அரசியல் தீர்வுக்கான அதிகார பகிர்வில் முஸ்லிம் தரப்பின் வகிபாகம் என்ன?

0 241

(எஸ்.எம்.எம்.முர்ஷித், ஏ.எச்.ஏ.ஹுஸைன்)
அர­சியல் தீர்வு விட­யத்தில் தமிழ் தரப்­பு­ட­னான பேச்­சு­வர்த்­தைகள் இடம்­பெற்­று­ வ­ரு­கின்­றன. இந்­நி­லையில் அர­சியல் தீர்­வுக்­கான அதி­கார பகிர்வு பேச்­சு­வார்த்­தை­களில் முஸ்லிம் தரப்பின் வகி­பாகம் எவ்­வாறு அமைய வேண்டும் என்­ப­து ­தொ­டர்­பாக எமது அர­சியல் தலை­மைகள் ஒன்­று­பட்டு தீமா­ன­மொன்றை மேற்­கொள்ள வேண்டும் என சுற்­றா­டல்­துறை அமைச்சர் நஸீர் அஹமத் தெரி­வித்தார்.

ஓட்­ட­மா­வடி பிர­தேச செய­ல­கத்தின் புதிய கட்­டட திறப்பு விழா நேற்­று­முன்­தினம் பிர­தேச செய­லாளர் வீ.தவ­ராஜா தலை­மையில் இடம் பெற்­றது. இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக சுற்­றாடல் அமைச்சர் நஷீர் அஹமட் உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்.
முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பாய ராஜ­பக்ஸ நாட்டை ஆட்சி செய்­வதில் சிக்கல் ஏற்­பட்ட நிலையில் நாட்டை பாரம் எடுத்து ஆட்­சியை செய்­யு­மாறு தற்­போ­தைய எதிர்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தா­சாவை அழைத்து சொன்­ன­போது அவர் பின்­வாங்­கினார். இந்­நி­லையில் நாட்டில் ஒரு புரட்சி ஏற்­பட்டு விடுமோ என்ற அச்சம் எல்லோர் மத்­தி­யிலும் இருந்­தது. அந்த சந்­தர்ப்­பத்­தில்தான் இன்­றைய ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தைரி­யத்­தோடு நாட்டை பாரம் எடுத்து பொரு­ளா­தார வீழ்ச்­சியில் இருந்த நாட்டை கட்டி எழுப்பிக் கொண்டு இருக்­கின்றார்.

இந்த சந்­தர்ப்­பத்தில் தழிழ்­த­ரப்பு அர­சியல் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை இடம் பெற்று அவர்­க­ளது கோரிக்­கை­கள் கேட்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் அதி­கார பகிர்வில் முஸ்­லிம்­க­ளு­டைய பங்கு என்ன என்­கின்ற விட­யத்தை மிகவும் தெட்டத் தெளி­வாக ஆணித்­த­ர­மாக முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் எல்­லோரும் உடன்­பாட்­டுக்கு வர­வேண்­டிய தேவை இருந்­தது.
இலங்கை இந்­திய ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்ட போது இர­வோடு இர­வாக முஸ்­லிம்­க­ளு­டைய உரி­மைகள் பறிக்­கப்­பட்ட ஒரு அரச சாச­ன­மா­கத்தான் பதின்­மூன்­றா­வது திருத்தம் இருந்­தது. அதன் பின்னர் வடக்கு கிழக்கு இணைக்­கப்­பட்டு முஸ்லிம் சமு­கத்­தி­னு­டைய ஒட்டு மொத்த அர­சியல் தலை­வி­தியை மாற்­றிய ஒரு வர­லாற்­றினை நாங்கள் எப்­போதம் மறந்­து­விட முடி­யாது.

அவ்­வா­றா­ன­தொரு வர­லாறு மீண்டும் எழு­தப்­பட்டு விடக்­ கூ­டாது என்­ப­தற்­காக நாங்கள் மிகவும் தெளி­வாக இருக்­கின்றோம். இர­வோடு இர­வா­கத்தான் பதின்­மூன்­றா­வது திருத்தம் இந்­தி­யா­வி­னு­டைய அழுத்­தத்­தினால் நிறை­வேற்­றப்­பட்­டது. அப்­போது முஸ்­லிம்­களால் எதுவும் பேச­மு­டி­யாமல் இருந்­தது. அப்­போ­தி­ருந்த ஜே.ஆர் ஜெய­வர்த்­தனவிடம் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தலை­மையில் முஸ்­லிம்­க­ளது அர­சியல் நில­வரம் என்ன என்று கதைப்பதற்கு சென்ற வேளையில் உங்களுக்கு கதவு திறந்து இருக்கின்றது வெளியே போகலாம் என்று சொல்லப்பட்டது. அவ்வாறான ஒரு நிலைமைக்கு முஸ்லிம்கள் மீண்டும் தள்ளப்பட்டு விடக்கூடாது என்று நாங்கள் தெளிவாக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.