BestWeb விருது வென்றது விடிவெள்ளி இணையத்தளம்

0 513

2023 ஆம் ஆண்டுக்கான BestWeb.lk விருது வழங்கும் விழாவில், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் விடிவெள்ளி (www.vidivelli.lk ) இணையத்தளம் திறமைச் சான்றிதழ் விருதை சுவீகரித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் lk domain  Registry  நிறுவனத்தினால் நடத்தப்படும் குறித்த விருதுவழங்கல் விழா நேற்று ஆகஸ்ட் 9 ஆம் திகதி மாலை ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்ச் இம்பீரியல் (Monarch Imperial) நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்றது.

15 பிரிவுகள் அடிப்படையில் இடம்பெற்ற விருது விழாவில் 2003 ஆம் ஆண்டின் சிறந்த ஊடகம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு இணையத்தள (Best Media, Sports & Entertainment Website) பிரிவில் விடிவெள்ளி (www.vidivelli.lk ) இணையத்தளம் திறமைச் சான்றிதழ் விருதை பெற்றுக்கொண்டது.

விடிவெள்ளியின் சிரேஷ்ட உதவி ஆசிரியர் எஸ்.என்.எம்.சுஹைல், சிரேஷ்ட இணையதள வடிவமைப்பாளர் எச்.பீ.டீ.பிரியதர்ஸன மற்றும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவன டிஜிடல் பிரிவின் முகாமையாளர் எஸ்.ரமேஸ்குமார் இந்த விருதை பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை, இலங்கை பத்­தி­ரிகை ஆசி­ரியர் சங்­கமும் இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னமும் இணைந்து வரு­டாந்தம் நடாத்தும் ஊடக விருது விழாவின்போது, 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளிலும் சிறந்த செய்தி இணை­யத்­த­ளத்­திற்­கான சிறப்புச் சான்­றிதழ் விருதை விடிவெள்ளி (www.vidivelli.lk ) இணையத்தளம் பெற்றுள்ளது.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் திகதி இலங்கை முஸ்­லிம்­களின் முதன்மைக் குரலாக எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விடிவெள்ளி வார பத்திரிகை கடந்த 15 வருடங்களாக இலங்கை முஸ்லிம்களின் முதன்மைக்குரலாக பிரகாசித்து வருகின்றது. இதனுடன் இணைந்ததாக 2012 ஆம் ஆண்டு விடிவெள்ளி இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 11 வருடங்களில் விடிவெள்ளி (www.vidivelli.lk ) இணையத்தளம் மூன்று தேசிய விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.