480 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உயிர்பிழைத்த அதிசயக் கதை

0 481

ஆங்­கி­லத்தில்: சஜிலா சசீந்திரன்
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்

ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் வைத்­திய நிபு­ணர்கள் எவ்­வாறு 480 கிராம் நிறை­யு­டைய குழந்தை உயிர்­பி­ழைத்­தது என்­பதன் விப­ரங்­களைப் பகிர்ந்து கொள்­கி­றார்கள்.

குழந்­தையின் தாய் டுபாய் நாட்டின் லத்­தீபா வைத்­தி­ய­சா­லைக்கு தனது நன்­றி­களைத் தெரி­வித்­துள்ளார். தானும் வீர­மிகு தனது குழந்­தையும் பிறந்த வைத்­தி­சாலை அது.

ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் தம்­ப­தி­யினர் அவர்கள். கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பெற்றோர் தின­மன்று தங்­க­ளது இதயம் நிறைந்த மகிழ்ச்­சி­யினைப் பகிர்ந்து கொண்­டார்கள்.

இதுதான் அவர்­க­ளது அதி­ச­ய­மான குழந்­தையின் கதை
ருஷானா ரபீக் (26) மற்றும் மொஹமட் முதாசிர் (33)இவர்கள் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் நீண்­ட­கா­ல­மாக வாழும் இலங்கை தம்­ப­தி­யினர். இவர்­க­ளுக்கு பிறந்­த­துதான் அந்த அதி­ச­யக்­கு­ழந்தை.

குழந்தை குறை மாதத்தில் பிறந்­த­போது அதன் நிறை 480 கிராம் கிராம் மாத்­தி­ரமே. இது அவர்­க­ளது முதல் குழந்தையும் கூட. தங்­க­ளது இந்தச் சிறிய குழந்­தையைக் காப்­பாற்­றிய டுபாய் லத்­தீபா வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய நிபு­ணர்­க­ளுக்கு தங்­க­ளது நன்­றி­களைத் தெரி­வித்­துள்­ளார்கள்.

குழந்தை பிறந்தபோது அது ‘ஒரு பெரிய மாங்­காயை விடவும் நிறையில் குறைந்­தது’ என தங்­க­ளது வார்த்­தை­களால் அவர்கள் விப­ரித்­துள்­ளார்கள்.
ருஷா­னாவின் சின்னஞ் சிறிய குழந்­தையின் பெயர் காஸியா. ருஷானா தனது சின்­னஞ்­சி­றிய வீரமிக்க குறை­மாத குழந்­தையைப்­பற்றி ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில்; ‘வித்­தி­யா­ச­மான எனது குழந்­தையை பல சவால்­க­ளி­லி­ருந்தும் காப்­பாற்­றிய டாக்டர் ஜாவித் ஹபீ­புல்லாஹ் தலை­மை­யி­லான வைத்­திய குழு­வுக்கு நாம் கட­மைப்­பட்­டுள்ளோம். சிறந்த வைத்­திய சேவை, பாது­காப்பு மூலமே இது சாத்­தி­ய­மா­னது’ என்றார்.

ருஷானா பிர­ச­வத்­திற்­காக கடந்த பெப்­ர­வரி மாதம் 23 ஆம் திகதி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

‘எனது தாய்மை சவா­லுக்­கு­ரி­யது’ என்று தெரி­விக்­கப்­பட்­டது. ருஷா­னாவின் குழந்தை பிறந்தாலும் உயிர் பிழைக்­காது என டாக்­டர்கள் எச்­ச­ரித்­தார்கள். அப்­போது அவ­ளது இதயம் சோகத்தில் மூழ்­கி­யது.

‘நான் பிர­சவ அறையில் வைக்­கப்­பட்டு ஒவ்­வொரு மணித்­தி­யா­லமும் கண்­கா­ணிக்­கப்­பட்டேன். டாக்­டர்கள் கர்ப்­பத்தில் இருந்த குழந்­தையின் இத­யத்­து­டிப்­பினை தொடர்ந்து பரி­சோ­தித்­தார்கள். இத­யத்­து­டிப்பின் வேகம் சாதா­ர­ண­மா­கவே இருந்­தது. அதா­வது எனது குழந்தை நல­மாக இருந்­த­து’­என்றாள் ருஷானா.

என்­றாலும் குழந்தை குறை­மா­தத்தில் இருந்­ததால் பிர­சவம் ஏற்­பட்டால் நிலைமை மோச­மாகும் என டாக்­டர்கள் விளக்­கி­னார்கள். சில வேளை கருச்­சி­தைவு ஏற்­படலாம் என்றும் கூறி­னார்கள். இந்த நிலை­மைக்கே நான் ஆளா­கி­யி­ருந்தேன்.

