தெஹிவளை பாபக்கர் பள்ளிவாசல் விற்கப்படுமா?

0 215

ஏ.ஆர்.ஏ.பரீல்

‘‘தெஹி­வளை பாபக்கர் ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுடன் இணைந்த காணி விற்­பனை செய்­யப்­படப் போகி­றது. அதனை நிர்­வ­கிப்­ப­வர்கள் இதன் பின்­ன­ணியில் இருக்­கி­றார்கள் எனும் குற்­றச்­சா04ட்­டுக்கள் மேலெ­ழுந்­துள்­ளன. எனினும் இந்த பாபக்கர் அறக்­கட்­ட­ளையை (Babaker Trust) நிர்­வ­கிக்கும் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்கள் இந்தக் குற்­றச்­சாட்­டை முற்றும் முழு­தாக மறுக்­கி­றார்கள். இது வக்பு செய்­யப்­பட்ட சொத்து. இதனை எப்­படி விற்க முடியும்? என்றும் அவர்கள் கேட்­கி­றார்கள்..

இந்த விவ­காரம் தொடர்பில் தெளி­வு­களைப் பெறு­வ­தற்­காக சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­களை நாம் அணு­கி­னோம்.

பாபக்கர் பள்­ளி­வாசல் மற்றும் காணி
தெஹி­வளை மிருகக் காட்­சி­சா­லைக்கு அருகில் அமைந்­தி­ருக்­கி­றது இந்த பாபக்கர் ஜும்ஆ பள்­ளி­வாசல். இந்தப் பள்­ளி­வா­ச­லுக்கு சொந்­த­மா­னதே 77 பேர்ச் காணி. சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த தன­வந்­த­ரான உமர் சாலி அப்துல் அஸீஸ் பாபக்கர் என்­ப­வரின் நிதியின் ஊடாக இக்­காணி கொள்­வ­னவு செய்­யப்­பட்­டது. 1997.08.13ஆம் திகதி இக்­காணி கொள்­வ­னவு செய்­யப்­பட்டு ஜம்­இய்­யத்­துஷ்­ஷபாப் என்று அழைக்­கப்­படும் Association of Muslim Youth Sailan அமைப்பின் கீழ் இக்­காணி பதிவு செய்­யப்­பட்­டது.

குறிப்­பிட்ட பிர­தே­சத்தின் முஸ்­லிம்­க­ளது மார்க்கக் ­கல்வி, பாட­சா­லைக்­கல்வி மற்றும் கலா­சா­ரங்­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கா­கவே பாபக்­க­ரினால் இக்­காணி அன்­ப­ளிப்பு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை ஜம்­இய்­யத்துஷ் ஷ­பாபின் பெயரில் காணி இருப்­பதால் பாபக்கர் சவூ­தி­யி­லி­ருந்து இக்­காணி அபி­வி­ருத்­திக்கு பணம் அனுப்பி வைப்­பதில் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டா­தி­ருப்­ப­தற்­காக இக்­கா­ணியின் உரி­மத்தை பாபக்­கரே ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. ஜம்­இய்­யத்­துஷ்­ஷ­பாபே இக்­கோ­ரிக்­கையை விடுத்­தது.

இத­னை­ய­டுத்து இக்­கா­ணியின் உரிமம் சவூதி தன­வந்­த­ரான உமர் சாலி அப்துல் அஸீஸ் பாபக்­கரின் பெய­ருக்கே மாற்­றப்­பட்­டது. இம்­மாற்றம் 2022.07.24ஆம் திகதி நிகழ்ந்­தது. அத்­தோடு இக்­கா­ணியில் பள்­ளி­வாசல் மற்றும் முன்­பள்ளி பாட­சாலை இயங்­கு­வ­தாக தெஹி­வளை கல்­கிசை மாந­கர சபைக்கு அறி­விக்­கப்­பட்டு காணிக்­கான மதிப்­பீட்டு வரி விலக்கும் பெறப்­பட்­டது.

