காஸாவில் போர் நிறுத்தத்துடன் பணயக் கைதிகள் 50 பேர் விடுதலை!

150 பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும்

0 248

ஹமாஸால் பண­யக் கைதி­க­ளாகப் பிடிக்­கப்­பட்­டுள்ள இஸ்­ரே­லியர்கள் 50 பேர் நான்கு நாட்­க­ளுக்குள் விடு­விக்­கப்­ப­டு­வார்கள் என்றும், இந்த கால­கட்­டத்தில் போர் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­படும் என்றும் இஸ்ரேல் பிர­தமர் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

அதே நேரத்தில் 50 பணயக் கைதி­களை விடுப்­ப­தற்குப் பதி­லாக இஸ்­ரே­லிய சிறை­களில் உள்ள 150 பலஸ்­தீ­னர்­களை விடு­விக்க இஸ்ரேல் சம்­ம­தித்­தி­ருப்­ப­தாக ஹமாஸ் வெளி­யிட்­டி­ருக்கும் அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.
இஸ்ரேல் அமைச்­ச­ரவை இந்த உடன்­பாட்­டுக்கு ஒப்­புதல் அளித்­துள்­ளது. இஸ்­ரேல் பிர­தமர் அலு­வ­லகம் இது தொடர்­பான அதி­கா­ர­பூர்வ அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது.

இஸ்ரேல் பிர­தமர் அலு­வ­லகம் தனது அறிக்­கையில், “அனைத்து பணயக் கைதி­க­ளையும் மீட்க இஸ்ரேல் அரசு உறுதி பூண்­டுள்­ளது. இந்த நோக்­கத்தை அடை­வ­தற்­கான முதல் கட்ட திட்­டத்­துக்கு அர­சாங்கம் ஒப்­புதல் அளித்­துள்­ளது, அதன்­படி பெண்கள் மற்றும் குழந்­தைகள் உட்­பட 50 பண­யக்­கை­திகள் நான்கு நாட்­க­ளுக்குள் விடு­விக்­கப்­ப­டு­வார்கள். அப்­போது சண்டை நிறுத்­தப்­படும்.”
“பணயக் கைதிகள் அனை­வரும் தாயகம் திரும்பும் வரை, ஹமாஸ் முற்­றி­லு­மாக அகற்­றப்­படும் வரை இஸ்­ரே­லிய அர­சாங்கம், இஸ்­ரே­லிய இராணுவம் மற்றும் பாது­காப்புப் படைகள் போரைத் தொடரும். காஸா­வி­லி­ருந்து இஸ்­ரே­லுக்கு புதிய அச்­சு­றுத்தல் எதுவும் இல்லை என்­பது உறுதி செய்­யப்­படும்.” என்று இஸ்ரேல் கூறி­யுள்­ளது.

ஒவ்­வொரு 10 பணயக் கைதி­களை விடு­விப்­ப­தற்கும் கூடு­த­லாக ஒருநாள் சண்டை நிறுத்தம் இருக்கும் என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த உடன்­பாட்டின் முக்­கி­யத்­துவம் என்ன?
முதலில் விடு­விக்­கப்­படும் முதல் 50 பேரில் பெரும்­பா­லானோர் இரு நாடு­களின் குடி­யு­ரிமை பெற்ற இஸ்­ரே­லிய பிர­ஜை­க­ளா­க இருப்­பார்கள் என்று நம்­பப்­ப­டு­கி­றது.

இப்­போது இந்த ஒப்­பந்தம் தொடர்­பாக, ஹமாஸ் புதிய அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. இதில் 50 இஸ்­ரே­லிய பண­யக்­கை­தி­க­ளுக்கு ஈடாக, இஸ்­ரே­லிய சிறை­களில் உள்ள 150 பலஸ்­தீ­னிய பெண்கள் மற்றும் குழந்­தைகள் விடு­விக்­கப்­ப­டு­வார்கள் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த ஒப்­பந்­தத்தின் கீழ், மனி­தா­பி­மான உதவி, அத்­தி­யா­வ­சிய மருந்­துகள் மற்றும் எரி­பொருள் நிரப்­பப்­பட்ட நூற்­றுக்­க­ணக்­கான டிரக்­குகள் காஸா­வுக்குள் நுழையும்.

