இனவாத வன்முறைகளை தடுக்க பொறிமுறை அவசியம்

0 178

அளுத்­கம வர்த்­தக நகரை மையப்­ப­டுத்தி அளுத்­கம, பேரு­வளை உள்­ளிட்ட பொலிஸ் பிரி­வு­களில் பதி­வான இன­வாத வன்­முறை சம்­ப­வங்கள் நடந்து 10 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. ஆனால், அந்த இன­வாத வன்­மு­றையின் வடுக்கள் அப்­ப­டியே தான் இருக்­கின்­றது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி அதி­கா­ரி­கொட, வெலி­பிட்­டிய, சீனன் வத்த, துந்­துவ, பேரு­வளை, வெலிப்­பன்னை உள்­ளிட்ட பகு­தி­களில் முஸ்­லிம்­களை இலக்கு வைத்து வன்­மு­றைகள் பதி­வா­கின. இந்த இன­வாத வன்­மு­றை­களில் இருவர் சுட்டுக் கொலை செய்­யப்­பட்­டனர். துப்­பாக்கிச் சூடு மற்றும் ஏனைய நட­வ­டிக்­கை­களால் 80 பேர் படு­கா­ய­ம­டைந்­துள்­ளனர். 48 வீடுகள் முற்­றாக தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ளன. 17 பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடாத்­தப்­பட்­டன. முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான 17 வர்த்­தக நிலை­யங்கள் முற்­றா­கவும், 62 வர்த்­தக நிலை­யங்கள் பகு­தி­ய­ள­விலும் அழிக்­கப்­பட்­டன. 2248 முஸ்­லிம்கள் உள்­ளூரில் இடம்­பெ­யர்ந்­தனர். இந்த தர­வுகள் உயர் நீதி­மன்றின் வழக்­கா­வ­ணத்தில் உள்ள உத்­தி­யோ­க­பூர்வ தர­வு­க­ளாகும்.

இந்த இன­வாத வன்­மு­றை­க­ளுக்கு உரிய சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டா­ததால் பின்னர் கிங்­தோட்டை, திகன என முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை கலா­சாரம் தொடர்ந்­தது.

அளுத்­கம வன்­மு­றை­க­ளுக்கு முன்னர் அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் சுமார் ஒரு மணி நேரமும் 15 நிமி­டங்­களும் ஆற்­றிய உரை இந்த வன்­மு­றை­க­ளுக்கு முக்­கிய தூண்­டு­த­லாக இருந்­தது. எனினும் அது தொடர்பில் இது­வரை ஞன­சார தேர­ருக்கு எதி­ராக எந்த சட்ட நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­டாமை இன­வா­தி­க­ளுக்கு தைரி­யத்தை அளிப்­ப­தா­கவே நோக்க வேண்­டி­யுள்­ளது.

இக்­கூட்டம் தொடர்பில் முன் கூட்­டியே அர­சாங்­கத்­துக்கு தகவல் கிடைத்­தி­ருந்தும் அக்­கூட்­டத்தை நடாத்த அனு­ம­தி­ய­ளித்து, பொலிஸ் கட்­டளைச் சட்­டத்தை சரி­வர அமுல் செய்ய பொலிஸார் தவ­றி­யுள்­ள­தா­கவும் பொலி­ஸாரும் அர­சாங்­கமும் தமது பொறுப்­புக்­களை சரி­வர அமுல் செய்ய தவ­றி­ய­தா­கவும் அதன் விளைவே அளுத்­கம மற்றும் அதனை அண்­மித்த முஸ்லிம் கிரா­மங்கள் மீதான அத்­து­மீ­றிய தாக்­குதல் எனவும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜெப்ரி அழ­க­ரட்ணம், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஆகியோர் உயர் நீதி­மன்றில் அண்­மையில் வாதிட்­டி­ருந்­த­மையும் இங்கு நினைவு கூரத்­தக்­கது.

இந்த கல­வரம் ஒரு போக்­கு­வ­ரத்து சம்­ப­வத்­தி­லி­ருந்து ஆரம்­பித்­தது. இரு முச்­சக்­கர வண்டி சார­தி­க­ளுக்கு இடையே வழ­மை­யாக பாதையில் நடக்கும் ஒரு வார்த்தை பிர­யோக சம்­பவம், திரி­பு­ப­டுத்­தப்­பட்டு கல­வ­ரத்­துக்­கான அஸ்­தி­வாரம் இடப்­பட்­டது. திக­னை­யிலும் இதுதான் நடந்­தது. போக்­கு­வ­ரத்து சம்­ப­வத்தை மையப்­ப‌­டுத்தி நடந்­த­தாக கூறப்­பட்ட தேரர் மீதான தாக்­குதல் தொடர்பில் அளுத்­கம பொலிஸார் 3 பேருக்கு எதி­ராக களுத்­துறை நீதி­மன்றில் வழக்குத் தொடுத்­தனர். அதில் அம்­மூ­வரும் நிர­ப­ரா­திகள் என கூறி, அப்­ப‌டி ஒரு தாக்­குதல் நடந்­த­மைக்­கான சான்­றுகள் இல்லை எனக் கூறி விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் சம்­ப­வங்கள் குறித்து விசா­ரித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு, அளுத்­கம, பேரு­வளை மற்றும் திகன உள்­ளிட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடந்த வன்­மு­றைகள் தொடர்பில் விட­யங்கள் தொடர்­பிலும் ஆராய்ந்­துள்­ளது. அதில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் குறித்­தான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் ( ஐ.சி.சி.பி.ஆர்)கீழ் நட­வ­டிக்கை எடுக்க சட்ட மா அதி­ப­ருக்கு பரிந்­து­ரையும் செய்­துள்­ளது. எனினும் இது­வரை அந்த பரிந்­துரை அமுல் செய்­யப்­ப­ட­வில்லை.

இந்த இன­வாத வன்­மு­றை­க­ளுக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட ஐந்து அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதி­மன்றில் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்த பொலிஸார் தவ­றி­யதன் ஊடாக தமது அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தா­கவும், வன்­மு­றை­க­ளுக்கு கார­ண­மா­ன­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்­க­கவும் அம்­ம­னுவில் கோரப்­பட்­டுள்­ளது. அத்துடன் விஷேடமாக, இவ்வாறான வன்முறைகள் ஏற்படுவதை தடுக்க பொறிமுறை ஒன்றினை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பு ஊடாக வழங்கி அதனை அமுல் செய்ய சட்டத்தை அமுல் செய்பவர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த பொறிமுறையே தற்போதைக்கு மிக அவசிய மாகிறது. அவ்வாறான தடுப்பு பொறிமுறையொன்றே எதிர்காலத்தில் இனவாதிகளை கட்டுப்படுத்தவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் உதவும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.