2006இல் பாபக்கர் அல்­ஷ­பாப்பின் பணிப்­பாளர் மெள­லவி எம்.எஸ்.எம்.ரஷீட், எம்.எஸ்.எம்.சபர் ஆகி­யோ­ருக்கு அட்­ரோனி அதி­காரம் வழங்­கினார். பாபக்­கரின் சார்பில் காணி அபி­வி­ருத்­திக்கு ஒப்­பந்தம் செய்து கொள்ளல், அரச நிறு­வ­னங்கள் , உள்­ளூ­ராட்சி சபை­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்ளல் வரிகள் மற்றும் மின்­சார கட்­டணம் செலுத்­து­வ­தற்­கான அதி­காரம் இரு­வ­ருக்கும் வழங்­கப்­பட்­டது. அதன்­படி அபி­வி­ருத்திப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இந்­நி­லையில் அளுத்­க­மயில் இடம்­பெற்ற முஸ்­லிம்கள் மீதான இனக்­க­ல­வரம் பல சவால்­களை ஏற்­ப­டுத்­தி­யது. காணி வெளி­நாட்­ட­வ­ரான பாபக்­கரின் பெயரில் இருப்­பது பிரச்­சினை என்­பதை எடுத்து விளக்­கினோம். காணியை அறக்­கட்­டளை (Trust) ஒன்­றுக்கு மாற்­றுவோம் என அல்­ஷபாப் நிறு­வனம் பாபக்­க­ருக்கு ஆலோ­சனை வழங்­கி­ய­தாக அல்­ஷ­பாபின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில், இதனை பாபக்கர் ஏற்­றுக்­கொண்­ட­துடன் அல்ஷபாைப சேர்ந்­த­வர்­களை அறக் கட்­ட­ளைக்கு நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­க­ளாக நிய­மிக்கும்படி வேண்­டிக்­கொண்டார். அத­ன­டிப்­ப­டையில் ‘பாபக்கர் அறக்­கட்­டளை’ (Babaker Trust) என்ற பெயரில் அறக்­கட்­டளை (இல 1139) உரு­வாக்­கப்­பட்­டது.

அறக்­கட்­ட­ளையின் நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­க­ளாக பின்­வ­ருவோர் நிய­மிக்­கப்­பட்­டார்கள். எம்.எஸ்.எம்.ரஷீட், எம்.எஸ்.எம். சபர், எம்.எஸ்.எம். தாஸிம், எச். மொஹிதீன் சித்திக், ஏ.எம்.அமீர், எம்.எச்.ஹிஸ்னி மொஹமட்.
குறிப்­பிட்ட பாபக்கர் அறக்­கட்­ட­ளையில் பாபக்கர் தனது விருப்­பத்தைத் தெரி­வித்­துள்ளார். பள்­ளி­வாசல் ,மத்­ரஸா, இஸ்­லா­மிய கலா­சார நிலையம் இயங்க வேண்டும். சமூக கலா­சார கல்வி நலன்­பு­ரிக்­கென நிதி உட்­பட அனைத்தும் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என தனது விருப்­பத்தைக் குறிப்­பிட்­டுள்ளார்.

ஏன் இந்த சர்ச்சை
பாபக்­க­ரினால் வக்பு செய்­யப்­பட்ட காணியில் அமைந்­துள்ள பள்­ளி­வாசல் 2004 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்டு ஐவேளை தொழுகை நடாத்­தப்­பட்­டது. தற்­போது இப்­பள்­ளி­வா­சலில் ஜும்ஆ தொழு­கையும் இடம்­பெற்று வரு­கி­றது. இப்­பள்­ளி­வாசல் கட்­டிடம் ஜமாஅத்­தாரின் மற்றும் ஜம் இய்­யத்­துஷ்­ஷ­பாபின் நிதிப் பங்­க­ளிப்பின் ஊடாக அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இப்­பள்­ளி­வா­சலில் இரண்டு மெள­ல­விகள் உட்­பட மூவர் பணியில் இருக்­கி­றார்கள். இவர்­க­ளுக்­கான சம்­பளம் ஜம்­இய்­யத்­துஷ்­ஷ­பா­பி­னாலே வழங்­கப்­பட்டு வரு­கி­றது.