நான்கு நாள் போர் நிறுத்­தத்தின் போது இஸ்ரேல் எந்தத் தாக்­கு­த­லையும் நடத்­தாது, யாரையும் கைது செய்­யாது என்று ஹமாஸின் அறிக்கை கூறு­கி­றது.
“நான்கு நாள் தற்­கா­லிக போர்­நி­றுத்­தத்தின் போது, தெற்கு காஸாவில் விமா­னங்கள் பறக்க முற்­றி­லு­மாகத் தடை இருக்கும். வடக்கு காஸாவில் ஒவ்­வொரு நாளும் ஆறு மணி நேரம் இந்தக் கட்­டுப்­பாடு அமுலில் இருக்கும்.” என்று ஹமாஸ் வெளி­யிட்ட அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

காசாவின் வான்­வெளி முழு­வதும் இஸ்­ரேலின் கட்­டுப்­பாட்டில் உள்­ளது.
ஒக்­டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்­திய தாக்­கு­தலில், 240 இஸ்­ரே­லி­யர்­களை ஹமாஸ் பணயக் கைதி­க­ளாக பிடித்து வைத்­துள்­ளது. இவர்­களில் நான்கு பண­யக்­கை­திகள் மட்­டுமே இது­வரை விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

300 பலஸ்­தீன கைதி­களின் பட்­டியல் வெளி­யீடு
ஹமா­ஸுடன் செய்து கொண்ட உடன்­பாட்­டின்­படி இஸ்ரேல் விடு­விக்கப் போகும் 300 பலஸ்­தீன சிறைக் கைதி­களின் பட்­டி­யலை இஸ்ரேல் வெளி­யிட்­டுள்­ளது.

இஸ்­ரே­லிய நீதித்­து­றையின் இணை­ய­த­ளத்தில் இந்தப் பட்­டியல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இவர்­களில் 274 பேர் ஆண்கள். பெரும்­பாலும் 17 -முத­ல்18 வய­து­டை­ய­வர்கள். அவர்கள் மீதான குற்­றச்­சாட்­டு­களும் இஸ்­ரேலின் பட்­டி­யலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எனினும் முதலில் 150 பேர் மட்­டுமே விடு­விக்­கப்­ப­டு­வார்கள் என்று ஹமாஸ் ஏற்­கனவே வெளி­யிட்ட அறிக்­கையில் இருந்து தெரி­ய­ வ­ரு­கி­றது.

கத்தார் கூறு­வ­து என்ன?
நான்கு நாட்கள் சண்டை நிறுத்த ஒப்­பந்தம் ‘போரை முடி­வுக்கு கொண்­டு­வர’ வழி­வ­குக்கும் என்று கத்தார் நம்­பு­கி­றது.

காஸாவில் சண்டை நிறுத்தம் செய்ய உத­விய அமெ­ரிக்கா மற்றும் எகிப்­துக்கு கத்தார் பிர­தமர் முக­ம்மது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி நன்றி தெரி­வித்­துள்ளார்.

இந்த ஒப்­பந்தம் “போர் மற்றும் இரத்­தக்­க­ள­ரிக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும்” என்றும் ஒரு “விரி­வான மற்றும் நிலை­யான ஒப்­பந்­தத்தை” உரு­வாக்கும் என்றும் நம்­பு­வ­தாகக் அவர் கூறி­யுள்ளார்.

இந்த ஒப்­பந்தம் “ஒரு விரி­வான, நியா­ய­மான அமைதி செயல்­மு­றைக்­கான பேச்­சு­வார்த்­தைக்கு வழி­வ­குக்கும்” என்று தான் நம்­பு­வ­தா­கவும் பிர­தமர் கூறினார்.

“கத்­தா­ருக்கு நன்றி”
இந்த உடன்­பாடு தொடர்­பாக ஹமாஸ் டெலி­கி­ராமில் ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டது. அதில் “மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் போர்­நி­றுத்த உடன்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.” என்று குறிப்­பிட்­டுள்­ளது. இந்த ஒப்­பந்­தத்­திற்கு மத்­தி­யஸ்தம் செய்த கத்தார் மற்றும் எகிப்­துக்கு ஹமாஸ் நன்றி தெரி­வித்­துள்­ளது.

