எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் பேசும் மேற்குலகம் பலஸ்தீனத்தில் இடம்பெறும் இன வெறி மோதல்கள் தொடர்பில் மௌனம் காப்பது பெரும் வேதனையாக உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பலஸ்தீனத்தில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் அதை எதிர்ப்பதில் ஒரே நிலைப்பாட்டில் காணப்படுகின்றன.
அநியாயத்தைத் தட்டிக் கேட்க வேண்டும் என்ற விடயத்திலும் அந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற விடயத்திலும் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்து குரல் கொடுப்பதை பார்க்கும் போது, இலங்கை நாடும் மக்களும் எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளார்கள் என்பதை உலகுக்கு உணர்த்துவதாக அமைகிறது.
எமது நாடு பலஸ்தீனத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நாடாக காணப்படுகிறது. அந்த வகையில் எமது ஜனாதிபதி இந்த விடயத்தில் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என நான் இந்த உயரிய சபை ஊடாக வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.- Vidivelli