இப்­பள்­ளி­வா­சலை வக்பு சபையில் பதிவு செய்­வ­தற்­கான முயற்­சி­களின் போதே ஜம்­இய்­யத்­துஷ்­ஷ­பா­பிற்கும் ஜமா­அத்­தி­ன­ருக்கும் இடையில் முரண்­பாடு ஏற்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 2012 முதல் உரு­வான இம்­மு­ரண்­பாடு 2023 இறு­தி­வரை தொடர்ந்­தது.

இது பள்­ளி­வாசல் அல்ல ஒரு நிலை­ய­மாகும் என்று ஜம்­இய்­யத்­துஷ்­ஷபாப் கூறி­வந்­த­தாக ஜமா­அத்தார் குற்றம் சுமத்­தி­யுள்ள நிலையில் ஜம்­இய்­யத்­துஷ்­ஷபாப் அதனை மறுத்­துள்­ளது. இது ஒரு அறக்­கட்­டளை என்ற அடிப்­ப­டையில் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமை­வா­கவே நாம் பதி­வு­க­ளுக்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம். நாம் சட்­டங்­களை மதிப்­ப­வர்கள். எவ­ரது அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் நாம் அடி­ப­ணிய முடி­யாது என ஷபாப் தரப்பில் தெரி­விக்­கப்­ப­டு­கி­ற­து.
முரண்­பாடு ஏற்­பட்ட நிலையில் இப்­பள்­ளி­வா­சலின் ஜமா­அத்­தினர் 6 பேர் இணைந்து பாபக்கர் அறக்­கட்­ட­ளையின் நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­க­ளுக்கு எதி­ராக 2018.05.22 ஆம் திகதி கல்­கிசை மாவட்ட நீதி­மன்றில் வழக்­கொன்­றினைத் தாக்கல் செய்­துள்­ளனர். இவ்­வ­ழக்கில் கோரப்­பட்ட இடைக்­கால தடை உத்­த­ரவு மாவட்ட நீதி­ப­தி­யினால் நிரா­க­ரிக்­க­பட்­டது. ஜம்­இய்­யத்­துஷ்­ஷபாப் நம்­பிக்கை பொறுப்­பா­ளர்கள் தமது பக்க நியாய ஆதா­ரங்­களை நீதி­மன்றில் சமர்ப்­பித்­தனர். இக்­கா­ணிக்கோ அறக்­கட்­ட­ளைக்கோ மூன்றாம் தரப்பின் உரிமை கோர முடி­யா­தென நீதி­பதி மறுத்தார். இவ்­வ­ழக்கு விசா­ரணை தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­கி­றது.

அமைச்­ச­ரி­டமும் புகார்
பாபக்கர் பள்­ளி­வாசல் வக்பு சபையில் பதிவு செய்­யப்­ப­டாது இழுத்­த­டிக்­கப்­ப­டு­வ­தா­கவும் பள்­ளி­வா­ச­லுக்கு சொந்­த­மான காணி விற்­பனை செய்­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் பள்­ளி­வாசல் ஜமா­அத்தார் சிலர் புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்­க­விடம் புகார் செய்­தனர்.

இத­னை­ய­டுத்து அமைச்சர் பள்­ளி­வா­சலை பதிவு செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கும்­ப­டியும், காணி­யினை விற்­பனை செய்­வ­தற்கு மேற்­கொள்ளும் முயற்சி தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்­ளு­மாறும் திணைக்­கள பணிப்­பா­ளரை வேண்­டி­யி­ருந்தார்.

இதே­வேளை பாபக்கர் அறக்­கட்­ட­ளையின் நம்­பிக்கை பொறுப்­பாளர் பாபக்­கரின் அனு­ம­தியைப் பெற்று அறக்­கட்­ட­ளையில் சில திருத்­தங்­க­ளுடன் பதி­வினை மேற்­கோள்­வ­த­ாக வக்பு சபை­க்கு அறி­வித்தனர். இதற்­கான விஷேட அட்­ரோனி அதி­கார பத்­திரம் பாபக்­க­ரினால் எம்.எஸ்.எம். தாஸிம் மெள­ல­விக்கு வழங்­கப்­பட்­டது.

