இஸ்லாத்தை அவமதிக்கும் பதிவு

மற்றொருவர் கைதாகி பிணை

0 229

தனது முகநூல் பதிவில் இஸ்­லாத்­தையும் அல்­லாஹ்­வையும் அவ­ம­தித்து பதி­விட்ட முதித்த ஜய­சே­கர எனும் நபர் கணினி குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­கள அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்டு நேற்று கொழும்பு பிர­தம நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டார்.

நீதிவான் சந்­தேக நபரை பிணையில் விடு­வித்­த­துடன் எதிர்­வரும் நவம்பர் 30 ஆம் திக­திக்கு வழக்­கினை ஒத்­தி­வைத்தார்.சந்­தேக நபர் 291 ஏ மற்றும் 291 பீ சட்ட பிரிவின் கீழ் குற்­றம்­பு­ரிந்­துள்­ள­தாக கணினி குற்­ற­வியல் புல­னாய்வுப் பிரி­வினர் நீதி­மன்றில் தெரி­வித்­தனர்.

சந்­தேக நபர் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி சந்­தேக நபர் மன­நிலை பாதிக்­கப்­பட்­ட­வ­ரென வைத்­திய அறிக்­கைகள் தெரி­விப்­பதால் பிணை வழங்­கு­மாறு கோரிக்கை விடுத்தார்.

முறைப்­பா­டு­களை முன்­வைத்த முஸ்லிம் தரப்பு சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் இதற்கு எதிர்ப்பு வெளி­யிட்­டனர்.

சந்­தேக நபர் மன­நிலை பாதிக்­கப்­பட்­டவர் எனில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வைத்­திய அத்­தாட்சிப் பத்­திரம் பெற்றுக் கொள்­ளப்­பட வேண்டும் என வாதிட்­டனர். அது­வரை சந்­தேக நபரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறும் அவர் சமூ­கத்­திற்கு ஆபத்­தா­னவர் என்றும் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் சுட்­டிக்­காட்­டினார். அத்­துடன் குறித்த நப­ருக்கு எதி­ராக ஐசி­சி­பிஆர் சட்­டத்தின் கீது் வழக்குப் பதிவு செய்­யு­மாறும் கோரிக்கை விடுத்தார்.

இந்­நி­லையில் அரச மருத்­துவ அதி­கா­ரி­யிடம் சந்­தேக நபரின் மன­நிலை தொடர்­பான மருத்­துவ அறிக்­கையைப் பெற்று மன்றில் சமர்ப்­பிக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டார்.

சந்­தேக நப­ருக்கு எதி­ராக முஸ்­லிம்­களும் முஸ்­லி­மல்­லா­த­வர்­களும் என மொத்தம் 14 முறைப்­பா­டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்­பு­களும் முறைப்­பா­டு­களை பதிவு செய்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.