கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை அரசாங்கம் நெரிக்க எத்தனிக்கிறது

பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் காட்டம்

0 166

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் ஊடாக ஜனநாயகத்தைச் சீர்குலைத்து கருத்து முரண்படுவோரை முடக்குவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும், இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை அரசாங்கம் நெரிக்க எத்தனிப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை அந்த சட்­ட­மூ­லத்தின் மீதான முதல் நாள் விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போது தெரி­வித்தார்.
எதிர்க்­கட்­சி­யி­னரின் ஆட்­சே­ப­னைக்கு மத்­தியில் கட்சித் தலைவர் கூட்­டத்தில் ஆரா­யப்­பட்டு , பிரஸ்­தாப விவா­தத்தை செவ்­வாய்க்­கி­ழ­மையும், புதன்­கி­ழ­மையும் விவா­திப்­ப­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டதன் பின்னர் விவாதம் இடம்­பெற்­றது.

முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உரை­யாற்­றும்­போது மேலும் கூறி­ய­தா­வது,
எனக்கு முன் உரை­யாற்­றிய ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இந்த நிகழ்­நிலை காப்பு சட்ட மூலம் மக்­களை பாது­காக்கும் சட்டம் என்று எடுத்­துக்­காட்ட முயற்­சித்தார்.

ஆனால் எதிர்க்­கட்­சியின் கவ­னத்தை ஈர்த்­துள்ள கார­ணங்­களைப் பார்க்­கும்­போது அரசு தனது இருப்பை தக்க வைத்துக் கொள்­வ­தற்­கா­கத்தான் இதனை ஒரு துரும்பு சீட்­டாக பாவிக்­கின்­றது என்­பது எங்­க­ளுக்கு தெளி­வாக தெரி­கின்­றது. அதைத்தான் இப்­பொ­ழுது விளக்க போகின்றேன் .

வித்­தைக்­காரன் பார்­வை­யா­ளர்­க­ளுக்கு போலி­யான காட்­சியை காட்ட எத்­த­னிப்­பதை போன்றே அர­சாங்­கமும் பொது­மக்­க­ளுக்கு காட்ட எத்­த­னிக்­கின்­றது. இரா­ஜாங்க அமைச்சர் கனக ஹேரத் உரை­யாற்­றும்­போது இளவயது பிள்­ளைகள் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­வது பற்­றியும் பெண்­களின் நிர்­வாண தோற்றம் காட்­சிப்­ப­டுத்­தப்­படும் போது அவர்கள் அவ­மா­னப்­ப­டு­வது பற்­றியும், அவ்­வாறே பல­வி­தங்­க­ளிலும் பொது­மக்­களை பாது­காப்­ப­தற்கு அவ­சி­ய­மான சட்டம் என்­ற­வாறு இதை எடுத்­துக்­காட்ட முயற்­சித்தார்.

அவ­ருக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும் நீங்கள் இளவய­தி­ன­ரையும் பெண்­க­ளையும் பற்றி இங்கு கதைத்த போதிலும் ,உங்­க­ளுக்கு தெரி­யுமா இந்த சட்­ட­மூ­லத்தில் அடங்­கி­யுள்ள 57 பிரி­வு­களில் இரண்டு பிரி­வு­களில் மட்டும் தான் இளம் வய­தி­ன­ரையும் பெண்­க­ளையும் பற்றி குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. ஏனைய அனைத்தும் இணை­யத்­த­ளத்தை எவ்­வாறு கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருப்­பது என்­பதை பற்றி தான் உள்­ளன. இணை­யத்தின் ஊடாக தக­வல்­களை பரி­மாறும் போது அவ­மா­னத்­துக்­கு­ரிய வகையில் அர­சியல் ரீதி­யாக தங்­களால் சகித்துக் கொள்ள முடி­யாத அள­வுக்கு விமர்­ச­னங்கள் எழும்­போது அவற்றை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக தான் இந்த முயற்சி என்­பது திட்­ட­வட்­ட­மாக தெரி­கின்­றது.