பாபக்கர் அறக்­கட்­ட­ளையின் நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­க­ளினால் பதிவு செய்­வ­தற்­கான உரிய ஆவ­ணங்கள் வக்பு சபைக்கு வழங்­கப்­பட்­டன. தர்ம நம்­பிக்கை நிதி­யத்தின் கீழ் பதிவு செய்­யும்­படி கோரப்­பட்­டது.

வக்பு சட்­டத்தின் கீழ் பதிவு
ஜம்­இய்­யத்துஷ் ஷபாப் வக்பு சபைக்கு சமர்ப்­பித்த ஆவ­ணங்­களைப் பரி­சீ­லித்த வக்பு சபை பாபக்கர் அறக்­கட்­ட­ளையை முஸ்லிம் தர்ம கட்­டளை (Muslim Charitable Turst) யை 32(1) இல வக்பு சட்­டத்தின் கீழ் பதிவு செய்­தது. பள்­ளி­வாசல் குறிப்­பிட்ட அறக்­கட்­ட­ளைக்குச் சொந்­த­மான பள்­ளி­வாசல் எனவும் தீர்­மா­னித்­தது.

இதே­வேளை வக்பு ட்ரிபி­யுனல் பாபக்கர் அறக்­கட்­ட­ளையில் பதவி வகிக்கும் நம்­பிக்கை பொறுப்­பா­னர்­க­ளான எம்.எஸ்.எம்.தாஸிம், எம்.எஸ்.எம். ரஷீட், ஏ.ஜே.ம்.வாரித், எச்.எம்.சித்திக், எம்.சி.எம்.முஸப்பர், எம்.ஏ.அக்ரம், எம்.எச்.ஹிஸ்னி மொஹமட் ஆகியோர் அனை­வரும் அறக்­கட்­ட­ளையின் நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­க­ளாக இருப்­பார்கள் எனவும் அறி­வித்­தது.

உப­குழு நிய­மனம்
பாபக்கர் அறக்­கட்­ட­ளையின் நம்­பிக்கை பொறுப்­பா­ளர்கள் சபை பள்­ளி­வா­சலின் நிர்­வாகம் மற்றும் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு 11 பேர் கொண்ட உப குழு­வொன்­றினை நிய­மித்­துள்­ளது. பாபக்­கரின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்­கவே இவ் உப­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

பாபக்கர் அறக்­கட்­டளை (Barbaker Trust)யை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் R/2651/C/248 எனும் இலக்­கத்தின் கீழ் 2023.12.06 ஆம் திகதி முதல் அமு­லுக்கு வரும் வகையில் பதிவு செய்­துள்­ள­தாக 2024.01.24ஆம் திகதி அறக்­கட்­ட­ளையின் நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­க­ளுக்கு அறி­வித்­துள்­ளது.

பாபக்கர் அறக்­கட்­ட­ளையை விற்க முடி­யுமா?
2015ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட பாபக்கர் அறக்­கட்­டளை பிர­க­ட­னத்தில் (இல 1139) உள்­வாங்­கப்­பட்­டுள்ள சில விதிகள் இதனை விற்­பனை செய்ய முடியும் எனத் தெரி­விப்­ப­தாக பாபக்கர் பள்­ளி­வாசல் ஜமா­அத்­தினர் குற்றம் சுமத்­து­கின்­றனர்.

அறக்­கட்­ட­ளையின் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்கள் சபை­யினால் இதனை விற்­பனை செய்ய முடியும் எனவும் அதற்­கான அதி­காரம் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பள்­ளி­வா­சலின் ஜமா­அத்தார் தெரி­விக்­கின்­றனர்.
இந்த அறக்­கட்­டளை சொத்­தினை விற்­ப­தற்­கான அதி­காரம் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஜமாஅத்தார் குற்றம் சுமத்­து­கின்­றனர்.