ஒரு நாளின் பின்பு குழந்­தையின் நிறை மிகவும் குறைந்­த­தாக இருக்­கலாம் என்­றார்கள். குழந்தை 500 கிராம் நிறைக்கும் குறை­வாகப் பிறந்தால் தொடர்ந்து வாழக்­கூ­டி­ய­தாக இருக்­க­மாட்­டாது என எனக்குத் தெரி­விக்­கப்­பட்­டது. அநே­க­மாக குழந்­தையை உயிர்ப்­பிக்க முடி­யாது போகும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டது .

இந்­நி­லையில் நான் மிகவும் உணர்ச்சி வசப்­பட்டேன். இது எனது முத­லா­வது குழந்தை. என்னால் எனது இந்தக் குழந்­தையை இழக்க முடி­யாது என்று டாக்­டர்­க­ளிடம் மன்­றா­டினேன். எனது குழந்­தையை காப்­பாற்­றித்­தா­ருங்கள். எனக்கு ஆபத்து ஏற்­பட்­டாலும் பர­வா­யில்லை என்றேன். என்­கிறார் ருஷானா.
சர்­வ­தேச புள்ளி விப­ரங்­க­ளின்­படி 22–23 வாரங்­க­ளுக்கு உட்­பட்டு பிறக்கும் குழந்­தை­களில் அரை­வா­சிக்கும் மேற்­பட்ட குழந்­தைகள் உயிர் பிழைப்­ப­தில்லை.

வைத்­திய குழு­வி­னரின் இத்­த­கைய கருத்­துகள் மற்றும் ஆலோ­ச­னை­க­ளுக்கு மத்­தியில் ருஷானா டாக்­டர்கள் மீது நம்­பிக்­கையும் எதிர்­பார்ப்பும் வைத்­தி­ருந்தாள். டாக்­டர்கள் தனது குழந்­தையை காப்­பாற்­று­வார்கள் என்ற நம்­பிக்கை இருந்­தது.

ருஷா­னா­வுக்கு 23 வார கர்ப்ப காலத்தின் பின்பு காஸியா பிறந்தாள். கடந்த பெப்­ர­வரி 25 ஆம் திகதி அவள் பிறக்­கும்­போது அவ­ளது நிறை 480 கிராம். இது ஒரு இயற்கை பிர­சவம். உட­ன­டி­யாக அவள் பிர­சவ அதி­தீ­விர சிகிச்சை பிரிவில் (NICU) அனு­ம­திக்­கப்­பட்டாள். குழந்தை Incubator இல் வைக்­கப்­பட்­டது.
டாக்­டர்கள் குழந்தை காஸி­யாவைக் காப்­பாற்­று­வ­தற்கு தம்­மா­லான முயற்­சி­களை மேற்­கொண்­டார்கள். அதி தீவிர சிகிச்சை பிரி­வி­லி­ருந்து­ ருஷானா மூன்று தினங்­களின் பின்பு வெளி­யே­றினார். தொடர்ந்தும் ருஷா­னாவின் நிலை­மையை டாக்­டர்­கள் கண்­கா­ணித்­தார்கள்.

‘எந்த நேரத்தில் எதுவும் நடக்­கலாம் என டாக்­டர்கள் என்­னிடம் கூறி­னார்கள். நான் ஒவ்­வொரு நாளையும் ஒவ்­வொரு இர­வையும் கண்­ணீ­ரு­டனே கழித்தேன். எனது குழந்­தையைக் காப்­பாற்­றும்­படி அல்­லாஹ்­விடம் தினமும் கையேந்­தினேன். இந்தச் சந்­தர்ப்­பத்தில் அல்­லாஹ்வின் கரு­ணையே எனது ஒரே எதிர்­பார்ப்­பாக இருந்­தது. அல்­லாஹ்­வையே நம்­பி­யி­ருந்தேன்.

அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்­கப்­பட்­டி­ருந்த காஸி­யாவின் சிறிய உடல் வாழ்­வ­தற்­காகப் போரா­டிக்­கொண்­டி­ருந்­தது. டாக்­டர்­களும், தாதி­யர்­களும் இரவு பக­லாக சிகிச்­சை­ய­ளித்துக் கொண்­டி­ருந்­தார்கள். ருஷா­னாவும் அவ­ளது கணவர் முதா­சிரும் ஒவ்­வொரு நாளும் தங்கள் சிறிய குழந்­தையை பார்க்க வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று வந்­தார்கள். தொடர்ந்து தங்கள் குழந்­தைக்­காக பிரார்த்­தித்தும் வந்­தார்கள்.

