அமைப்­புகள் தீர்­மா­­னித்­துள்­ளன.

இக் கூட்­டத்­­தின்­போது சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரும் ஞான­சார தேர­ரு­க்கு ஜனா­தி­பதி மூலம் பொது மன்னிப்புப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கான சிபா­ரிசுக் கடி­தத்தை வழங்­கு­மாறு பெளத்த அமைப்­புகள் விடுத்துள்ள வேண்­டுகோள் குறித்து விரிவாக ஆராயப்­பட்­டுள்­ள­து. இந்த வேண்­டு­கோளின் சாதக பாத­கங்கள் மற்­றும் இது விட­யத்தில் முஸ்லிம் சமூகம் தலை­யி­டு­­வதில் உள்ள அபா­யங்கள் குறித்து இக் கூட்­டத்தில் கலந்து கொண்­ட­வர்கள் தமது கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ள­னர்.

இந்­­நி­லை­யிலேயே இது விட­யத்­தில் முஸ்லிம் சமூகம் எந்­­த­வொரு நிலைப்­பாட்­டையும் முன்­வைப்­ப­தில்லை என்றும் கோரப்­பட்ட சிபா­ரிசுக் கடி­தத்­தை வழங்­கு­வ­தில்லை என்றும் ஏக­ம­ன­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

ஞான­சார தேரர் ஏற்­­க­னவே நீதி­மன்ற அவ­ம­திப்பு குற்­றச்­சாட்டில் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்த நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­­சே­ன­வினால் பொது மன்னிப்பு வழங்கி விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்தார். எனினும் இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் அவ­மதித்தமை தொடர்பில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இடம்பெற்ற விசாரணைகளை மையப்ப‌டுத்தி, மேல் நீதிமன்றில் ஞானசார தேரருக்கு எதிராக சட்ட மா அதிபரால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்­பான விசா­ர­ணை­­களின் முடி­வி­லேயே நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே சிறைத்­தண்­டனை வழங்கி தீர்ப்­ப­ளித்­தார்.

தேரருக்கு மன்னிப்பளிக்கும் விட­யத்தில் முஸ்லிம் சமூகம் தலை­யிட வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்­பதே பல­ரதும் ஏகோ­பித்த நிலைப்­பா­டா­கும். முறைப்­பாடு செய்­த­வர்கள் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் என்ற போதிலும் இந்த நாட்டில் சுயா­தீ­ன­மாக இயங்கும் நீதி­மன்­றமே இத்­தண்­ட­னையை வழங்­கி­யது. அந்த வகையில் தேர­ருக்கு மன்­னிப்­ப­ளிக்க வேண்­டிய அவ­சியம் முஸ்லிம் சமூ­கத்­திற்கு கிடை­யாது. இது தொடர்பில் ஜனா­தி­பதியே தீர்­மா­னிக்க முடியும். இது பற்றித் தீர்­மா­னிப்­ப­தற்­கான அதி­காரம் தனக்­கி­ரு­ந்தும் முஸ்லிம் சமூ­கத்தின் சம்­ம­தத்தைப் பெற்று வரு­மாறு ஜனா­தி­பதி கோரி­யி­ருப்­பாராயின் அதன் பின்­னணி என்னவாகவிருக்கும் என்­பதை எம்மால் அனு­மானிக்க முடியும். என­வே­தான் இந்த அர­சியல் சதி வலையில் முஸ்லிம் சமூகம் சிக்­காது சம­யோ­சி­த­மாக நடந்து கொள்­வதே சிறந்­த­தாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.