பல வார பேச்­சு­வார்த்­தை­க­ளுக்குப் பிறகு, ஒக்­டோபர் 7 முதல் ஹமாஸின் பிடியில் இருக்கும் இஸ்­ரே­லிய பண­யக்­கை­திகள் தொடர்­பான ஒப்­பந்­தத்தை எட்டும் தறுவாயில் இருப்­ப­தாக இஸ்­ரேலும் ஹமாஸும் சமீ­பத்தில் கூறின.
செவ்­வாய்­க்கி­ழமை ராய்ட்­டர்­ஸிடம் பேசிய ஹமாஸ் தலைவர் இஸ்­மாயில் ஹனியா, ஹமாஸ் இஸ்­ரே­லு­ட­னான ‘போர் நிறுத்த ஒப்­பந்­தத்­திற்கு’ மிக அருகில் இருப்­ப­தாக கூறினார்.

இஸ்­ரே­லியப் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யா­குவும் விரைவில் “நல்ல செய்­தியை” பகிர்ந்து கொள்­வ­தாகக் கூறி­யி­ருந்தார்.

கடந்த ஒக்­டோபர் மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்­பினர் இஸ்­ரே­லுக்கு எதி­ராக மேற்­கொண்ட தாக்­கு­தலில் 1200இஸ்­ரே­லி­யர்கள் கொல்­லப்­பட்­டனர். சுமார் 240 பேர் ஹமாஸ் அமைப்­பி­னரால் கடத்திச் செல்­லப்­பட்டு மறைத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அப்­போது முதல் இஸ்ரேல் காஸா மீது மேற்­கொண்ட தாக்­கு­தல்­களில் சுமார் 14000பலஸ்­தீ­னர்கள் பலி­யா­கி­யுள்­ளனர். இவர்­களில் பெரும் எண்­ணிக்­கை­யா­ன­வர்கள் சிறு­வர்­களும் பெண்­க­ளு­மா­வார்கள். இந்த தர­வு­களை ஹமாஸின் கட்­டுப்­பாட்டில் உள்ள சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.
இந்­நி­லையில் நாளாந்தம் பலஸ்­தீ­னர்கள் இஸ்­ரே­லினால் பலி கொள்­ளப்­பட்டு வரும் சூழலில் இஸ்ரேல் பணயக் கைதி­களின் விடு­தலை தொடர்பில் மும்­மு­ர­மாக முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

கடந்த மாதம் நான்கு இஸ்ரேல் பண­யக்­கை­தி­களின் விடு­த­லைக்கு பேச்சுவார்த்­தை­களில் ஈடு­பட்ட கட்டார் தொடர்ந்தும் பண­யக்­கை­திகள் விடு­தலை தொடர்பில் முயற்­சித்து வரு­கி­றது.

சர்­வ­தேச செஞ்­சி­லுவை சங்­கத்தின் தலைவர் கட்­டா­ருக்கு விஜயம் செய்து பண­யக்­கை­திகள் தொடர்பில், அங்கு நிலை கொண்­டி­ருக்கும் ஹமாஸ் அர­சியல் தலை­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். நடு­நி­லை­யான மனி­தா­பி­மா­ன­மான ரீதியில் இரு­ த­ரப்­பி­னரும் இவ்­வி­வ­கா­ரத்தில் ஓர் உடன்படிக்கைக்கு வந்தால் நாம் பணயக்கைதிகளின் விடுதலைக்கு உதவுவதற்கு தயாராக உள்ளோம் என சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இவ்­ வி­வ­கா­ரத்தில் தீர்­மா­ன­மொன்று மேற்­கொள்­வதில் சிறிய தடை­களே உள்­ளன. அவற்றைப் பேச்­சு­வார்த்­தைகள் மூலம் தீர்த்துக் கொள்­ளலாம் என தான் கரு­து­வ­தாக கட்டார் பிர­தமர் ஷேக் மொஹமட் பின் அப்தூல் ரஹ்மான் அல்­தானி தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, அமெ­ரிக்­கா­வுக்­கான இஸ்­ரே­லிய தூதுவர் மைக்கல் ஹர்சொக், கணி­ச­மான எண்­ணிக்­கை­யி­லான பண­யக்­கை­தி­களை விடு­தலை செய்து கொள்­வ­தற்கு எதிர்­வரும் நாட்­களில் முடி­யு­மாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.