தனது குழந்­தையின் நிலை­மையை எண்­ணி­ ரு­ஷானா மன­த­ளவில் பாதிக்­கப்­பட்­ட­போ­தெல்லாம் கணக்­கா­ள­ராக தொழில் புரியும் அவ­ளது கணவர் முதாசிர் மற்றும் அவ­ளது தாய், உடன் பிறப்­புகள் அவ­ளுக்கு ஆறுதல் கூறி­னார்கள். அவள் பாதிப்­புக்கு உள்­ளா­காது ஒத்­து­ழைத்­தார்கள்.
நாட்கள் வாரங்­க­ளாகி, வாரங்கள் மாதங்­க­ளாகி கடந்து சென்­றன. அனைத்து சவால்­க­ளையும் தாண்டி ஒவ்­வொரு நாளும் அவள் தேறி வந்தாள். வளர்ச்­சி­ய­டைந்தாள்.

“டாக்­டர்கள் தாய்ப்பால் சிறி­த­ளவில் வழங்­கு­வ­தற்கு எனக்கு அனு­ம­தி­ய­ளித்­தார்கள். நான் தொடர்ச்­சி­யாக தாய்ப்­பாலை அதி தீவிர சிகிச்சை பிரி­வுக்கு வழங்கி­வந்தேன்” என்றாள் ருஷானா. அவள் ஆசி­ரிய உத­வி­யா­ள­ராவார். தனது குழந்தை அதி­தீ­விர சிகிச்சை பிரிவில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் தனது ஆசி­ரிய தொழிலில் ஈடு­பட்டார்.

காஸியா 121 நாட்கள்
வைத்­தி­ய­சா­லையில்
குழந்தை 121 நாட்கள் வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யி­ருந்து சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்­டதன் பின்பு அங்­கி­ருந்தும் வீட்­டிற்கு அனுப்பி வைக்­கப்­பட்டது. அவள் உயிர் பிழைத்­தது ஒரு அதிசய நிகழ்­வாகும். அத்­தோடு அவள் ஓர் ‘அதி­சயம்’ மற்றும் ஓர் ‘போராளி’யாவார்.

அவள் ஒரு பெரிய மாம்­ப­ழத்­தை­விட நிறை ­கு­றை­வா­னவள். நாங்கள் அவ­ளுக்கு ‘காஸியா’ என்று பெய­ரிட்டோம். அல்­லாஹ்வின் ஆசிர்­வா­தத்­துடன் மற்றும் டாக்­டர்கள், தாதி­யர்­களின் ஒத்­து­ழைப்­புடன் அவள் உயி­ருக்­காகப் போரா­டி­யதால் ‘போர்­வீரர்’ அல்­லது ‘போராளி’ என்று பெய­ரிட்டோம் என்றாள் ருஷானா.

காஸியா தற்­போது சுக­தே­கி­யாக இருக்­கிறாள். அவள் ஆரோக்­கி­ய­மான சாதா­ரண குழந்தை. இப்­போது அவ­ளது நிறை 2.3 கிலோ. தற்­போது அவள் எந்த மருந்­தையும் உட்­கொள்­வ­தில்லை. நாங்கள் அவளை வழக்­க­மான மருத்­துவ பரி­சோ­த­னைகள் மற்றும் தடுப்­பூ­சி­க­ளுக்­காக வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­கிறோம் என்­கிறாள் ருஷானா.

தாயும் மகளும் பிறந்­தது
ஒரே வைத்­தி­ய­சா­லையில்
லத்­தீபா வைத்­தி­ய­சாலை குறித்து ருஷானா மற்­று­மொரு விசேட தக­வலைப் பகிர்ந்து கொண்டார். ‘நானும் எனது சகோ­த­ரர்­களும் லத்­தீபா வைத்­தி­ய­சா­லை­யிலேயே பிறந்தோம். எனது வைத்­தி­ய­சாலை அட்டை இன்றும் என்­னி­ட­முள்­ளது. அந்த அடிப்­ப­டையில் நான் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலை விடுதி இலக்கம் மற்றும் அைற இலக்கம் குறிக்கப்பட்டுள்ளது. எனது தாயார் இதனைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.

எனது பெற்றோர் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு 45 வருடங்களுக்கு முன்பு குடியேறினார்கள். எனக்கும் எனது சகோதரர்களுக்கும் இதுவே எமது முதல் வீடு. நாங்கள் எங்கள் தாய் நாட்டுக்கு அரிதாகவே விஜயம் செய்கிறோம். இந்த நாடு ஐக்கிய அரபு இராச்சியம். எமது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் வழங்குகிறது. தற்போது இந்நாடு எனது குழந்தைக்கும் வாழ்க்கையை தந்துள்ளது என்றார் ருஷானா.

நன்றி : கல்ப் நிவ்ஸ்

  • Vidivelli

Leave A Reply

Your email address will not be published.