இலங்கையில் பள்ளிகளை பதிவு செய்வதில் சிக்கல்

கிழக்கில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் செயற்பாடு அதிருப்தி என அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டு

0 191

இலங்­கையில் பள்­ளி­வா­சல்கள் உள்­ளிட்ட மத­வ­ழி­பாட்­டுத்­த­லங்­களை பதிவு செய்­வதில் சிக்கல் நிலைமை காணப்­ப­டு­வ­தாக தெரி­வித்­துள்ள சர்­வ­தேச மத சுதந்­திரம் தொடர்­பான அமெ­ரிக்க ஆணைக்­கு­ழுவின் ஆணை­யா­ளர்கள், பதி­வு­ செய்­வதில் நிலவும் சவால்­க­ளுக்கு அர­சாங்கம் நிச்­ச­ய­மாகத் தீர்வை வழங்­க­வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

அத்­தோடு, தொல்­பொருள் திணைக்­க­ள­மா­னது நாட்டின் வட, கிழக்கு மாகா­ணங்­களில் அப்­பி­ர­தே­சங்­க­ளி­லுள்ள கட்­ட­மைப்­புக்கள் மற்றும் பௌத்த பிக்­கு­க­ளுடன் இணைந்து இந்­துக்கள் மற்றும் முஸ்­லிம்­களின் வணக்­கத்­த­லங்­களைக் கைப்­பற்­று­வ­தற்கு வசதி ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தா­கவும் அந்த ஆணை­யா­ளர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

அதே­வேளை நாட்டில் வாழும் சிறு­பான்­மை­யி­னரின் மத சுதந்­தி­ரத்தை உறு­தி­செய்யும் வகையில் அர­சாங்­க­மா­னது தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள ‘ஒடுக்­கு­முறை’ கொள்­கைகள் மற்றும் சட்­டங்­களை முற்­றாக நீக்­கவோ அல்­லது திருத்­தி­ய­மைக்­கவோ நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் எனவும் அந்த ஆணை­யா­ளர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

சர்­வ­தேச மத சுதந்­திரம் தொடர்­பான அமெ­ரிக்க ஆணைக்­கு­ழுவின் ஆணை­யா­ளர்­க­ளான ஸ்டீஃபன் ஸ்னெக் மற்றும் டேவிட் கெரி ஆகியோர் கடந்த மாதம் (ஒக்­டோபர்) இலங்­கைக்கு வரு­கை­தந்­தி­ருந்­த­துடன் கொழும்பு, திரு­கோ­ண­மலை மற்றும் யாழ்ப்­பாணம் ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு விஜயம் மேற்­கொண்டு மத சுதந்­திரம் தொடர்பில் நிலவும் கரி­ச­னைகள் பற்றி ஆராய்ந்­தனர். அது­மாத்­தி­ர­மன்றி சர்­வ­ம­தத்­த­லை­வர்கள், மனித உரி­மைகள் மற்றும் சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள், அர­சாங்­கத்தின் பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­னரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

அதன்­படி இது­கு­றித்துக் கருத்து வெளி­யிட்­டுள்ள ஆணை­யாளர் ஸ்டீஃபன் ஸ்னெக், ‘இலங்­கையில் நிலவும் மத சுதந்­திரம் சார்ந்த பிரச்­சி­னைகள் தொடர்பில் நாட்டின் அர­சாங்க அதி­கா­ரிகள், மதத்­த­லை­வர்கள், சிவில் சமூ­கப்­பி­ர­தி­நி­திகள், புத்­தி­ஜீ­விகள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­னரை சந்­தித்துக் கலந்­து­ரை­யாட முடிந்­த­மை­யி­னை­யிட்டு மகிழ்ச்­சி­ய­டை­கின்றோம்’ என்று தெரி­வித்­துள்ளார். அதே­வேளை பல்­வேறு மதங்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சமூ­கங்கள் ஒன்­றி­ணைந்து கீழ்­மட்­டத்­தி­லி­ருந்து பரஸ்­பர நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான கலந்­து­ரை­யா­டல்­களை முன்­னெ­டுத்­தா­லும்­கூட, நாட்டில் வாழும் சிறு­பான்­மை­யின இந்து, கிறிஸ்­தவ மற்றும் முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்­கான மீயுயர் மத சுதந்­தி­ரத்தை உறு­தி­செய்யும் வகையில் அர­சாங்­க­மா­னது தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள ‘ஒடுக்­கு­முறை’ கொள்­கைகள் மற்றும் சட்­டங்­களை முற்­றாக நீக்­கவோ அல்­லது திருத்­தி­ய­மைக்­கவோ நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் எனவும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

தொல்­பொருள் திணைக்­க­ள­மா­னது நாட்டின் வட, கிழக்கு மாகா­ணங்­களில் அப்­பி­ர­தே­சங்­க­ளி­லுள்ள கட்­ட­மைப்­புக்கள் மற்றும் பௌத்த பிக்­கு­க­ளுடன் இணைந்து இந்­துக்கள் மற்றும் முஸ்­லிம்­களின் வணக்­கத்­த­லங்­களைக் கைப்­பற்­று­வ­தற்கு வச­தி­யேற்­ப­டுத்­தி­வ­ரு­கின்­றது’ எனவும் சர்­வ­தேச மத சுதந்­திரம் தொடர்­பான அமெ­ரிக்க ஆணைக்­கு­ழு­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை சர்­வ­தேச மத சுதந்­திரம் தொடர்­பான அமெ­ரிக்க ஆணைக்­கு­ழுவின் மற்­று­மொரு ஆணை­யா­ள­ரான டேவிட் கெரி இது­பற்றி பின்­வ­ரு­மாறு கருத்­து­ரைத்­துள்ளார்:

‘குறிப்­பாக தேவா­ல­யங்கள் மற்றும் பள்­ளி­வா­சல்கள் உள்­ளிட்ட மத­வ­ழி­பாட்­டுத்­த­லங்­களை பதி­வு­செய்­வதில் நிலவும் சவால்­க­ளுக்கு அரசாங்கம் நிச்சயமாகத் தீர்வை வழங்கவேண்டும். வெளிப்படைத்தன்மைவாய்ந்த பதிவு செயன்முறையை உறுதிப்படுத்தக்கூடியவாறான வழிகாட்டல்களை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம். அத்தோடு மட்டுமீறிய ஒடுக்குமுறைகள், கண்காணிப்புக்கள், வன்முறைகள் மற்றும் வெறுப்புணர்வு பேச்சுக்கள் போன்றவை பற்றி முறையிடும் மத சிறுபான்மையினரைப் வலுவான பாதுகாப்பை வழங்குமாறும் கோரிக்கைவிடுக்கின்றோம்’ என்று தெரிவித்துள்ளார். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.