இது பற்றி உயர்­நீ­தி­மன்­றத்தில் நீண்ட விவாதம் இடம்­பெற்­றது. இந்த சட்ட மூலம் அர­சி­ய­ல­மைப்­புக்கு ஏற்­பு­டை­யதா என்­பதை பற்றி பரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட போது சட்­டமா அதிபர் முர­ணான 31 பிரி­வு­க­ளையும் பற்றி விளக்­க­ம­ளிப்­ப­தற்கு மூன்று மணித்­தி­யா­லங்­களை செல­விட்­டி­ருக்­கிறார். இந்த சட்­ட­மூலம் அர­சி­ய­ல­மைப்­போடு இணங்கி செல்­லாத நிலையில் அதனை வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிப்­ப­தற்கு சட்­டமா அதிபர் எவ்­வாறு அத்­தாட்சி படுத்­தினார் என்­பது புதி­ராக இருக்­கி­றது. 57 பிரி­வு­களில் 31 பிரி­வுகள் அர­சி­ய­ல­மைப்புக்­கு முர­ணாக இருந்த போது அதனை தெரிந்து கொண்டே அவர் நீதி­மன்­றத்­திற்கு வந்­தி­ருந்தார்.

இதை நாங்கள் மிக கவ­ன­மாக நோக்க வேண்டும். இந்த நாட்டின் கருத்து வெளிப்­பாட்டு சுதந்­தி­ரத்தில் எஞ்­சி­யுள்ள சில காப்­பீ­டு­க­ளையும் கூட அப்­பு­றப்­ப­டுத்­து­வ­தற்கு இந்த சட்­டத்தின் ஊடாக அர­சாங்கம் எத்­த­னிக்­கின்­றது. அத்­துடன் இந்த நாட்டில் ஜன­நா­ய­கத்தை அழித்து ஒழிக்கப் போகின்­றது. மக்­களின் விமர்­ச­னத்­திற்கு அஞ்சி அர­சாங்கம் மக்­களை விட்டும் விரண்­டோ­டு­கின்­றது. அந்த விமர்­ச­னங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இப்­பொ­ழுது இந்த சட்­ட­மூ­லத்தை கொண்டு வந்­துள்­ளது. கடு­மை­யான தண்­ட­னைகள் விதிக்­கப்­படப் போகின்­றன மக்­களை நசுக்கும் சூழ்­நிலை ஏற்­ப­டுத்­தப்­ப­டப் போகி­றது. நிறை­வேற்று அதி­காரம் அத­னது நிலைப்­பாட்டை திட்­ட­வட்­ட­மாக தெளி­வாக்­கி­யுள்­ளது.

காலையில் நடை­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் , இந்த வழக்கில் தோன்­றிய ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சுமந்­திரன் எம்.பி இந்த சட்­டத்தின் 31 திருத்­தங்கள் பற்றி விவா­திப்­ப­தற்கு சட்­டமா அதிபர் எவ்­வாறு பிர­யாசை பட்டார் என்­பதை கூறி இருந்தார்.

தேர்தல் தொகுதி, தேர்தல் தொகுதி ஒருங்­கி­ணைப்பு என்­ப­ன­வற்றை கையாள்­வதும் இதன் உள்­ளார்ந்த நோக்­கங்­களில் ஒன்­றாகும். முன்னாள் ஜனா­தி­பதி தனியார் நிறு­வ­னங்­களை ஊடு­ருவிச் செல்லும் கண்­கா­ணிப்பு முறை ஒன்றை ஏற்­ப­டுத்தி ,அவற்றில் பொருத்­தப்­படும் கரு­வி­களின் ஊடாக ஒவ்­வொரு பிர­ஜை­யையும் உன்­னிப்­பாக கண்­கா­ணிக்­கின்ற ஒரு செயல்­ மு­றையை தோற்­று­வித்­தி­ருந்தார்.

