ரமழான் நம்மிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கிறது

நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு

0 175

இஸ்­லா­மிய நாட்­காட்­டியில் ஒன்­ப­தா­வது மாத­மாகக் கரு­தப்­படும் புனித ரமழான் மாத­மா­னது, முஸ்லிம் சகோ­த­ரர்­க­ளுக்கு சிந்­தனை மற்றும் ஆன்­மீக வளர்ச்­சிக்­கான மாத­மாகக் கரு­தப்­ப­டு­கி­றது. இந்த ரமழான் மாதம், நல்­வாழ்வு மற்றும் நல்­வாழ்வின் கலங்­கரை விளக்­க­மாக இருப்­ப­தோடு நம்­மி­டையே ஒற்­றுமை மற்றும் மத நல்­லி­ணக்­கத்தை வளர்க்­கி­றது என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க விடுத்­துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார்.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, சாதி, மத பேத­மின்றி இலங்­கை­யர்கள் என்ற வகையில் நாம் அனை­வரும் எதிர்­கொண்ட இக்­கட்­டான கால­கட்­டத்தை கடந்து நாட்டில் நல்­ல­தொரு சூழல் உரு­வா­கி­யுள்ள இவ்­வே­ளையில் எமது சக முஸ்­லிம்­க­ளுக்கு ரமழான் பண்­டி­கையை மகிழ்ச்­சி­யாகக் கொண்­டாடும் வாய்ப்பு இந்த வருடம் கிடைத்­துள்­ள­தை­யிட்டு நான் ஆனந்­த­ம­டை­கின்றேன்.

இந்­நாட்டில் ரமழான் நோன்பு காலத்தை முஸ்­லிம்­க­ளுக்கு மட்­டு­மன்றி, அனை­வரும் தமது மகிழ்ச்­சியைப் பகிர்ந்­து­கொள்ளும் கால­மாக கரு­து­வதே சரி­யா­ன­தென நான் நினைக்­கிறேன்.

தனி­ம­னித முன்­னேற்­றத்தைப் பொருட்­ப­டுத்­தாமல், கூட்டுச் சமூக விழு­மி­யங்­களை உயர்த்­து­வ­தற்­காக உரு­வாக்­கப்­படும் இவ்­வா­றான விட­யங்கள், வீழ்ச்­சி­ய­டைந்த இலங்கைப் பொரு­ளா­தா­ரத்தை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும், நாட்டை முன்­னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்­வ­தற்­கு­மான கூட்டு முயற்­சிக்­கான அடிப்­ப­டையை வழங்கும் என்றும் நான் நம்­பு­கிறேன்.

அர்ப்­ப­ணிப்பு, சுயகட்­டுப்­பாடு, சகிப்­புத்­தன்மை உள்­ளிட்ட ரம­ழானில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­படும் விழு­மி­யங்கள், அதை நோக்­கிய பய­ணத்தில் சரி­யான வழி­காட்­டி­யாக அமையும் என்ற எதிர்­பார்ப்­புடன், இலங்கை வாழ் முஸ்லிம் மக்­க­ளுக்கும், முழு உலக முஸ்லிம் சமூகத்திற்கும் சமாதானம், நல்லிணக்கம் நிறைந்த இனிய ரமழான் பெருநாளாக அமைய இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.