(ஏ.ஆர்.ஏ. பரீல்)
இவ்வருட ஹஜ் யாத்திரைக்காக சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள 3500 ஹஜ் கோட்டாவுக்கான யாத்திரிகர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் தங்களைப் பதிவு செய்து கொண்டு யாத்திரையை உறுதி செய்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் தெரிவித்தார்.
பயணத்தை உறுதி செய்து கொண்டுள்ள யாத்திரிகர்கள் அனைவரும் திணைக்களத்தினால் ஹஜ் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள ஹஜ் முகவர் நிலையங்களையே நேரடியாக தொடர்புகொள்ள வேண்டுமெனவும், 93 ஹஜ் முகவர் நிலையங்களுங்கு திணைக்களம் ஹஜ் அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள ஹஜ் முகவர் நிலையங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளாது உப முகவர்கள் ஊடாக பயண ஏற்பாடுகளைச் செய்வதை தவிர்ந்து கொள்ளுமாறும் யாத்திரிகர்களை பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
உபமுகவர்கள் மூலம் பயண ஏற்பாடுகளை மேற்கொள்வதால் ஹஜ் பயண கட்டணத்தில் அதிகரிப்பு ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.- Vidivelli