பத்வா குறித்து அரசமட்ட பேச்சுவார்த்தைக்கு தயார்

ரவூப் மௌலவி தரப்பு அறிக்கை

0 504

எமது நாட்டின் சட்டத்திற்கு முரணாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 1979 ஆம் ஆண்டு வழங்கிய பத்வா தொடர்பான அரசாங்க மட்டப் பேச்சுவார்த்தைக்கு தனது தலைமையிலான காத்தான்குடி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு எப்போதும் தயாராவே இருக்கிறது என மௌலவி ஏ.அப்துர் ரவூப் மிஸ்பாஹி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,
1979 ஆம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் திட்­ட­மி­டப்­பட்டு எனது பெயர் குறிப்­பி­டப்­பட்டு வெளி­யி­டப்­பட்ட பத்­வாவில் என்­னையும், என்னால் பேசப்­பட்ட இஸ்­லா­மிய ஸுபிஸக் கருத்­துக்­களை ஏற்றுக் கொண்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஸுபி முஸ்­லிம்­க­ளையும் முர்­தத்கள் (இஸ்­லாத்தை விட்டு மதம்­மா­றி­ய­வர்கள்) என்றும் முர்­தத்கள் கொலை செய்­யப்­ப­ட­வேண்டும் எனவும் கூறப்­பட்­டுள்­ளது.

நானும் என்னால் பேசப்­பட்ட இஸ்­லா­மிய ஸுபிஸக் கருத்­துக்­களை ஏற்றுக் கொண்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஸுபி முஸ்­லிம்­களும் இஸ்­லா­மி­யர்­க­ளா­கவே வாழ்­வ­தோடு நாங்கள் எவரும் இஸ்­லாத்தை விட்டும் ஒரு­போதும் மதம்­மா­ற­வில்லை என்­பதை உறு­தி­யா­கத்­தெ­ரி­வித்துக் கொள்­கின்றேன்.

நான் இஸ்­லா­மிய ஸூபிஸ உயர்­தத்­து­வங்­க­ளையே தொடர்ச்­சி­யாக பேசி­வ­ரு­கின்றேன். நான் இஸ்­லா­மிய அடிப்­படைக் கொள்­கை­க­ளுக்கு முர­ணாக ஒரு­போதும் பேச­வில்லை. இந்­நி­லையில் என்­னையும்,என்னால் பேசப்­பட்ட இஸ்­லா­மிய ஸுபிஸக் கருத்­துக்­களை ஏற்றுக் கொண்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஸுபி முஸ்­லிம்­க­ளையும் பல­வந்­த­மாக மதம் மாற்­று­வ­தற்கு உலமா சபைக்கு அதி­காரம் அளித்­தது யார்? எமது அடிப்­படை உரி­மை­களை பறிப்­ப­தற்கு உலமா சபைக்கு என்ன அதி­காரம் இருக்­கி­றது?

ஜம்இய்யதுல் உலமாவின் பத்­வா­வினால் கடந்த 44 ஆண்­டு­க­ளாக நான் உயிர் அச்­சு­றுத்­த­லுக்கு மத்­தி­யி­லேயே இந்த நாட்டில் வாழ்­கின்றேன்.

1979 ஆம் ஆண்டு எனக்கும் ஸுபி முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ராக உலமா சபை பத்வா வழங்­கி­யி­ருக்கும் போது 1984 ஆம் ஆண்டு எகிப்­தி­லி­ருந்தும் இந்­தி­யா­வி­லி­ருந்தும் பெறப்­பட்ட பத்­வாக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே உலமா சபை பத்வா வழங்­கி­ய­தாக அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி ஜனா­தி­பதி முன்­னி­லையில் உண்­மைக்கு புறம்­பான கருத்­துக்­களை தெரி­வித்­தற்­கான காரணம் என்ன?

