வக்பு சட்டத்தில் திருத்தம்

புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை நீதிபதிகள், சட்டத்தரணிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழு நியமனம்

0 304

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் சமூகம் தற்­போது எதிர்­நோக்­கி­யுள்ள தேவைகள் மற்றும் சவால்கள் உட்­பட எதிர்­கா­லத்தில் எதிர்­நோக்­க­வுள்ள சவால்­க­ளையும் கருத்­திற்­கொண்டு தற்­போ­தைய வக்பு சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு புத்­த­சா­சனம், மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது.

இதற்­கென புத்­த­சா­சனம், மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் முன்னாள் தலைவர் ஏ.டப்­ளியு.ஏ.சலாம் தலை­மையில் 7 பேர் கொண்ட குழு­வொன்­றினை நிய­மித்­துள்­ளது. குறிப்­பிட்ட குழு தனது அறிக்­கையை அமைச்­ச­ர­வைக்குச் சமர்ப்­பிப்­ப­தற்­காக மூன்று மாத காலத்­துக்குள் கைய­ளிக்கும் படியும் பணிக்­கப்­பட்­டுள்­ளது.

1956ஆம் ஆண்டின் 51ஆம் இலக்க வக்பு சட்டம் ஏற்­க­னவே 1962ஆம் ஆண்­டிலும் 1983ஆம் ஆண்­டிலும் இரு தட­வைகள் திருத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், தற்­போ­தைய மற்றும் எதிர்­கால தேவை­க­ளுக்கு அமை­வாக இச்­சட்டம் மீண்டும் திருத்­தங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யுள்­ள­தா­கவும் புத்­த­சா­சனம், மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சின் செய­லாளர் கையொப்­ப­மிட்டு நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவின் உறுப்­பி­னர்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்ள நிய­மனக் கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

குர்ஆன் மத்­ர­ஸாக்கள் மற்றும் அர­புக்­கல்­லூ­ரி­க­ளுக்­கான வழி­காட்­டல்கள் வக்பு சட்­டத்தில் தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டில்லை. அத்­தோடு தற்­போ­துள்ள வக்பு சட்­டத்தில் பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நம்­பிக்கை பொறுப்­பாளர் நிய­மனம் அவர்­க­ளது தக­மைகள் தெரிவு செய்யும் முறைைம ,விஷேட நம்­பிக்கை பொறுப்­பாளர் நிய­மனம், பள்­ளி­வா­சல்­களின் பணி­யா­ளர்கள் குறிப்­பாக இமாம், மெள­லவி, கதீப்மார் நிய­மனம் தொடர்பில் தற்­போ­தைய வக்பு சட்­டத்தில் தேவை­யான வழி­காட்­டல்கள் இல்லை.

பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களின் நிர்­வாக பிரச்­சி­னை­களில் சிறிய பிரச்­சி­னையை கூட தீர்ப்­ப­தற்கு பல வரு­டங்கள் செல்­கின்­றமை மற்­றும் முஸ்லிம் நம்­பிக்கை நிதியம் தொடர்­பான விட­யங்­களை முறை­யாக குறிப்­பிட்டு வக்பு சட்­டத்­துக்குள் உள்­வாங்கல் உட்­பட பல விட­யங்­களில் இக்­குழு சிபா­ரி­சுகள் அடங்­கிய அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வுள்­ளது.

குழுவின் அங்­கத்­த­வர்­க­ளாக பின்­வ­ருவோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.
ஏ.டப்­ளியு.ஏ.சலாம் (முன்னாள் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றத் தலைவர்), ஏ.ஏ.ம்.இல்­லியாஸ் (ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி, வக்பு ட்ரிபி­யுனல் உறுப்­பினர்), நிப்ராஸ் நஸீர் (சட்­டத்­த­ரணி, ஹஜ் குழு உறுப்­பினர்), என்.எம்.மத்தீன் (சட்­டத்­த­ரணி வக்பு சபை உறுப்­பினர்), எம்.பி.ஐ.ரஹ்மான் (மேலதிக பணிப்பாளர் நாயகம் – நீர்பாசன திணைக்களம்), இஸட்.ஏ.எம்.பைசல் (பணிப்பாளர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை,)யு.எல்.எம்.மஜிட் (வக்பு ட்ரிபியுனல் தலைவர், முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி) – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.