மட்­டக்­க­ளப்பில் பல கிரா­மங்கள் வெள்­ளத்தில் மூழ்­கின

0 184

எம்.எஸ்.எம் நூர்தீன்

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை தொட­ராக பெய்து வரு­வ­தனால் மாவட்­டத்­தி­லுள்ள குளங்கள், ஆறு­களின் நீர் மட்டம் அதி­க­ரித்­துள்­ள­துடன், மாவட்­டத்தின் பெரும்­பா­லான பகு­திகள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன.

இவ்­வ­ரு­டத்தின் முதல் தின­மான ஜன­வரி 01 திங்கட் கிழமை பிற்­பகல் இரண்டு மணி­ய­ளவில் ஆரம்­பித்த மழை தொடர்ந்து பெய்த நிலையில் மறுநாள் காலை 6 மணி­ய­ள­வி­லேயே ஓய்ந்­தது. இந்த காலப்­ப­கு­தியில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மாத்­திரம் 164.9 மில்லி மீற்றர் மழை பதி­வா­கி­யுள்­ளது.
இதனால் மாவட்­டத்தின் மண்­முனை வடக்கு, காத்­தான்­குடி, கோர­ளைப்­பற்று வடக்கு, மண்­முனை தென்­மேற்கு பட்­டிப்­பளை, போர­தீ­வுப்­பற்று வெல்­லா­வெளி மற்றும் எறா­வூர்­பற்று போன்ற பிர­தேச செய­லாளர் பிரி­வு­களில் வெள்ள நீர் வீடு­க­ளுக்குள் புகுந்­த­துடன் பெரும்­பா­லான வீதி­களும் வெள்ள நீரால் நிறைந்­துள்­ளன.

இதே­வேளை மாவட்­டத்தில் காத்­தான்­குடி பிர­தே­சத்தில் தாழ் நிலப்­ப­கு­திகள் வெள்­ளத்தால் நிறைந்­துள்­ள­துடன் 1231 குடும்­பங்­களும் 4218 நபர்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் 34 குடும்­பங்­களின் 109 பேர் உற­வி­னர்­களின் வீடு­களில் தங்­கி­யுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட தேசிய அனர்த்த நிவா­ரண சேவைகள் நிலையம் தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன் கிரான் புலி பாய்ந்­தகல் மற்றும் கின்­ன­யடி பிரம்­ப­டித்­தீவு, ஈர­ல­குளம், மயி­ல­வட்­டுவான், வாகரை, கல்­ல­ரிப்பு பகு­தி­க­ளுக்குச் செல்லும் பாதை முற்­றாக வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளதால் அங்கு படகு சேவைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

புதிய காத்­தான்­குடி வடக்கு, புதிய காத்­தான்­குடி தெற்கு, புதிய காத்­தான்­குடி கிழக்கு, காத்­தான்­குடி ஹைராத் நகர், ரிஸ்வி நவி மற்றும் ஷுஹதா பிர­தேசம் உட்­பட பல தாழ் நிலப் பிர­தே­சங்கள் வெள்­ளத்­தினால் மூழ்­கி­யுள்­ள­துடன் வீடு­க­ளுக்­குள்ளும் வெள்ளம் புகுந்­துள்­ளது.

 

திங்­கட்­கி­ழமை (1) மாலை தொடக்கம் திங்­கட்­கி­ழமை இரவு முழு­வ­து­மாக பெய்த மழை­யினால் இந்த வெள்ள அபாயம் ஏற்­பட்­டுள்­ளது.
இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பொது நிறு­வ­னங்­களும் பள்­ளி­வா­சல்­களும் சமைத்த உண­வு­களை வழங்கி வரு­வ­துடன் வீடு­களில் நிறைந்­துள்ள வெள்ள நீரை வெளி­யேற்­று­வ­திலும் உதவி வரு­கி­ன­றன.

வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்டு இடம்­பெ­யர்ந்து உற­வி­னர்கள் நண்­பர்கள் வீடு­களில் தங்­கி­யுள்ள குடும்­பங்­களை அடை­யா­ளப்­ப­டுத்தி பதிவு செய்­யு­மாறு காத்­தான்­குடி பிர­தேச செய­லாளர் உதய ஸ்ரீதர் காத்­தான்­குடி பிர­தேச செய­லாளர் பிரிவு உள்ள கிராம உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

காத்­தான்­குடி பிர­தேச செய­லாளர் பிரிவில் வெள்ள அனர்த்­தத்­தினால் இடம்­பெ­யரும் மக்­களை தேவை ஏற்­படின் தற்­கா­லிக இடங்­களில் தங்க வைப்­ப­தற்­காக பொதுக் கட்­டி­டங்­களை ஆயத்தம் செய்­யு­மாறு காத்­தான்­குடி பிர­தேச செய­லாளர் உதய சிறீதர் சகல கிராம உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் அறி­வு­றுத்தல் வழங்­கி­யுள்ளார்.

இதே­வேளை மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தொடர்ச்­சி­யாக பெய்­து­வரும் அடை மழை கார­ண­மாக வெள்ள அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களை மாவட்ட அர­சாங்க அதிபர் திரு­மதி.ஜே.ஜே.முர­ளீ­தரன் செவ்­வாய்க்­கி­ழமை நேரில் சென்று பார்­வை­யிட்டார்.

இவ்­வேளை நீரினை அகற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவப் பிரிவு, மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை, மண்­முனைப் பற்று பிர­தேச செய­லகம் என்­பன இணைந்து முன்­னெ­டுத்­தன.

காத்­தான்­குடி பிர­தேச செய­லகப் பிரிவில் வெள்ள அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களை மாவட்ட அர­சாங்க அதிபர் பார்­வை­யிட்­ட­துடன் அவ்­வாறு பாதிக்­கப்­பட்டு நலன்­புரி நிலை­யங்­க­ளுக்கு வரு­கை­தர முடி­யாமல் தமது வீடு­க­ளிலே தங்­கி­யி­ருக்கும் மக்­க­ளுக்கு ஹைறாத் பள்­ளி­வாசல் நிரு­வா­கத்­தினால் சமைத்த உணவு வழங்­கப்­படும் நிகழ்­விலும் அர­சாங்க அதிபர் திரு­மதி.ஜே.ஜே.முர­ளீ­தரன் கலந்து கொண்டார்.

இக்கள விஜயத்தின்போது அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், மண்முனைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் எம்.சியாஉல்ஹக், காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரி வ.ஜீவானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.