இவ்­வி­டயம் தொடர்பில் பாபக்கர் அறக்­கட்­ட­ளையின் நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸி­மிடம் விடி­வெள்ளி வின­வி­யது. அவர் விளக்­க­ம­ளிக்­கையில்,

‘வக்பு செய்­யப்­பட்­டுள்ள இந்தச் சொத்து அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களின் போது ஏதா­வ­தொரு நிலை­மையின் கீழ் ஆபத்­தினை எதிர்­நோக்­கினால், இச்­சொத்து பறி­போகும் நிலைமை ஏற்­பட்டால் இதனை வக்பு சபையின் அனு­ம­தி­யுடன் விற்று அந்த நிதி­யினை இதே­போன்­ற­தொரு சொத்­தினை கொள்­வ­னவு செய்து அறக்­கட்­ட­ளை­யொன்­றினை நிறு­வு­வ­தற்­கான சந்­தர்ப்பம் வழங்­கு­வ­தற்­கா­கவே அறக்­கட்­ட­ளையில் To sell என்ற வார்த்தை சேர்க்­கப்­பட்­டுள்­ளது என்றார்.

குற்­றச்­சாட்­டுகள் அபாண்­ட­மா­னவை
பாபக்கர் அறக்­கட்­ட­ளையின் கீழுள்ள காணி­யினை விற்­பனை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக சுமத்­தப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களை முற்­றாக மறுப்­ப­தாக குறிப்­பிட்ட அறக்­கட்­ட­ளையின் நம்­பிக்கை பொறுப்­பா­ளர்­களில் ஒரு­வரும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் உப செய­லா­ள­ரு­மான அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம் தெரி­வித்தார்.
ஜம்­இய்­யத்துஷ் ஷபாப் நாட­ளா­விய ரீதியில் பள்­ளி­வா­சல்­களை நிறுவி வரு­கி­றது. இந்­நி­லையில் நாம் ஏன் இதனை விற்க வேண்டும். இதனை ஒரு­போதும் விற்க முடி­யாது என்றும் அவர் கூறினார்.

பணிப்­பாளர் பைசல்
நாட்டில் அமு­லிலுள்ள வக்பு சட்­டத்­திற்கு அமை­யவே பாபக்கர் அறக்­கட்­டளை பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அதனால் எவ­ருக்கும் இதனை சவா­லுக்­குட்­ப­டுத்த முடி­யாது. உரிமை கோர முடி­யாது. அறக்­கட்­டளை பிர­க­ட­னத்தில் அதா­வது பதிவு செய்­யப்­பட்­டுள்ள அறக்­கட்­டளை பிர­க­ட­னத்தில் குறிப்பிட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை அதன் சட்டரீதியான நம்பிக்கை பொறுப்பாளர்கள் நடைமுறைப்படுத்தலாம். பாபக்கர் அறக்கட்டளை பிரகடனத்தை எதிர்ப்பவர்கள் மேன்முறையீடு செய்யலாம் என்றார்.

சுமுக தீர்வு அவசியம்
வக்பு சொத்துகள் மற்றும் பள்ளிவாசல் விவகாரங்களில் சமூகம் பிளவுபட்டு ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொள்வது தவிர்க்கப்பட வேண்டும்.
பாபக்கர் சொத்து முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட வேண்டும். குறிப்­பிட்ட சொத்து விற்­பனை செய்­யப்­படக் கூடாது என்று ஜமா­அத்தார் குரல் கொடுத்து வந்த நிலையில் அக் கோரிக்கை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

பாபக்கர் அறக்­கட்­டளை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தில் பதிவு செய்­யப்­பட்­டு­ பதி­வி­லக்­கமும் வழங்கப்பட்டுள்ளது.
பாபக்கர் வக்பு செய்த காணி ஒருபோதும் விற்கப்படமாட்டது. பாபக்கரின் அபிலாஷையின் படி உரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பாபக்கர் அறக்கட்டளையின் நம்பிக்கை பொறுப்பாளர்கள் உறுதியளித்துள்ள­னர்.

இந்­நி­லையில் பாபக்கர் பள்ளிவாசல் மற்றும் காணி விடயத்தில் இரு தரப்பும் ஒன்றிணைய வேண்டும். இதுவே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.