இலங்கை யாத்திரிகர்கள் ஒழுக்க கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வார்கள்

இலங்கை தூதுக் குழுவிடம் சவூதி ஹஜ், உம்ரா அமைச்சர் தெரிவிப்பு

0 150

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘‘இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் நல்­லொ­ழுக்கம் மற்றும் நன்­ந­டத்­தை­யுள்­ள­வர்கள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்­சியைத் தரு­கி­றது. சவூதி அரே­பி­யாவின் இரு புனித தலங்­க­ளிலும் தூய்­மை­யாக சிறந்த ஒழுக்கக் கட்­டுப்­பா­டு­க­ளுடன் நடந்­து­கொள்­கி­றார்கள்’’ என சவூதி அரே­பி­யாவின் ஹஜ் உம்ரா அமைச்சர் கலா­நிதி தெளபீக் பின் பெளஸான் அல்­ரா­பியா தெரி­வித்தார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை சவூதி அரே­பியா ஜித்­தாவில் இலங்கை புத்­த­சா­சன மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்­கவும், சவூதி அரே­பிய ஹஜ், உம்ரா அமைச்­ச­ரு­மான கலா­நிதி தெளபீக் பின் பெளஸான் அல்­ரா­பி­யாவும் இவ்­வ­ரு­டத்­திற்­கான ஹஜ் உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­டனர். அந்­நி­கழ்வின் போதே சவூதி அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

 

இலங்கை ஹஜ் தூதுக்­குழு அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க தலை­மையில் சவூ­தி­ அ­ரே­பி­யா­வுக்கு விஜயம் செய்­தி­ருந்­தது. இத்­தூதுக் குழுவில் அமைச்­ச­ருடன் முஸ்லிம் சமய, கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் பைசல் ஆப்தீன், அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்­றாஹிம் அன்சார், ஹஜ் குழு உறுப்­பினர் இப்ஹாஸ் நபுஹான் மற்றும் இரு ஹஜ் முக­வர்கள் சங்­கங்­க­ளி­னதும் தலை­வர்­க­ளான அப்துல் காதர் பதுர்தீன் மொஹமட் கரீம், ரிஸ்மி ரியால் ஆகியோர் அடங்­கி­யி­ருந்­தனர்.

மேலும் ரியா­தி­லுள்ள சவூதி அரே­பி­யா­வுக்­கான இலங்கைத் தூதுவர் பி.எம்.ஹம்ஸா, ஜித்­தா­வி­லுள்ள இலங்கை கொன்சல் ஜெனரல் அல் ஹப்ஸி மெள­லானா என்­போரும் நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்­தனர்.
இதே­வேளை இலங்­கைக்கு சவா­லான சந்­தர்ப்­பங்­க­ளிலும், நல்ல நேரங்­க­ளிலும் சவூதி அரே­பியா எம்­முடன் கைகோர்த்­துள்­ளது. இலங்கை எரி­பொருள் பெற்றுக் கொள்­வதில் சவால்­களை எதிர்நோக்கிய காலத்தில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.இலங்கையர்களுக்கு தொடர்ச்சியாக பல்லாயிரக்கணக்கான தொழில்வாய்ப்புகளை வழங்கிவருகிறது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.