1984 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் எகிப்­தி­லி­ருந்தும் இந்­தி­யா­வி­லி­ருந்தும் பல சூழ்ச்­சி­களின் மூலம் உலமா சபை­யினர் தங்­க­ளுக்கு வச­தி­யாக பத்­வாக்­களைப் பெற்­றுக்­கொண்­டனர். அந்­தக்­கா­லப்­ப­கு­தியில் உலமா சபையின் சூழ்­ச்சி­க­ளுக்கு ஆத­ர­வா­கவும், எமது நாட்டின் சட்­டத்­திற்கு முர­ணா­கவும் முஸ்லிம் சமய கலாச்­சார திணைக்­களம் செயற்­பட்­டதன் பின்­னணி என்ன? எனவும் வின­வு­கிறேன்.

நான் பேசி­வரும் இஸ்­லா­மிய ஸூபிஸ உயர் ­தத்­து­வங்­களை நான் ஒரு­போதும் சுய­மாக முன்­வந்து வாபஸ் பெற­வில்லை. எமது நாட்டில் 2009 ஆம் ஆண்டு உள்­நாட்டு யுத்தம் நிறை­வு­பெ­று­வ­தற்கு முற்­பட்ட காலப்­ப­கு­தியில் பல சந்­தர்ப்­பங்­களில் எனக்கும் நான் போதித்­து­வரும் ‘வஹ்­ததுல் வுஜூத்’ -உள்­ளமை ஒன்று எல்லாம் அவனே என்ற இஸ்­லா­மிய ஸூபிஸ உயர்­தத்­து­வங்­களை ஏற்­றுக்­கொண்ட பல்­லா­யிரம் ஸூபி முஸ்­லிம்­க­ளுக்கும் பத்­வா­வினால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட கொலை முயற்­சிகள், வன்­மு­றைச்­ சம்­ப­வங்­களில் இருந்து என்­னையும் ஸூபி முஸ்லிம் சமூ­கத்­தையும் பாது­காப்­ப­தற்­காக வஹ்­ததுல் வுஜூத் தத்­து­வங்­களை பிரச்­சாரம் செய்­ய­மாட்டேன் என உலமா சபை­யிடம் தெரி­விப்­ப­தற்கு நான் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டி­ருந்தேன்.

மீண்டும் நான் குறித்த இஸ்­லா­மிய ஸுபிஸ உயர் தத்­து­வங்­களை பேச ஆரம்­பித்­த­போது அன்­றி­லி­ருந்து இன்று வரை உலமா சபை­யினர் பத்­வாவை அமுல்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

உலமா சபையின் பத்­வாவை ஏற்றுக் கொண்ட இனம்­தெ­ரி­யாத வஹ்­ஹா­பிஸ அடிப்­ப­டை­வா­திகள் என்­மீது கொலை முயற்­சித்­தாக்­குதல் மேற்­கொண்­ட­துடன் ஸூபி முஸ்­லிம்கள் மீதும் வன்­மு­றை­களை மேற்­கொண்­டனர். இவ்­வாறே இந்த விடயம் தொடர்­கி­றது.

ஈஸ்டர் தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி ஸஹ்றான் ஹாஷிமும் அவ­னது தீவி­ர­வாத குழு­வி­னரும் உலமா சபையின் பத்­வாவை ஆதா­ர­மாக வைத்­துக்­கொண்டே என்­னையும் ஸுபி முஸ்­லிம்­க­ளையும் முர்­தத்கள் என்றும் நாங்கள் கொலை செய்­யப்­ப­ட­வேண்­டி­ய­வர்கள் என்றும் தொடர்ச்­சி­யாக பிரச்­சாரம் செய்­தனர். இதனால் 1979 ஆம் ஆண்டு உலமா சபை­யினால் வழங்­கப்­பட்ட பத்வா இன்று இலங்கை நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

எனவே எமது நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் பத்வா தொடர்பாக பேச்சு நடத்த எனது தலைமையிலான அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு எப்போதும் தயாராகவே இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.