புதிதாக ஜும்ஆ ஆரம்பிப்பது தொடர்பில் புதிய பொறிமுறை

0 204

புதி­தாக ஜும்ஆ ஆரம்பிக்கும் விடயம் தொடர்பில் புதி­ய­தொரு பொறி­மு­றை­யொன்று வகுக்­கப்­பட வேண்டும் என வக்பு சபை, முஸ்லிம் சமய விவ­கார திணைக்­களம் மற்றும் உலமா சபை என்­பன கூட்­டாக தீர்­மா­னித்­துள்­ளன.

புதி­தாக ஜுமுஆ ஆரம்­பிப்­பது தொடர்பில் மார்க்க மற்றும் நிர்­வாக ரீதி­யான அனு­ம­தியை வழங்­கு­வது பற்­றிய கலந்­தா­லோ­சனைக் கூட்டம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கேட்போர் கூடத்தில் அன்­மையில் நடை­பெற்­றது. இதில் இலங்கை வக்பு சபையின் தலைவர் எம்.எல்.எம்.எச்.எம். முஹிதீன் ஹுஸைன், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம். பைஸல் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, நிறை­வேற்றுக் குழு மற்றும் ஃபத்வா குழு உறுப்­பி­னர்கள் மற்றும் வக்பு சபை, திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்கள் உள்­ளிட்டோர் கலந்­து­கொண்­டனர்.

இக்­கூட்­டத்தில் ஜுமுஆப் ஆரம்­பிப்­பது தொடர்பில் உரிய பொறி­மு­றை­யொன்று வகுக்­கப்­பட வேண்­டு­மென ஏக­ம­ன­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அத்­துடன் புதி­தாக ஓரி­டத்தில் ஜுமுஆ ஆரம்­பிப்­ப­தற்­கான உரிய கள­ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்டு சிபா­ரிசு வழங்­கு­வ­தற்கு உத்­தி­யோ­க­பூர்வ குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டது. மேலும் குறித்த குழுவே நாட­ளா­விய ரீதியில் புதிதாக ஜுமுஆக்களை ஆரம்பிப்பது தொடர்பான வழிகாட்டல்களை வழங்கும் என தீர்மானிக்கப்பட்டது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.