இலங்கைக்கும் சவூதிக்குமிடையிலான ஆடை சுற்றுலா துறைசார் உறவுகளை மேம்படுத்த திட்டம்

0 167

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள சவுதி அரே­பிய பொரு­ளா­தாரம் மற்றும் திட்­ட­மிடல் அமைச்சர் பைசல் எப் அலிப்­ராஹீம் (Fisal F.Alibrahim) கடந்த திங்­க­ளன்று பிற்­பகல் ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.

இலங்­கைக்கும் சவூதி அரே­பி­யா­வுக்கும் இடையில் நிலவும் பொரு­ளா­தார உற­வு­களை மேலும் வலுப்­ப­டுத்­து­வது குறித்து நீண்ட நேரம் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­துடன், குறிப்­பாக இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான ஆடை மற்றும் சுற்­று­லாத்­துறை தொடர்­பி­லான உற­வு­களை மேம்­ப­டுத்த எதிர்­பார்க்­கப்­ப­தாக சவூதி அரே­பிய பொரு­ளா­தாரம் மற்றும் திட்­ட­மிடல் அமைச்சர் தெரி­வித்தார்.

சவூதி அரே­பிய அர­சாங்கம் பிராந்­தி­யத்தில் பொரு­ளா­தார உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வதில் கவனம் செலுத்­து­வ­தா­கவும் பைசல் எப் அலிப்­ராகீம் சுட்­டிக்­காட்­டி­ய­தோடு அதில் இலங்­கைக்கு முக்­கிய இடம் வழங்­கப்­ப­டு­வதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார்.

மேற்கு ஆசியா உள்­ளிட்ட ஆசிய பிராந்­தி­யத்தில் ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை அர்ப்­ப­ணிப்­புடன் இருப்­ப­தாகக் குறிப்­பிட்ட ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, பிராந்­திய விவ­கா­ரங்கள் தொடர்­பா­கவும் அமைச்­ச­ருடன் கலந்­து­ரை­யா­டினார்.

மேலும், இலங்­கையின் சுற்­றுலா மற்றும் விவ­சாயத் துறை­களை நவீ­ன­ம­ய­மாக்கும் வேலைத்­திட்டம் குறித்து விளக்­க­ம­ளித்த ஜனா­தி­பதி, அத்­து­றை­களில் உள்ள முத­லீட்டு வாய்ப்­புகள் குறித்து அமைச்­ச­ருக்கு விளக்­க­ம­ளித்தார்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் தொடர்பான பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் கலந்துகொண்டனர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.