வெலிகம மத்ரஸா தீ விபத்து: ‘அறிக்கை ஏதும் கிடைக்கவில்லை’

0 164

வெலி­கம ஹப்ஸா அரபுக் கல்­லூரி திடீர் தீ விபத்­துகள் சம்­பந்­த­மான இர­சா­யன பகுப்­பாய்­வாளர், மின்­சார சபை பொறி­யி­ய­லாளர் ஆகி­யோரின் அறிக்கை இன்னும் வழங்­கப்­ப­ட­வில்லை என பொது மக்கள் பாது­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

வெலி­கம கல்­பொக்கை பிர­தே­சத்தில் அமைந்­துள்ள ஹப்ஸா மகளிர் அரபுக் கல்­லூரி கட்­டி­டத்தில் கடந்த 2024.04.29 மற்றும் அதற்கு முன்­ன­தாக 2024.03.03 ஆம் ஆகிய திக­தி­களில் ஏற்­பட்ட தீ விபத்­துகள், உடமை சேதம் என்­பன பற்றி விசா­ரணை நடாத்­து­மாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்­சிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

அதன் பிர­காரம் பூர்­வாங்க விசா­ர­ணை­க­ளின்­படி இரண்டு தீ விபத்­துக்கள் சம்­பந்­த­மான அறிக்­கைகள் மாத்­தறை நீதவான் (Magistrate) நீதி­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்­துள்­ள­தா­கவும், இர­சா­யன பகுப்­பாய்­வாளர் மற்றும் மின்­சார சபை பொறி­யி­ய­லாளர் ஆகி­யோரின் அறிக்­கைகள் இது­வ­ரை­யிலும் கிடைக்­கப்­பெ­ற­வில்­லை­யென்றும் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர், முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ஹக்­கீ­முக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்ளார்.
2024.04.29 ஆம் திக­தி­யன்று பிரஸ்­தாப அரபுக் கல்­லூரிக் கட்­டி­டத்­துக்கு மேலாக ட்ரோன் கெம­ரா­வொன்று ஜேர்மன் பிரஜையொரு­வரால் பறக்க விடப்­பட்ட விடயம் சம்­பந்­த­மா­கவும், தீ விபத்து நாச­காரச் செயலா அல்­லது கால­நிலை மாற்­றத்­தினால் ஏற்­பட்­டதா என்பது பற்­றியும் விரி­வாக ஆராயப்பட்டு நாசக்கார செயலாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.