சவூதி தலைமையில் உலகின் முதல் ஸ்மார்ட் சிட்டி மன்றம்

0 180

காலித் ரிஸ்வான்

உலகின் முதல் ஸ்மார்ட் சிட்டி மன்­றத்தை சவூதி அரே­பி­யாவின் தர­வுகள் மற்றும் செயற்கை நுண்­ண­றிவு ஆணையம் (SDAIA) வரு­கின்ற பெப்­ர­வரி மாதம் 2 முதல் 13 வரை சவூதி அரே­பி­யாவின் ரியாத் நகரில் நடாத்த தீர்­மா­னித்­துள்­ளது. எரெனா என்ற கண்­காட்­சி­க­ளுக்­கான அரங்­கத்தில் நடக்­க­வி­ருக்கும் இம்­மன்­றத்தில் 40க்கும் மேற்­பட்ட நாடு­களைச் சேர்ந்த 80 பேச்­சா­ளர்கள் கலந்து சிறப்­பிக்­க­வுள்­ளனர்.

இந்த நிகழ்வைப் பற்றி, SDAIA இன் தலைவர் கலா­நிதி அப்­துல்லா பின் ஷரஃப் அல்-­கம்டி கருத்து தெரி­விக்­கையில், “இந்த உல­க­ளா­விய மன்­ற­மா­னது ஸ்மார்ட் நக­ரங்கள் என்றால் என்ன என்­பது பற்­றியும் அவற்றின் முக்­கி­யத்­து­வத்­தையும் அறி­யப்­ப­டுத்தும் வகையில் அமை­யப்­பெ­ற­வுள்­ள­தோடு, இந்த நக­ரங்­களை உரு­வாக்க செயற்கை நுண்­ண­றிவு (AI) தொழில்­நுட்­பங்­களை எவ்­வாறு பயன்­ப­டுத்­தலாம் என்றும் தெளி­வூட்­ட­வுள்­ளது” என கூறினார்.

சவூதி அரே­பி­யாவின் பிர­தமர் மற்றும் SDAIA இன் இயக்­குனர்கள் குழுவின் தலை­வ­ரு­மான பட்­டத்து இள­வ­ரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்­களின் வழி­காட்­ட­லுக்கு இணங்­கவே இந்த மன்­றத்தை ஏற்­பாடு செய்­வதில் இராச்­சியம் ஆர்வம் காட்­டி­ய­தா­கவும் அவர் கூறினார். தர­வுகள் மற்றும் AI அமைப்பு, மேம்­பாடு மற்றும் சவூ­தியில் அதன் செயல்­பா­டு­க­ளுக்­கான தேசியக் குறி­யீ­டாக SDAIA இன் முக்­கிய பங்­கையும் அவர் எடுத்­து­ரைத்தார்.

மேம்­பட்ட தொழில்­நுட்­பங்­களின் துரித வளர்ச்­சியை அங்­கீ­க­ரிக்கும் விதத்தில் உல­கெங்­கிலும் உள்ள பல நாடுகள் தங்கள் குடி­மக்­களின் வாழ்க்கைத் தரத்தை மேம்­ப­டுத்த AI போன்ற தொழி­நுட்­பங்­களை பயன்­ப­டுத்­தியும் அவற்றை மேம்­ப­டுத்­தியும் வரு­கின்­றன. இதற்கு சவூதி அரே­பிய இராச்­சி­யமும் விதி­வி­லக்­கல்ல.

ஸ்மார்ட் நக­ரங்­களின் எதிர்­காலம் பற்­றிய கலந்­து­ரை­யாடல், அவற்றின் உட்­கட்­ட­மைப்­புடன் தொடர்­பு­டைய சவால்­களை எதிர்­கொள்தல் மற்றும் உல­கெங்­கிலும் உள்ள நக­ரங்­களில் வளர்ந்து வரும் மக்­கள்­தொ­கையின் தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்­கான புது­மை­யான தீர்­வு­களை ஆராய்­வ­துடன் சம்பந்­தப்­பட்ட கலந்­து­ரை­யா­டல்கள் மற்றும் அமர்­வு­களை இம்­மன்றம் கொண்­டி­ருக்கும்.

மேலும், 2030 ஆம் ஆண்­டிற்­கான ஐக்­கிய நாடுகள் சபையின் நிலை­யான வளர்ச்சி இலக்­கு­க­ளுக்கு (SDGs) இணங்க, ஸ்மார்ட் நக­ரங்­களை நிறு­வு­வதில் சவூதி மற்றும் பிற நாடுகள் அடைந்­துள்ள முன்­னேற்­றங்­க­ளையும் இம்­மன்றம் எடுத்துக் காண்­பிக்­க­வுள்­ளது.

இம்­மன்­ற­மா­னது 18,000க்கும் மேற்­பட்ட பார்­வை­யா­ளர்­களை நேரிலும் நிகழ்­நி­லை­யிலும் ஒன்­று­சேர்த்து நடத்­த­வுள்­ள­தோடு, ஸ்மார்ட் நக­ரங்கள் மற்றும் AI தொழில்­நுட்­பங்­களை நிர்­மா­ணிப்­பதில் நிபு­ணத்­துவம் பெற்ற உல­கெங்­கிலும் உள்ள நிபு­ணர்­களை ஒன்­றி­ணைக்கும் வகையில் ஸ்மார்ட் நக­ரங்­க­ளுக்­கான உல­க­ளா­விய தளத்­தையும் நிறு­வு­கி­றது.

உல­க­ளா­விய நக­ரங்கள், நகர்ப்­புற நட­மாட்­டத்தின் எதிர்­காலம், ஸ்மார்ட் பொது சேவைகள், அடுத்த நூற்­றாண்டில் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்­த­வ­கை­யி­லன நக­ரங்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான திட்­ட­மிடல், மேம்படுத்தப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை இம் மன்றத்தில் கலந்துரையாடவுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு AI மற்றும் தொழிநுட்பவியலோடு சம்மந்தப்பட்ட சவூதியின் இவ்வாறான முன்முயற்சிகள் அனைத்தும் அந்நாட்டின் விஷன் 2030 திட்டத்திற்கமைவாகவே இடம்பெறுகின்றன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.