காஸாவின் கான் யூனுஸ் பகுதியில் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய இராணுவத்தினர் அங்குள்ள அடக்கஸ்தலங்களையும் தாக்கியழித்துள்ளனர். அதுமாத்திரமன்றி அங்கு சமீபத்திய தாக்குதல்களில் உயிரிழந்த பலஸ்தீனர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடங்களைத் தோண்டி ஜனாஸாக்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதேபோன்று கடந்த டிசம்பர் மாதமும் காஸாவின் பல பகுதிகளிலும் அமையப் பெற்றுள்ள அடக்கஸ்தலங்களை தாக்கி அழித்துள்ளதுடன் நூற்றுக்கணக்கான ஜனாஸாக்களையும் தோண்டி எடுத்துச் சென்ற சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட ஜனாஸாக்கள் பலஸ்தீன செயற்பாட்டாளர்களுடையவை என்றும் அவர்களது உடற்பாகங்களை திருடும் நோக்கிலேயே இவ்வாறு சடலங்களைத் தோண்டுவதாக தாம் சந்தேகிப்பதாகவும் யூரே மெட் எனும் மனித உரிமைகள் கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பலஸ்தீனில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் வான் வழியாகவும் தரை வழியாகவும் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் நேற்று வரை 24448 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 61504 பேர் காயமடைந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.- Vidivelli