இலங்­கையில் குற்றச் செயல்­க­ளைப்­பொ­றுத்­த­வரை ஏற்­க­னவே உள்ள சட்­டங்­க­ளைக் கொண்டு அவற்றை கையாள முடியும். அதற்­கான ஏற்­பா­டுகள் அந்த சட்­டங்­களில் அடங்­கி­யுள்­ளன. குற்­ற­வியல் கோவையில் 291,291(A), 291(B),484,485 ஆகி­யவை மூலம் அவற்றை கையாள முடியும் அவ்­வாறே ஐ .சி .சி .பி .ஆர். சட்­டத்தில் இதற்­கான ஏற்­பா­டுகள் உள்­ளன. ஆனால் அப்­பாவி மக்கள் வெளி­யிட்ட, அப்­பா­வித்­த­ன­மான சில கருத்­துக்­க­ளுக்­காக இந்த சட்­டத்தின் ஊடாக தண்­டிக்­கப்­பட்டி ருக்­கி­றார்கள். உண்­மை­யி­லேயே, வெறுப்­பூட்­டக்­கூ­டிய பேச்சு பேசி­ய­வர்கள் இதனால் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை. அவர்­க­ளுக்கு அர­சாங்­கத்தின் அனு­ச­ரணை இருந்து வந்­துள்­ளது.

அவ்­வாறே கணினி சம்­பந்­த­மான குற்றச் செயல்­க­ளுக்கு தண்­டிப்­ப­தற்கும் அதற்­கு­ரிய சட்டம் வேறாக இருக்­கி­றது . சில கட்­டளை சட்­டங்­களும் எடுத்­துக்­கொண்ட சில கட்­டங்கள் சட்­டங்­களும் உள்­ளன. மின்­னியல் பரி­மாற்ற சட்டம் போன்­ற­வையும் உள்­ளன .ஆகவே அவ்­வா­றி­ருக்கும் பொழுது ஏன் அர­சாங்கம் அவ­ச­ரப்­பட்டு இந்த சட்­ட­மூ­லத்­தை­கொண்டு வர வேண்டும்?.

உரிய முறையில் குற்ற செயல்­களை கையாள்­வ­தற்­கான சட்ட ஏற்­பா­டுகள் ஏற்­க­னவே இருக்­கத்­தக்­க­தாக ,சட்­டமும் ஒழுங்கும் பொறி­மு­றையும்(Law and Order Machinery) சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் பொறி­மு­றையும் (Law Enforcement Machinery) ஏன் இதில் தலை­யிட்டு கடும் போக்கை கடை­பி­டிக்­கின்­றன?
நேற்று (கடந்த திங்­க­ளன்று) பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் முக்கியஸ்தர்களும் பங்கு பற்றிய ஒரு கலந்துரையாடலில் சட்டத்துறை பேராசிரியர் சாவித்திரி குணசேகர இந்த சட்டமூலம் பற்றி அதனை கண்டித்துப் பேசினார். இந்த சட்ட மூலம் கொண்டுவரப்படுவதன் நோக்கம் சந்தேகத்துக்கு இடமானது என்று அவர் காரசாரமாக விமர்சித்தார்.
அரசாங்கம் அவசரமாக இதனை நிறைவேற்றிக் கொள்ளப் போகின்றது. அதாவது இந்த சட்டத்தை அப்பாவி மக்களின் தொண்டைக்குழிகளுக்குள் திணிக்க போகின்றது. மக்களை கண்ணியப்படுத்துவதற்காகவே கொண்டு வருகிறோம், அவர்களை பாதுகாப்பதற்காகவே கொண்டு வருகிறோம் என்று கூறிக்கொண்டு அரசாங்கம் இதனைச் செய்ய துணிந்திருக்கிறது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.